தகவல்
தகவல் யுகம் என அழைக்கப்படுகின்ற 21ம் நூற்றாண்டில் கால் நுழைத்து அரைத் தசாப்தத்தை அண்மித்துக் கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில் மிக ஆதிக்கம் செலுத்தும் ஒரேயொரு பொருள் தகவல் என்றால் மிகையாகாது. மனித சமூகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற கல்வி, அவதானிப்பு, பரிசோதனை என்பவற்றின் மூலமோ அல்லது மனிதனால் பெற்றுக்கொள்ளப்படுகின்ற அனுபவங்களின் மூலமோ தோற்றம் பெற்றுப் பதிவேடுகளின்;; வடிவத்தில் பரப்பப்படும் தகவல் பொதுவாக அறிவு எனக் குறிக்கப்படுகிறது. இத்தகைய தகவல்கள் பொதுவாக கல்வி, ஆய்வு, சமூக பொருளாதார அபிவிருத்;தி என்பவற்றின் உள்ளீடாகவும், ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் தகவல்களிலிருந்து புதுப்புதுத் தகவல்களை உருவாக்குவதற்கான உள்ளீடாகவும் பயன்படுகின்றது. எல்லையற்ற தன்மையைக் குறிக்கவென உருவாகிய பிரபஞ்சம் என்ற புவியியல் கருத்துநிலை தகவல் அறிவியல் துறைக்குள் நுழைந்து இன்று அறிவுப் பிரபஞ்சம் அல்லது தகவல் பிரபஞ்சம் என்ற பதத்தின் மூலம் அறிவின் எல்லையற்ற தன்மை விளக்கப்படுகிறது.
தகவல் பிரபஞ்சம்
தகவல் தேவைகள், தகவல் வளங்கள், தகவல் தொழினுட்பங்கள் என்ற மூன்றினதும் சங்கமம் தகவல் பிரபஞ்சம் எனக் குறிக்கப்படுகிறது. தகவல் தொழினுட்ப வழங்குனர்கள், தொடர்புத் தொழினுட்ப வழங்குனர்கள், தகவல் சேவை வழங்குனர்கள் ஒருங்கிணைந்து தகவல் பிரபஞ்சம் என்ற கருத்துநிலையின் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்திருக்கின்றனர். தகவல் கண்டுபிடிப்பு, உருவாக்கம், சேகரிப்பு போன்ற தகவல் உருவாக்கத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளும்;;, தகவல் சேமிப்பு, மீள் வழங்கல், செய்முறை, பிரதியாக்கம் போன்ற தகவல் செய்முறையுடன் தொடர்புடைய செயற்பாடுகளும், தகவல் பகிர்வு அல்லது விநியோகம், தகவல் பாவனை உபகரணங்கள் போன்ற தகவல் பயன்பாட்டுடன் தொடர்புடைய செயற்பாடுகளும் இதற்குள் உள்ளடங்குகின்றன.
தகவல் அணுகுகை
சரியான தகவலை சரியான வடிவத்தில், சரியான நேரத்தில் பெறக்கூடியதாக இருக்கும் நிலையிலேயே எந்தவொரு சமூகத்தினதும் மேம்பாடு சாத்தியமாகும். தகவல் வளங்கள், தகவல் தொடர்பாளர்கள், தகவல் பாவனையாளர்கள் என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று சரிவரப் பொருந்தும்போது தான் சரியான தகவல் சரியான நேரத்தில் சரியான நபரைச் சென்றடைதல் சாத்தியமாகிறது. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் எல்லையற்றுப் பரந்து விரிந்திருக்கும் தகவல் பிரபஞ்சத்தை அணுகுவதில் பாவனையாளர்களும் ஏன் நூலகர் போன்ற தகவல் தொடர்பாளர்களும் கூட எதிர்கொள்ளும் தடைகளைக் கண்டறிதல் மிக அவசியமானதாகும். இந்தத் தடைகளை
தகவல் உற்பத்தி சார்ந்த தடைகள்;,
தகவல் செய்முறை சார்ந்த தடைகள்,
தகவல் பாவனை சார்ந்த தடைகள் என பிரித்து ஆராய்தல் பொருத்தமானதாகும்.
