எனது நோக்கில்.......

அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.

இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

13-09-2014


Saturday, September 13, 2014

ஈழத் தமிழ்ச் சமூகத்தின் தகவல் அணுகுகை

தகவலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் தகவல் அணுகுகையும்

( தகவல் என்ற கருத்துநிலையும் தகவலை அணுகுதல் தொடர்பான சிந்தனைகளும் மனிதனுக்கு மனிதன் சமூகத்துக்குச் சமூகம் வேறுபட்டது. தகவல் யுகமொன்றில் கால் பதித்து கிட்டத்தட்ட கால் நூற்றாணடைக் கடந்து விட்ட ஒரு நிலையில் தகவல், தகவலை அணுகுதல் என்ற இரு கருத்துநிலைகளும் தமக்குள் ஏற்கனவே நிலைகொண்டிருக்கும் கருத்துக்களைச் செப்பனிடுவதும் புதிய கருத்துக்களை உள்வாங்குவதும் இயல்பானது. கல்வி சார் முன்னேற்றத்தில் தமக்கெனச்; சில தனித்துவப் பண்புகளைக் கொண்டது தழிழ்ச் சமூகம்.. ஈழத்தமிழ்ச் சமூகம் என்பது படித்த சமூகம் என்ற பொதுக் கருத்துநிலை உலகளாவிய ரீதியில் வியாபித்து இருக்கும் நிலையில் இச் சமூகத்தின் தகவல் தொடர்பான கருத்துநிலை, தகவல் அணுகுகையின் பண்புகள், தகவலை அணுகுவதில் அவர்களுடன் இணைந்திருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் கலாசார அம்சங்கள் என்பவை தொடர்பாக இங்கு ஆராயப்படுகின்றது)

0 தகவல் சமூகம்
இன்று நாம் வாழும் சமூகம் தகவல் சமூகம் எனப்படுகின்றது. ஆதிப் பொதுவுடமைச் சமூகமாக வளர்ச்சியுற்றிருந்த மனிதனது குழு வாழ்க்கையானது விவசாயத்தை முதன்மையாகவும் நிலத்தைப் பிரதான மூல வளமாகவும் கொண்ட நிலவுடமைச் சமூகம் ஒன்றையும், கைத்தொழிலை முதன்மையாகவும் இயந்திரங்களைப் பிரதான மூலவளமாகவும் கொண்ட கைத்தொழில் சமூகம் ஒன்றையும், ஆய்வு நடவடிக்கைகளை முதன்மையாகவும் அறிவைப் பிரதான மூல வளமாகவும் கொண்ட கைத்தொழிலுக்குப் பிந்திய சமூகம் ஒன்றையும் கடந்து தகவல் தொழிற்துறையை முதன்மையாகக் கொண்டு,  முழுக்க முழுக்க தகவல் என்ற மூலவளத்தைச் சுற்றியே பின்னப்பட்ட தகவல் சமூகம் ஒன்றில் நடைபயிலுகிறது. கணிணித் தொழினுட்பம், தொலைதொடர்புத் தொழினுட்பம், படவரைகலைத் தொழினுட்பம் போன்ற துறைகளில் ஏற்பட்ட புரட்சியுடன் இணைந்து 20ம் நூற்றாண்டின் பின்னரைப்பாதியில் உருவாகிய சமூகம் ஒன்று தகவல் சமூகம் என அழைக்கப்படுவதை அபிவிருத்தியடைந்த நாடுகளில் தெளிவாக பார்க்கக்கூடியதாக உள்ளது. 19ம் நூற்றாண்டு கைத்தொழில் யுகம் எனவும் 20ம் நூற்றாண்டு இலத்திரனியல் யுகம் எனவும் அழைக்கப்பட்டது போன்று 21ம் நூற்றாண்டு தகவல் யுகமாகப் பரிணமித்திருக்கிறது.