தகவல் உற்பத்தி சார்ந்த தடைகள்
தொகை
கல்லில் தொடங்கி, காலப்போக்கில் களிமண், அதனைத் தொடர்ந்து ஓலைச்சுவடிகள்;, பப்பிரசுத் தாள்கள் என மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தகவல் சேமிப்பில் நிலைகொண்டிருந்த மனித சமூகம் அச்சின் கண்டுபிடிப்புடனும், தாளின் உருவாக்கத்துடனும், தகவல் உற்பத்தியில் தீவிரமாக இறங்கியது. 17ம், 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட முதலாவது கைத்தொழில் புரட்சியானது அறிவியல் தொழினுட்பத்தின் துரித அபிவிருத்திக்கு வழி சமைத்ததன் காரணமாக அடுத்து வந்த நூற்றாண்டுகளில் அறிவியல் தொழினுட்ப இலக்கியங்கள் எண்ணிறந்த அளவில் அதிகரித்ததுடன் ஆராய்ச்சியாளர், தொழினுட்பவியலாளர், விஞ்ஞானிகள் என்போரின் தொகையும் அதிகரித்தது. இவ்விரு வளர்ச்சிகளும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய பிணைப்புக் கொண்டதனால் தகவலுக்கான கேள்வியும் நிரம்பலும் பெருமளவில் அதிகரித்தது. கிறிஸ்துவின் காலத்தில் இருந்த இலக்கியங்கள் இரட்டிப்புத் தன்மையை அடைவதற்கு 1750 வருடங்கள் எடுத்தன. இது மேலும் இரட்டிப்பாவதற்கு 150 வருடங்கள் எடுத்தன. 2000ம் ஆண்டிலிருந்து இந்த இரட்டிப்புத் தன்மையானது ஒவ்வொரு 1-2 வருடங்களுக்கு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. சுருங்கக் கூறில் தகவல் வெடிப்பு அல்லது தகவல் கட்டுமீறல் ஜஐகெழசஅயவழைn நஒpடழளழைஸெ என்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தனி நபர் ஆய்வுகளிலிருந்து குழு ஆய்வுகளுக்கு மனித சமூகம் மாறியமையும் தகவல் வெடிப்புக்கு ஒரு காரணமாகும். இன்று உலகில் 12 மில்லியன் ஆய்வாளர்களால் வருடாவருடம் 2 மில்லியன் கட்டுரைகள் உருவாக்கப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. 50-60 ஆயிரம் அறிவியல் தொழினுட்ப பருவ இதழ்கள் வெளியிடப்படுகின்றன. நாளாந்தம் மூன்று பருவ இதழ்கள் புதிதாகத் தோன்றும் அதே சமயம் ஒரு பருவ இதழின் வெளியீடு நிறுத்தப்படுகிறது. வெளியீடு செய்யப்படும் இலக்கியங்களில் 50மூமானவை தேவைக்கும் மேற்பட்டதாக உள்ளது
இந்த தகவல் வெடிப்பானது தகவல் தேடுகையில் வாசகனுக்கு பின்வரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
• தொகை ரீதியான அதிகரிப்பால் தனிநபரோ ஏன் நூலகங்களோ கூட வெளியிடப்படும் அனைத்து நூல்களையும் விலை கொடுத்து வாங்க முடியாததன் காரணமாக தகவல் அணுகுகையில் இடைவெளியை உருவாக்கியுள்ளது.
• அச்சிடுதல் தொழினுட்ப வளர்ச்சி தொகை ரீதியான அதிகரிப்புக்கு வழிகோலி நூல்களைத் தேடும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது.
• ஒரு பொருட்துறை சார்ந்து எண்ணற்ற தகவல் சாதனங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக தகவல் சுமையின்;ஜஐகெழசஅயவழைn ழஎநசடழயனஸ தாக்கத்துக்கு வாசகன் உட்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இது சரியான தகவலை சரியான நேரத்தில் பெறுவதை தடை செய்கிறது.
• தகவல் தொழிற்துறையின் உருவாக்கம் காரணமாக ஏனைய பண்டங்களை விடவும் தகவல் சாதனங்களின்; விலை ஒப்பீட்டளவில் குறைந்து கொண்டு போவதும், ஓரே நூலை தரங்குறைந்த தாளில் அச்சிட்டு பெருந்தொகையில் மலிவுப்பதிப்புகளாக விற்கக்கூடிய வசதியும், படித்து முடிந்ததும் குப்பைக்கூடைக்குள் போடக்கூடியளவுக்கு உடனடித்தேவையை பூர்த்தி செய்யக்கூடிய நூல்களின் உற்பத்தியும் நூல்கள் மீது வைத்திருந்த மரியாதையைக் கணிசமானளவு குறைத்திருக்கிறது.
• நூல்கள் புனிதமானவை. எனவே நல்லதை, தேவையானதை மட்டுமே பதிந்து வைக்க வேண்டும் என்ற மனிதனின் மனப்பாங்கு மாறி இலாபம் தரும் உற்பத்திப் பொருளாக கருதும் மனப்பாங்கு உருவாகியதன் விளைவாக எதனையும் எப்படியும் அச்சிடலாம் என்ற வகையில் அதிகரித்த மலினப்பதிப்புகளின் உற்பத்தியானது சூழல் மாசடைதல் போல் தகவலிலும் மாசடைதலைஜஐகெழசஅயவழைn pழடடரவழைஸெ உருவாக்கியிருப்பதன் காரணமாக தீயவற்றுக்குள் நல்லதைத் தேடிப்பிடிக்க வேண்டிய அறிவை வாசகனிடம் கோரி நிற்கிறது.
• மனிதனின் இன்றைய ஆய்வுகள் நேற்று உண்மை என நிறுவியதை பொய்யாக்கிவிடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதனால் நூலக சாதனங்களுக்குள் உண்மையானவற்றையும் பொய்யானவற்றையும் பிரித்தறிய வேண்டிய அறிவு நூலகருக்கும் வாசகருக்கும் இன்றியமையாததாகிறது.
• தொழினுட்ப அபிவிருத்தியின் விளைவாக மிகக் குறுகிய காலத்தில் தகவல் பயன்பாடற்றதாகவும் வழக்கற்றதாகவும் மாறிக்கொண்டு வருகிறது. எடுத்துக்காட்டாக மின்னணுவியல், கணினியியல் போன்ற துறைகளில் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கிடையில் தகவலின் பெறுமதியில் வீழ்ச்சித்தன்மை நிலவுகிறது. அதேபோன்று மருத்துவத்துறையில் வருடாவருடம் புதிய பதிப்புகள் பழைய பதிப்புகளை வழக்கற்றதாக்கிக் கொண்டிருக்கின்றன.
• ஒரு விடயத்தையே திருப்பித் திருப்பி பேசும் நிலையில் தகவல் உற்பத்தி இருப்பதனால் தகவலில் தெளிவுத் தன்மை குறைவடைந்து இது வாசகனுக்கு மன ரீதியான களைப்பையும் விரக்தியையும் கொடுப்பது தவிர்க்கமுடியாததாகிறது.
வகை
அறிவுப் பிரபஞ்சமானது இயக்கரீதியாக விரிவடைந்துகொண்டு போகும் நிலையில் புதிய புதிய பொருட்துறைகளை தோற்றுவித்துக் கொண்டே போகும். இதனால் தகவல் சாதனங்களின் வளர்ச்சி தொகை ரீதியில் மட்டுமன்றி தர ரீதியாகவும் அதிகரித்;துக் கொண்டு செல்கிறது. இது தகவல் அணுகுகையில் பின்வரும் தடைகளை ஏற்படுத்துகிறது.
• மனிதனின் ஆய்வு முயற்சிகள் அறிவுப் பிரபஞ்சத்தில் புதுப்புதுத் துறைகளை தோற்றுவித்ததுமல்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற எத்தனையோ பொருட்துறைகளை ஒன்றிணைத்து எது கலை? எது அறிவியல்? என்று பிரித்தறியாதபடி புதிய பொருட்துறைகளை உருவாக்கியுள்ளது. எமது முதல் தலைமுறையினருக்கு கணினி அறிவியல் என்ற புதிய துறை இருந்ததோ உயிரியலும் தொழினுட்பவியலும் இணைந்து தோற்றம் பெற்ற உயிர்த்தொழினுட்பவியல் துறையோ தெரியாது.