கைத்தொழிற் புரட்சிக்கு அடுத்து உலகம் சந்திக்கும் அடுத்த பெரும் புரட்சி தகவற்; புரட்சியாகும்.  தகவல் புரட்சியின் வேர் கணினியே. 1990களின் ஆரம்பத்திற்; தொடங்கிய தகவல் யுகத்தின் வீச்சானது உலகின் மூலைமுடுக்கெல்லாம் போய்ச் சேர்ந்து விட்டது. தகவலால் ஆளப்படும் உலகில் பெருக்கெடுத்து ஓடும் தகவல் பாய்ச்சலை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கவேண்டிய தேவை தகவல் தொழினுட்பத்தின் தோற்றத்துக்கு மூலகாரணமாகியது. தகவற்; புரட்சியின் பிரதான பலாபலனே தகவற் சமூகமாகும். 1950களில் தோற்றம் பெற்ற இக் கருத்துநிலையின் சொந்தக்காரர் குசவைண ஆயஉhடரி என்ற பொருளியல் அறிஞரே. இவரது கருத்துப்படி கல்வி, ஆய்வு அபிவிருத்திகள், தொடர்பு ஊடகங்கள், தகவல் இயந்திரங்கள், தகவல் சேவைகள் என்ற ஐந்து துறைகளையும் உள்ளடக்கிய தகவல் தொழிற்துறையானது உழைப்புச் சக்தியை விட அதியுயர் மொத்தத் தேசிய உற்பத்தியை வழங்கும் துறையாக மாறியிருக்கிறது.

0.1 தகவற் தொழிற்துறை
இன்றைய பொருளாதாரத்திற்; புதிய துறையாகத் தோற்றம் பெற்றிருக்கின்ற தகவல் துறையின் மிக முக்கிய உள்ளீடாகக் கருதப்படுவது தகவலாகும். விசேட பாவனையாளருக்குச் சேவை செய்யும் நோக்குடன் தகவலில் தேர்ச்சி பெற்றோர், தகவல் அறிவியலாளர், தகவல் தொடர்பாளர் என்போரை உள்ளடக்கிய தகவற் தொழிற்றுறை ஒன்றின் தோற்றமும் தகவல் யுகத்தின் தோற்றப்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தகவல் தொழிற்றுறையின் மூலக் கூறுகளாகப் பின்வரும் அம்சங்களைக் கொள்ள முடியும். ஜருnவைநன ளவயவநளஇ1973ஸ
•    தகவற் கண்டுபிடிப்பு, உருவாக்கம், சேகரிப்பு
அறிவியலாளர், புலமையாளர், கலைஞர், எழுத்தாளர், தரவு சேகரிப்பாளர் போன்றோரின் பணிகளை இது உள்ளடக்கும்
•    தகவல் சேமிப்பு, மீள் வழங்கல், செய்முறை, பிரதியாக்கம்
வெளியீட்டுத் தொழிற்றுறை, திரைப்படத் தொலைக்காட்சித் தொழிற்றுறை, தரவுச் செய்முறை அமைப்புகள், தகவல் அமைப்புகளும் அதனுடன் தொடர்புடைய சொல்வடைவாக்க சாராம்சப்படுத்தல் சேவைகளும், ஒலி, ஒளிப்பதிவுச் செய்முறை, கணக்காய்வுப் பணிகள,; பொழுது போக்குப் பணிகள் என்பவற்றை இது உள்ளடக்கும்.
•    தகவல் பகிர்வு அல்லது விநியோகம்.
ஒலிபரப்பு வலையமைப்பு, செய்தித்தாள்கள,; நூல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றின் சுழற்சி, திரைப்பட விநியோகம், தொடர்பு, தபால், தொலைத் தந்தி, தொலைபேசிச் சேவைகள் என்பவற்றை இது உள்ளடக்கும்.
•    தொழினுட்ப உதிரிப்பாகங்கள் விநியோகம்.
தகவல் தொழிற்றுறைக்குத் தேவையான கணினிகள், தொலைத் தொடர்பு உபகரணங்கள், காகிதாதிகள், இலத்திரனியல் பாகங்கள், மொழிபெயர்ப்பு உபகரணங்கள், ஒளிப்படக் கருவிகள், ஒளி எறி கருவிகள், திரைப்பட சாதனங்கள் என்பவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை இது உள்ளடக்கும்.
•    தகவல் சந்தை
கல்வி, போக்குவரத்து, வர்ததகம், தொழிற்றுறை, சுகாதாரம், சனத் தொகை, பொதுசனப்பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, போன்ற நிறுவனங்களையும், தனிநபர்களது அடிப்படைச் செயற்பாடுகளுக்கு உதவும் தகவல் பாகங்களை பயன்படுத்தும் நிறுவனங்களையும் இது உள்ளடக்கும்.

1. தகவல்
இன்றைய உலகில் மேலாதிக்கம் செய்யும்  கருத்துநிலை தகவல். தங்குதடையற்றுப் பொங்கிப் பெருகி எங்கும் வியாபித்து நிற்கும் தகவல் வெள்ளத்துள் மனித சமூகம் சிக்குப்பட்டிருக்கிறது. புலக்காட்சியின் ஆற்றல் மூலம் ஏதாவது ஒன்றைப் பற்றியோ அல்லது  ஒவ்வொன்றையும் பற்றியோ கருக்கொள்ளும் அறிவாதார அனுபவங்கள்; (கயஉவள)  கருத்துள்ளது தானா என ஆராய்வதற்கிடையிலேயே அது சேகரிக்கப்பட்டு, எங்கும் பரப்பப்பட்டு, மற்றவர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டு, சேமிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டு விடுகின்றது என்ற டானியல் பூஸ்ரினின் கருத்து கவனத்தில் கொள்ள வேண்டியதொன்று.ஜடீழழளவinஇ1979ஸ
பரந்த ரீதியில் நோக்கின் எந்தவொரு அனுபவத்திற்;கும் புதிய அர்த்தம் சேர்ப்பது அல்லது நிகழ்வு, வாழ்வு, அனுபவம் என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவது தகவல் எனப்படுகின்றது. சூழலுடன் தொடர்பு கொள்ள, சூழலைச் சரி செய்து கொள்ள,  சூழலை உருவாக்கத் தகவல் மிக அவசியமானது. நிகழ்வுகள், அனுபவங்கள், மக்கள், இடங்கள் போன்ற அனைத்துமே தகவலை வழங்குகின்றன. பார்வை, ஒலி, தேடல், சுவை, மணம் என்பன அறிவுச் சுரங்கத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பார்ப்பதற்கு வழிகாட்டுகின்றன. அனுபவங்களை அவதானிக்க, கற்றுக்கொள்ள, உய்த்துணர ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கும் ஆற்றல்களும் அறிவும் பலதரப்படுவது போன்று தகவலும் பரந்து பட்டது. எல்லா மனித சமூகங்களிலும் தகவல் முக்கிய பங்கை ஆற்றுவது மட்டுமன்றி அண்மைக் காலங்களில் அது மிக முக்கிய பண்டமாகவும் மாறி விட்டது. தொழினுட்ப பொருளாதார மாற்றங்கள் தகவல் சேகரிப்பு, சேமிப்பு, செய்முறை, தொடர்பு போன்றவற்றில் துரித மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன.
 தகவல் என்ற கருத்துநிலை மனிதருக்கு மனிதர் வேறுபட்ட பொருள் கொண்டது. அவதானிப்பினூடாக மனித மூளையில் சேமிக்கப்படும் அனுபவங்கள், தொடர்பு சாதனங்களினூடாகக் குறியீடுகளின் வடிவில் அனுப்பப்படும் புள்ளிவிபர அம்சங்கள், பதியப்பட்ட விளக்க விபரங்கள், ஒரு பாடநூலின் உள்ளடக்கம்-- என தகவல் என்ற சொற்பதம் தொடர்பாக வௌ;வேறுபட்ட கருத்துநிலை மக்களிடையே உண்டு. சொற்களுக்குப் பொருள் தரும் பணியைத் தனித்து மேற்கொள்ளும் அகராதிகள் கூட இது தொடர்பாக ஒரே மாதிரியான வரைவிலக்கணத்தைத் தரவில்லை.