• ஆய்வுத்துறைகளின் வளர்ச்சி நூல்களின் உள்ளடக்கத்திலும் பலதரப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியதன் காரணமாக அறிக்கைகள் ஆராய்ச்சி நூல்கள், நியமங்கள், காப்புரிமைகள், சிறுநூல்கள், செய்திக்கடிதங்கள் பருவ இதழ்கள் தொடர் வெளியீடுகள் போன்ற முதல் நிலைத் தகவல் வளங்களையும் இத் தகவல் வளங்களிலிருந்து தொகுக்கப்படுகின்ற பாட நூல்கள், உசாத்துணை நூல்கள் போன்ற இரண்டாம் நிலைத் தகவல் வளங்களையும், இவற்றைத் தொகுத்து தருகின்ற மூன்றாம் நிலைத் தகவல் வளங்களையும் பற்றிய அறிவு வாசகனுக்கு போதுமானளவு இல்லாத போது அது தகவல் அணுகுகையில் தடைகளை உருவாக்குகிறது.
வடிவம்
அறிவியல் தொழினுட்ப வளர்ச்சியானது நூல்களின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி உருவமைப்பிலும் கணிசமானளவு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஓலைச்சுவடிகள், படங்கள், ஓவியங்கள் போன்ற மரபு ரீதியான சாதனங்கள் , படத்துணுக்குகள் காட்சி வில்லைகள், ஒலி,ஒளிப் பதிவுகள், நுண்வடிவங்கள் போன்ற கட்புல செவிப்புல சாதனங்கள்;, ஒளிப்படங்கள், வரைபுகள், மாதிரி உருவமைப்புகள், சுவரொட்டிகள் போன்ற வரையுருவ சாதனங்களைக் கடந்து இன்று எங்கும் சீடீ எதிலும் சீடி என்ற வகையில் தகவல் உலகத்துக்குள் சீடி உலகம் ஒன்று உருப் பெற்றுள்ளது. இத்தகைய வடிவ மாற்றங்கள் வாசகனைப் பொறுத்து பின்வரும் தடைகளை உருவாக்குகின்றன.
• சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஒரு கிராமத்துக்குள்ளேயே நவீன நூலுரவற்ற சாதனங்களின் பயன்பாட்டில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
• உபகரணப் பாவனையுள்ள தகவல் சாதனங்கள் இரட்டிப்பு விலையைக் கொண்டிருப்பதனால் இவற்றின் அணுகுகை மிகச் சுலபமானதல்ல.
• இத்தகைய சாதனங்கள் பாவனையாளனைப் பொறுத்து பாவனை தொடர்பான மேலதிக அறிவை வேண்டி நிற்பதும் அணுகுகைக்கு தடையாக அமைந்துவிடுகிறது.
செய்முறை சார்ந்த தடைகள்
நூலக செயற்பாடுகள்
குறிப்பிட்ட நூலைத் தெரிவு செய்வது முதற் கொண்டு அதை நூலகத்திற்கு பெற்று ஒழுங்குபடுத்தி இறாக்கைகளுக்கு கொண்டு செல்வது வரையான செயற்பாடுகள் இவற்றுக்குள் அடங்கும்.