 சிலருக்கு தம் கண் முன்னே காணும் நிகழ்வுகள் தகவலாகலாம். சிலரைப் பொறுத்து இரு மனிதருக்கிடையில் நடைபெறும் அர்த்தமுள்ள தொடர்பாடல் தகவலாகலாம். ஆய்வு முயற்சிகளை மேற் கொள்ளும் ஒருவருக்கு தாம் சேகரிக்கும் புள்ளிவிபரங்கள் தகவலாகலாம்.. சிலருக்கு அன்றாடம் படிக்கும் செய்தித்தாள் மட்டும் தகவலாகலாம். வேறு சிலருக்குப் படிக்கும் புத்தகங்கள் தகவலாகலாம். சிலருக்குப் தாம் படித்த நூலிலிருந்து தாம் படித்தவற்றை வைத்துக் கொண்டு தமது மனதில் புதிதாகத் தோன்றும் கருத்துரு தகவலாகலாம். அதேபோன்று ஒருவருக்குத் தரவாவது இன்னொருவருக்குத் தகவலாகவோ, அறிவாகவோ அல்லது வெறும் நிகழ்வாகவோகூடத் தென்படலாம்.
துறை சார்ந்து நோக்கும் போதும் கூட தகவல் சமூகம் என்ற துறை தகவலைத் தொழினுட்பத்துடன் தொடர்பு படுத்தித் தகவலைத் தரவாக அல்லது தகவல் பரிமாற்றத்துக்கான துணைக் கருவியாக நோக்குகிறது. பொருளாதாரத் துறை தகவலை ஒரு பண்டமாக, உற்பத்திக் காரணியாக, ஒரு மூல வளமாகக் கருதுகின்றது. சமூக அறிவியல் துறை, மனிதப் பண்பியல் துறை போன்றன தகவலை தனித்துவம் வாய்ந்த தரவாக அல்லது செய்திக்குறிப்பாகப் பார்க்கின்றன. நூலக தகவல் விஞ்ஞானத் துறையானது வாசகரின் பயனபாட்டு நோக்கில் அறிவின் பிரதிபலிப்புகளாகத் தகவலைப் பார்க்கிறது. பொதுசனத் தொடர்புத் துறையானது தகவலை ஒரு பண்டமாகப் பார்க்கிறது. இத்தனை பார்வைகளுக்குள்ளும் ஒரு பொதுப் பார்வையை உருவாக்க முடிந்தால் அது தகவல் என்ற கருத்துநிலைக்கு மட்டுமல்ல 'ஒரு சொல்லின் பொருள் எங்கே மிக இறுக்கமாக வரையறைப்படுத்தப்பட முடிகின்றதோ அங்கு அறிவியல் தொடங்குகின்றது' என தகவல் சமூகத்தின் தோற்றத்துக்கும் முன்னரேயே தகவலுக்கான அறிவியல் கொள்கையை வடிவமைப்பது பற்றிய தேடலை மேற்கொண்ட பிறிலோயினின் கூற்றுக்கும்;.ஜடீசடைடழரinஇ 1956ஸ 'தகவல் அறிவியல் என்பது ஒரு அறிவியலாகப் பார்க்கப்பட வேண்டுமாயின் தகவல் அறிவியல் முழுவதையும் பரீட்சித்து மதிப்பிடக் கூடிய வகையில் தகவலுக்கான அறிவியல் கோட்பாடு ஒன்றை அது உருவாக்க வேண்டும்' என்ற டெஸ்கியின் கருத்துக்கும்ஜவுநளமநலஇ1989ஸ ஒரு முழுமையைத் தரும்.

1.1 வரைவிலக்கணங்கள்
அடுத்தவர்களுடன் தொடர்பு கொள்வதனூடாகவோ அல்லது பரிசோதனை, படிப்பு, அறிவுறுத்தல் என்பவற்றினூடாகவோ பெறப்படும் அறிவும், நுண்ணறிவு ,செய்தி என்ற வடிவில் பெறப்படும் குறிப்பிட்ட நிகழ்வு அல்லது நிலைமைகள் தொடர்பான அறிவும் தொடர்பாடலுக்குத் தயார்நிலையில் உள்ள நிகழ்வுகளும் அதன் வடிவங்களும் தகவல் என்கிறது 1971ம் ஆண்டின் வெப்ஸ்ரர் அகராதி ஜறுநடிளவநசஇ1971ஸ இது தகவலை அறிவாகப் பார்க்கிறது. ஒக்ஸ்போர்ட் அகராதியின் வௌ;வேறு பதிப்புகள் பின்வரும் மூன்று வகையில் தகவலை வரையறைப்படுத்துகின்றன.ஷஷஒரு பொருளைப்பற்றியோ அல்லது ஒரு நபரைப்பற்றியோ சொல்லப்படுகின்ற, கேட்கப்படுகின்ற, கண்டுபிடிக்கப்படுகின்ற தரவுகள் தான் தகவல்ஷஷ ஜழுஒகழசனஇ1995ஸ ஷஷகுறிப்பிட்ட சில விளக்க விபரங்கள் அல்லது விடயம் அல்லது நிகழ்வு சம்பந்தமாகத் தொடர்புபடுத்தப்படுகின்ற அறிவே தகவல்ஷஷ. ||ஆய்வின் மூலம் கற்றதன் விளைவாக வழங்கப்படுகின்ற அல்லது அறிந்து கொள்ளப்படுகின்ற உண்மைகள் அல்லது அறிவே தகவல்ஷஷ .பல்வேறுபட்ட காலப்பகுதியில் வெளியான இப்பதிப்புகளின் படி தகவல் என்பது பயன்படுத்துபவரின் நோக்கத்துக்கமையப் பொருள் கொள்ளக் கூடியது.
ஷஷதொடர்பு கொள்ளலுக்கு ஏற்ற வகையில் தாளில் அல்லது வேறு ஏதாவது ஊடகம் ஒன்றில் புரிந்து கொள்ளக்கூடிய வடிவில் பதியப்பட்டிருக்கும் தரவுத்தொகுதியே தகவல்|| என்கிறது தகவல் விஞ்ஞானத்துக்குரிய சிறப்பு அகராதி. ஜர்யசசழன'ளஇ1987ஸ  ஷஷசெய்முறைக்குட்படுத்தப்பட்ட தரவு தான் தகவல். இந்த செய்முறைக்குட்படுத்தப்பட்ட தரவானது தரவு அனுப்புகையாகவோ, தரவுத் தெரிவாகவோ, தரவு ஒழுங்கமைப்பாகவோ, தரவுப் பகுப்பாய்வாகவோ இருக்கலாம். எனவே தகவல் என்பது தரவுச் செய்முறையில் தங்கியுள்ளதுஷஷ என நூலக தகவல் விஞ்ஞானக் கலைக்களஞ்சியம் கூறுகிறது.ஜநுnஉலஉடழியநனயைஇ1993ஸ முழுக்க முழுக்கத் தகவல் தொழினுட்பம் சார்ந்து இது தகவலை அணுகுகிறது. ஷஷமனித மூளையில், இலத்திரனியல் பதிவேடுகளில், எழுத்துப் பதிவேடுகளில், பௌதிக ரீதியாக  பொதிந்து கிடக்கும் அறிவே தகவல்ஷஷ என்கிறது தகவல் விஞ்ஞானத் துறைக்கான இன்னோர் கலைக்களஞ்சியம். இது தகவலை அறிவாகப் பார்க்கிறது. தன்மையையோ (எண் சார்ந்தது, எழுத்துச் சார்ந்தது.), வடிவத்தையோ (நூல், கட்புல, செவிப்புல ஊடகம் போன்றன), உள்ளடக்கத்தையோ கருதிக்கொள்ளாது, அறிவியல் தொழில்நுட்ப அறிவைத் தொடர்பாடலுக்கெனப் பயன்படுத்தும் பொருட்டுப் பாவிக்கப்படுகின்ற குறியீட்டு ஆக்கக்கூறுகளே தகவல்ஷ ஆகும்; என்கிறது. யுனெஸ்கோஜருநௌஉழஇ1979ஸ.
பொருட் துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துக்களில் சில இவை: ஷஷ முறைப்படுத்தப்பட்ட கருத்துத் தொகுதி ஒன்றினால் அல்லது அதன் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பதிலீடுகளால் தெரிவிக்கப்படுகின்ற அல்லது தெரிவிக்கும் நோக்குடன் எடுத்துச் செல்லப்படுகின்ற செய்திக் குறிப்பேஜஆநளளயபநஸ தகவல் எனப்படுகின்றது. இங்கு தகவல் என்பது மனித மனத்தில் உருவாகும் சிந்தனையின் வடிவமைப்பாகப் பார்க்கப்படுகின்றது.ஜடீhயவவயஉhயசலயஇ1978ஸ.   பயன்படுத்தப்படக்கூடிய, ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு அனுப்பப்படக்கூடிய அல்லது தொடர்புபடுத்தப்படக்கூடிய அறிவு, நுண்மதி, விபரம் அல்லது தரவுஷஷ தகவல் எனப்படுகின்றது. இது தகவலை அறிவியல், தொழினுட்பம், சமூக அபிவிருத்தி சாரந்து நோக்குகிறது. ஓரு ஆவணத்தின் உள்ளடக்கம், அதன் பௌதீக வடிவம் இரண்டையும் குறிப்பிட இப்பதம் பாவிக்கப்படுகிறது. யுனெநசயை புநழசபந என்பவரின் கருத்துப்படி தகவல் என்பது பின்வரும் நான்கு கருத்துநிலைகளின் அடிப்படையில் நோக்கப்படுகிறது.