• பெரும்பாலான நூலகங்களில் இன்று பகுப்பாக்கத் திட்டத்தின் பழைய பதிப்புகளே பின்பற்றப்படுகின்றது. என்பதால் பகுப்பாக்க ஒழுங்குக்கு ஓரளவு தன்னைப் பரிச்சியப்படுத்திக் கொண்ட வாசகனுக்கும் குறிப்பிட்ட பொருட்துறையானது அவன் வாழும் பிரதேசத்துக்குள்ளேயே ஒரு நூலகத்தில் ஒரு வகுப்பெண்ணிலும் இன்னொரு நூலகத்தில் வேறொரு வகுப்பெண்ணிலும் இருக்கும் போது குழம்புவது தவிர்க்க முடியாததாகின்றது. பெண்ணிலைவாதம் என்ற பொருட்துறை சார்ந்த நூல்கள் தூயி தசம பகுப்புத் திட்டத்தின் 21ம் பதிப்பைப் பின்பற்றும் யாழ் பொது நூலகத்தில் 305.4 என்ற வகுப்பெண்ணிலும் அதே திட்டத்தின் 16வது பதிப்பில் பகுப்பாக்கம் செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் 396 என்ற வகுப்பெண்ணிலும் இருப்பது இதற்கொரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
• நூல்களை அதன் ஆசிரியரின் கீழ் அல்லது தலைப்பின் கீழ் அதுவுமன்றி ஆக்கத்தை உருவாக்கிய நிறுவனத்தின் கீழ் பதிவதற்குப் பின்பற்றப்படும் பட்டியலாக்க விதிமுறைகள் வாசகனுக்கு புதிரையும் குழப்பத்தையும் ஏற்படுத்துபவை. எடுத்துக்காட்டாக திருக்குறளை குறள் என்ற பிரபல்யமான பெயரில் பதிந்து அதன் கீழ் அவரது ஆக்கங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தினால் வாசகன் பட்டியலாக்க அறிவுடன் நூலகத்துக்கு வருவான் என நினைப்பது தவறானது. திருக்குறள் என்ற பெயரில் அதுவுமன்றி திருக்குறளை இயற்றியவராகக் கருதப்படும் திருவள்ளுவர் என்ற பெயரில் அவரது ஆக்கங்களைத் தேடும் வாசகனுக்கு இச் செய்முறை குழப்பத்தையே ஏற்படுத்தும். ஒவ்வொரு நூலகத்தைப் பொறுத்தும் பட்டியலாளர் எடுக்கும் முடிவுகள் வாசகனுக்கு தெரிவதற்கு நியாயமில்லை. அதேபோன்று பார்க்க, மேலும் பார்க்க குறிப்புகள் நூலகர்களுக்கு தகவலை ஒழுங்குபடுத்தி வைக்க உதவுமேயன்றி வாசகனுக்கு குழப்பத்தைத் தரும் ஒன்று.
• வாசகனுக்கு குழப்பத்தைத் தரும் இன்னோர் அம்சம் நூல்களில் நாம் பொறித்திருக்கும் அழைப்பு எண்கள். இந்த அழைப்பு எண்களின் தொடர்புத் தன்மையை விளங்கப்படுத்தி வாசகனுக்குத் தேவைப்படும் நூல்களை எடுப்பதற்கு அவனுக்கு தனிப்பட்ட ரீதியிலான உதவி அவசியமாகும்.
• நூல்களைப் போலன்றி சீடி போன்ற இலத்திரனியல் தகவல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு வாசகனுக்கு உபகரணப் பாவனை தொடர்பான மேலதிக அறிவு தேவைப்படுகிறது. கணினிமயமாக்கம் அத்தகைய அறிவு இல்லாத வாசகனுக்கு தகவல் அணுகுகையில் தடையை ஏற்படுத்தும்.
• நூல்களை மூடிய இறாக்கைகளில் பூட்டி வைத்தல், நூல்களை ஒழுங்கான முறையில் இறாக்கைப்படுத்தாமல் விடுதல், சரியான வழிகாட்டல் அட்டைகள் இன்றி ஒரே பொருட்துறை சார்ந்த நூல்களை வௌ;வேறு பிரிவுகளில் ஒழுங்குபடுத்தி வைத்தல், நூல்களை இரவல் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் பாதிப்படைந்த நூல்களை உரிய நேரத்தில் கட்டாமல் விடுதல், இறுக்கமான நூலக விதிமுறைகள் போன்ற செயற்பாடுகள் தகவல் அணுகுகையில் தடைகளை உருவாக்குகின்றன.