1.    மரபு ரீதியான அணுகுமுறை
ஆய்வு அபிவிருத்திகளினுடைய உள்ளீடு வெளியீடு இரண்டுமே தகவல் என இது கருதுகிறது.

2.    சமூக கலாச்சார அணுகுமுறை
     தகவலும் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு அனுப்பீடு செய்யக்கூடிய அறிவும் ஒன்று தான்  என்ற கருத்துநிலையை இது வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையில் அனைத்துத் தகவல் அனுப்புகைகளும் அறிவியல் சமூகத்திற்கு சேவைசெய்தல் என்பது மட்டுமன்றி தகவல் அனுப்புகை தொடர்பாக மேற்கொள்ளப்படும் பயிற்சி, கல்வி, கலாச்சாரம், பொதுசனத் தொடர்பு, மருத்துவம், ஏனைய சேவைகள் போன்ற அனைத்து செயற்பாடுகளையும் கருத்தில் கொள்கிறது.

3.    பொருளாதார அணுகுமுறை
இந்த அணுகுமுறை தகவலை ஒரு வளமாக, மனித சமூகத்தில் தாக்கம் விளைவிக்கின்ற அடிப்படை சக்தி அல்லது ஆற்றலாக நோக்குகிறது. புலமைசார்ந்த செயற்பாடுகளுக்கும் பொருள்சார் செயற்பாடுகளுக்கும் இடையில் மிக இன்றியமையாத, மாற்ற முடியாத இணைப்பாக தகவல் கருதப்படுகிறது.

4.    தத்துவார்த்த அணுகுமுறை
இது தகவலை பேராற்றல் என கருதுகிறது.

1.2 கருத்துநிலைகளின் பல்பரிமாணத் தன்மை:
1.21 தகவல் என்பது செய்திக் குறிப்பு:

கருத்து  என்ற அம்சத்தினூடாகத் தகவலைப் புரிந்து கொள்ளும் முறையாக இது அமைகிறது. ஒன்றைப் பற்றி மனதில் முதன் முதல் தோற்றம் பெறுகின்ற உணர்வினூடாகப் பெறப்படும் எண்ணப்பதிவு (புலனுணர்வுக்காட்சி), பல புலனுணர்வுக் காட்சிகளின் சேர்க்கை மூலம் பெறப்படும் ஒரு மனவிம்பம், பல புலனுணர்வுக் காட்சிகளின் சேர்க்கைளிலிருந்து சாராம்சமாகப் பெறப்படும் பொது மனப்பிரதிவிம்பம், மனம் சார்ந்த தொழிற்பாடுகளின் விளைவுகள், காரணங்களிலிருந்து பெறப்படுபவை, கற்பனையில் உதிப்பவை, மன வெளிப்பாடுகளிலிருந்து பெறப்படுபவை, உள்ளுணர்வின் மூலம் பெறப்படுபவை போன்றவைகளில் ஏதாவது ஒன்று கருத்தாக இருக்க முடியும். ஏதாவது ஒரு ஊடகத்தின் மூலம் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்கு மேற்கூறப்பட்ட சிந்தனைகளில்; ஒன்று உதவும். கருத்து என்பது சாதாரண கருத்தாக, சிக்கல் வாய்ந்த கருத்தாக, அல்லது கருத்துச்சிக்கலாக இருக்கக்கூடும். ஏனையவர்களுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டோ அல்லது தனக்குத்தானே தொடர்பு கொள்ளும் பொருட்டோ ஊடகம் ஒன்றின் பலதரப்பட்ட மட்டங்களில் இது வெளிப்படுத்தப்படுவது அவசியம். இத்தகைய ஊடகங்களில் அடிப்படை ஊடகங்களாக இருப்பவை சைகை, அடையாளம், குறியீடு, சமிக்ஞை, தூண்டுவிசை, சுட்டுக்குறி, ஒலி, படங்கள், சொற்கள், சொற்களின் சேர்க்கைகள் என்பன. இத்தகைய ஒரு ஊடகம் ஒரு சில விதிமுறைகளுக்குட்பட்டே கருத்துக்களை வெளிப்படுத்தவோ அதை இன்னோர் இடத்திற்கு அனுப்பீடு செய்யவோ முடியும். மொழி என்பது ஒரு ஊடகம் என்றால் சொற்கள், சொற்றொடர்கள், வாக்கியங்கள் என்பவை இவ் ஊடகத்தின் பலதரப்பட்ட மட்டத்திலான மூலக்கூறுகள். பலதரப்;பட்ட எண்ணங்கள் இந்த மூலக்கூறுகளினூடாக வெளிப்படுத்தப்படுகின்றன.

1.22     தகவல் என்பது செய்தி:
பொதுமக்களுக்கு அவர்களது சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் பொதுசனத் தொடர்பு ஊடகங்களினூடாக நடப்பு நிகழ்வுகளாகவோ அல்லது விமர்சனங்களாகவோ அதுவுமன்றிப் பொழுதுபோக்கு அம்சங்கள் என்ற வகையிலோ செய்தி என்ற வடிவில் பரப்பப்படும் தகவல் வகை.

1.22    தகவல் என்பது அறிவு:
மனித சமூகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற கல்வி, அவதானிப்பு, பரிசோதனை என்பவற்றின் மூலமோ அல்லது மனிதனால் பெற்றுக்கொள்ளப்படுகின்ற அனுபவங்களின் மூலமோ தோற்றம் பெற்றுப் பதிவேடுகளின்;; வடிவத்தில் பரப்பப்படும் தகவல் பொதுவாக அறிவு எனக் குறிக்கப்படுகிறது. புலமைத்துவ வெளியீடு ஒன்றை இதற்கான சரியான எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும். அட்டைப் பட்டியல்கள், தரவுத் தளங்கள் போன்றவை நூல்கள், பருவ இதழ்கள் போன்ற தகவல் வளங்களில் பொதிந்திருக்கும் தகவலைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகளை வழங்குகின்றன. ஆரம்ப காலத்தில் அச்சு வடிவ சாதனங்களே அறிவுப் பதிவேடுகளாகத் தொழிற்பட்டன. கால மாற்றத்தில் நூலுருவற்ற சாதனங்களும் அறிவைப் பொதிந்திருப்பது மட்டுமன்றி இணையத் தளங்கள் வரை அறிவு வியாபித்திருக்கின்றது. இத்தகைய தகவல்கள் பொதுவாக கல்வி, ஆய்வு, சமூக பொருளாதார அபிவிருத்;தி என்பவற்றின் உள்ளீடாகவும் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் தகவல்களிலிருந்து புதுப்புதுத் தகவல்களை உருவாக்குவதற்கான உள்ளீடாகவும் பயன்படுகின்றது.

1.23    தகவல் என்பது தோற்றப்பாடு:
உயிரியல், பௌதீகவியல், இரசாயனவியல், நடத்தையியல், கணினியியல், செயற்கை நுண்மதி, சமூகவியல், பொருளியல், மொழியியல் போன்ற பெரும்பாலான அறிவியல் துறைகளின் ஆய்வு முயற்சிகளுக்கு அடிப்படை மூலாதாரமாக கருதப்படும் தகவல் வகை.

1.24     தகவல் என்பது தரவு:
பரந்த ரீதியில் மானுடத் தகவல் செய்முறை ஆற்றல்களுடன் இடைவினை புரிவதற்கு உதவும் தரவாகத் தகவலை நோக்குவோரும் உண்டு. பொருட்கள், உருவங்கள், ஒலிகள், கட்புல, தொட்டுணரக்கூடிய தோற்றப்பாடுகள், செயற்பாடுகள், இயற்கைத் தோற்றப்பாடுகள், நிகழ்வுகள் போன்றவை தரவு என்ற பதத்துக்குள் உள்ளடங்கும். அனைத்துத் தொடர்புகளும் ஏதோ ஒரு நோக்கத்தைக் கொண்டவை என்ற கருத்துநிலை முன்வைக்கப்பட்டாலும் கூட எவ்வித நோக்கங்களும் அற்று ஒரு பொருள் தொடர்பாக ஒருவர் மனத்தில் உருவாகும் புலனுணர்வின் மூலமான தொடர்பாலும் இன்னொருவருக்கு தகவல் அனுப்பப்பட முடியும். முகாமைத்துவ செய்முறைக்கான ஒரு மூலவளமாக ஒரு நிறுவனத்திற்குள்ளே நூல்விபர வடிவில் உருவாக்கப்படாமல் நிறுவனத்திற்கு வெளியே பெறப்படும் தகவல்களுடன் இணைத்து தீர்மானம் எடுத்தல் செய்முறைக்கு பயன்படுத்தப்படும் தகவல். இது பெரும்;பாலும் தரவு என குறிக்கப்படுகிறது.