பயன்பாடு சார்ந்த தடைகள்
நூல்களின் செயற்கைத் தன்மை
சாதாரண நூல்களை எடுத்துக் கொண்டால் ஒரே பொருட்துறை சார்ந்து ஒரே மாதிரியான பல நூல்கள் இருக்கும்போது அதில் பொருத்தமானதையும் சரியானதையும் தேர்ந்தெடுக்கும் வல்லமை எல்லா வாசகருக்கும் இல்லை. அதே போன்று அகராதிகள் கலைக்களஞ்சியங்கள்,ஆண்டு நூல்கள் போன்ற உசாத்துணை சாதனங்களோ அல்லது நுண்வடிவங்கள் படத்துணுக்குகள் சீடிரோம்கள் போன்ற உபகரணப் பாவனையுள்ள சாதனங்களோ செயற்கைத் தன்மை வாய்ந்தவை. இவற்றிலிருந்து வாசகனுக்குத் தேவைப்படும் தகவலைத் தேடிப் பொறுக்கியெடுத்தல் கடினமான அறிவுசார் பணியாகும். ஒருவரின் தனிப்பட்ட உதவியின்றி இவற்றைப் பயன்படுத்தல் மிகவும் சிரமமானது.
சமூகச் சூழல்
வளர்ச்சியடைந்த சமூகங்கள் தகவல் வெடிப்பால் திணறிக் கொண்டிருக்கும் அதேசமயம் பின்தங்கிய சமூகங்கள் தகவல் பிரபஞ்சத்துக்குள் நுழையும் வாய்ப்பற்று இருக்கின்றன என்பதற்கு எமது சமூகமே சிறந்த எடுத்துக் காட்டாக இருப்பதைக் காணலாம். எமது பிரதேசத்தின் பெரும்பாலான பொது நூலகங்கள் வாசகனுக்குப் பொருத்தமற்ற நூல்களும், பொழுதுபோக்குக்குகந்த மலிவுப்பதிப்புகளுமாக சிறிய மண்டபத்தில் குறைந்த தொகை நூல்களுடன் சேவையாற்றுகின்றன. பெரும்பாலான பாடசாலை நூலகங்கள் வகுப்பறை நூலகமாக தமது பணியை சுருக்கியிருக்கும் அதேசமயம் பின் தங்கிய கிராமப் புறங்களில் நூலகம் என்;பதன் கருத்துநிலையே தோற்றம் பெறவில்லை. ஆராய்ச்சியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் கடமைப்பாட்டைக் கொண்ட யாழ் பல்கலைக்கழக நூலகமோ கடந்த வருடம் தான் தகவல் தொழினுட்ப உலகுக்குள் மெல்ல நுழைந்து இற்றை வரை கிட்டத்தட்ட 2000 நூல்களை மட்டும் கணினிக்குள் பதிவு செய்திருக்கிறது. இணையச் சேவைக்கான வாய்ப்பு எதிர்வு கூட முடியாத ஒன்றாகவே உள்ளது. யாழ் பொதுசன நூலகமும் கூட புதிதாகப் புனரமைக்கப்பட்டு இணையத் தள வசதிகளையும் கொண்டிருப்பினும் எரியூட்டப்படும் போது இருந்த உலகத் தர நிலையை மீண்டும் பெறுவதற்கான சாத்தியப்பாடு இன்றி தொகை ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் வாசகனுக்குரிய நூலை மட்டுப்படுத்தப்பட்ட தகவல் வளங்களுக்குள் தேடிக்கண்டுபிடிப்பது சிரமமானதொன்றாகவே உள்ளது.
வாசிப்புச் சூழல்
பொதுவாகவே வாசிப்புப் பழக்கம் குறைந்த சமூகமாகவே எமது சமூகம் இனங்காணப்பட்டிருக்கிறது. வாசிப்புப் பழக்கம் சிறுவயதிலிருந்தே ஏற்படுத்தப்படவேண்டியதொன்று. ஆனால் அதற்கான சிறு வாய்ப்புத் தன்னும் எமது சமூகத்தில் இல்லை. பாடவிதானத்தில் மட்டும் கவனம் செலுத்தும் கல்வி முறையும், பாடவிதானத்துடன் மட்டும் தமது சேவையை மட்டுப்படுத்திவிடும் பாடசாலை நூலகங்களும் ஆரம்ப காலத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச வாசிப்புப் பழக்கத்தையும் இல்லாமல் ஆக்குகின்றன. இதனால் நூலகங்களில் இருக்கும் பயனுள்;ள நூல்கள் கூட தமக்குரிய வாசகனின்றித் தேடுவாரற்றுக் கிடக்கின்றன.
மொழி
ஆங்கில மொழி இன்றும் மேலாதிக்கம் செலுத்துவதும் பெரும்பாலான தரவுத் தளங்கள் ஆங்கில மொழியை மையமாகக் கொண்டிருப்பதும் தாய்மொழிக் கல்வியில் தங்கியுள்ள வாசகனது தகவல் அணுகுகையை மட்டுப்படுத்துகின்றன. வேற்று மொழியில் பரிச்சியமின்மை தகவல் தேடும் ஆர்வத்தில் விரக்தி நிலையைத் தோற்றுவிப்பது மட்டுமன்றி தெளிவற்ற தன்மையையும் உருவாக்கும். கணினி யுகத்தில் மொழித் தடையானது மனிதனுக்கும் இயந்திரத்துக்குமிடையில், இயந்திரத்துக்கும் இயந்திரத்துக்குமிடையில், மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில், இயந்திரத்துக்கும் மனிதனுக்குமிடையில,; பொருத்தப்பாடின்மையையும் முரண்பாட்டையும்,; உருவாக்கும். இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் சொல்லலங்காரங்கள் கலைச்சொற்கள் போன்றன தகவலை விளங்கிக் கொள்வதில் இடர்ப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.
வாசகனின் தன்மை
வாசகனின் மனப்பாங்கு, எதிர்பார்ப்புகள், அறியாமை, அச்சம், ஒத்துழையாமை, தகவல் தேடும் பண்பு மொழியாற்றல், பொருட்துறை சார்ந்த அறிவு, நவீன சாதனங்களின் பாவனை போன்றன தகவல் அணுகுகையில் தடைகளை உருவாக்குகின்றன.
நூலக அலுவலர்களது நடத்தை
வாசகனையும் நூல்களையும் பொருத்தமான நேரத்தில் இணைத்துவிடும் பெரும்பொறுப்பு இவர்களைச் சார்ந்தது. இதனைச் சரிவர நிறைவேற்றுவதற்கு இருவரையும் பற்றிய பூரண அறிவு இவர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். நூலகம் பற்றிய போதிய பயிற்சியின்மை, நூலக உணர்வு நூல் உணர்வு என்பன சரிவர அமையாமை போன்றவற்றால் இன்;றைய தகவல் யுகத்திலும் கூட எமது சமூகத்தில் நூலகக் காப்பாளர்களாகவே இவர்களில் பெரும்பாலானோர் இயங்குகின்றனர். எனவே தகவல் பிரபஞ்சத்துக்குள் வழிகாட்டப்படும் வாய்ப்பை வாசகன் இழந்து விடுவது தவிர்க்க முடியாததாகின்றது.
முடிவுரை
தகவல் சமூகத்தில் வாழும் ஒவ்வொரு தனிநபரும் தாம் பெறும் அறிவும் திறனும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்குப் போதுமானதல்ல என்பதைக் கண்டுணரத் தொடங்கிவிட்டனர். புதிய அறிவையும் திறனையும் பெறும் தேவை ஒவ்வொருவருக்கும் உண்டு என்பது தெட்டத் தெளிவாக இருப்பதனால் வாழ்க்கை முழுவதும் கற்றலின் முக்கியத்துவம் பற்றிய அறிவு தகவல் சமூகத்தில் வளர்ந்து வருகிறது. தாம் விரும்பியவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு தகவல் அவசியம் என்பதை மனித சமூகம் நம்பத் தொடங்கியிருப்பதுடன் தகவலை அடிப்படையாகக் கொண்ட சுய கற்றலிலும் மக்கள் ஈடுபடத் தொடங்கி விட்டனர். இந் நிலையில் காப்பாளர்கள் என்ற நிலையிலிருந்து தாமாகவோ அல்லது கட்டாயமாகவோ விலகி தகவல் பிரபஞ்சத்துக்கு வழிகாட்டும் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைக்கு நூலகர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றனர்
உசாத்துணை நூல்கள்
- 1. Cabeceiras, James. The multimedia Library: material selection and use.- New york:Academic press,1992.
- . Gopinath,M.A. Current trends in Information sources and communication media/by.- DRTC Annual seminar-15.Bangalore:DRTC,1984.
- Weisman,Herman M. Information systems services and centers.- New york:Becker and Hayes,1972.
No comments:
Post a Comment