1.25    தகவல் என்பது  துணைக் கருவி
தகவல் தொழினுட்பத் துறையில் தகவல் என்பதைவிட தகவல் அனுப்புகை, பரிமாற்றம், வழி, சேமிப்பு, மீள்வழங்கல் போன்றன முதன்மையாகவும் தகவல் இவற்றிற்கான துணைக்கருவியாகவும் கருதப்படுகிறது.;

1.26    தகவல் என்பது செய்முறை
செய்திக்குறிப்பு, தரவு, குறியீடு, சைகை போன்றவற்றை அறிவாக மாற்றும் செய்முறை தகவல் என அறியப்படுகின்றது.

1.27    தகவல் என்பது தொடர்புச் செய்முறையின் ஒரு அங்கம்:
சொற்களிலும் தரவுகளிலும் அறிவுப் பதிவேடுகளிலும் கருத்தைத் தேடுவதை விடுத்து மனிதர்களிடத்து தேடும் அம்சத்தை இது குறித்துநிற்கிறது. ஒரு நிறுவனம் சார்ந்து நோக்கும்போது இங்கு தகவல் சேகரிப்பும் செய்முறையும் அன்;றாட பணிக்கும் அப்பாற்பட்டு பௌதிக ரீதியானதாகவோ அல்லது அறிவாற்றல் செயற்பாடாகவோ அன்றி வேலையுடன் வேலையாக பணிபுரிபவர்களின் தன்மை, நடவடிக்கைகள், வேலைத் திருப்தி போன்றவற்றை அவதானிப்பதை மையமாக வைத்து உருவாகும் ஒன்றாக இனங்காணப்படுகின்றது. நிறுவனத்தின் உள்ளேயும் வெளியேயும் தனிப்பட்ட ஊடாட்டங்கள், சுய ஆர்வம், அந்தரங்கம், தகவலைச் செய்முறைப்படுத்தும் பாங்கில் உள்ள தனிப்பாணி, ஒரு நிலைமை தொடர்பாக தனித்தும் கூட்டாகவும் உணர்ந்து கொள்ளும் தன்மை போன்ற அம்சங்களில் தகவல் உருவாக்கமானது தங்கியிருக்கும். தனிப்பட்ட காரணிகளும் சமூகக்காரணிகளுடனும் காலம் உன்ற காரணி இணைந்து வேலைச் செயற்பாட்டின் ஒரு அங்கமாக தகவலை அணுகுதலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

1.28    தகவல் என்பது உற்பத்திக்காரணி:
நிலம், உழைப்பு, மூலதனம், நிறுவனம் போன்ற மரபுரீதியான உற்பத்திக்காரணிகளைப் போன்று தகவலும் ஒரு உற்பத்திக்காரணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

1.291    தகவல் என்பது பண்டம் அல்லது உற்பத்திப் பொருள்
தகவல் சமூகத்தில் தகவல் ஒரு உற்பத்திப் பொருளாகக் கருதப்பட்டு அதற்கான செலவும் கணிப்பிடப்படுகிறது.ஜடீசயஅயnஇ1989ஸ தகவல் உருவாக்கம், செய்முறை, அனுப்புகை, பரவலாக்கம், பகிர்வு, பயன்பாடு என்பவற்றிற்கான செலவு மிக உச்சமாக போய்க்கொண்டிருப்பதுடன் அடுத்து வரும் வருடங்களில் அது இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் எனவும் உறுதியாகத் தெரிகிறது. பொதுத் துறையிலிருந்து கணிசமானளவு முதலீட்டையும் அது கோரி நிற்கிறது. பலதரப்பட்ட துறைகளினதும் வள ஒதுக்கீட்டில் தகவல் என்ற உற்பத்திப் பொருளுக்கான முன்னுரிமை தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள தலைசிறந்த பொருளியலாளர்களினால் தகவல் பொருளாதாரம் என்ற கருத்துநிலையும் தகவலின் பெறுமானம் தொடர்பான  பகுப்பாய்வும் பரீட்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இத்தகைய ஆய்வுகள் வள ஒதுக்கீட்டில் அரசாங்கங்களும், திட்டவியலாளர்களும் மேற்கொள்ளும் தீர்மானங்கள்pல் செல்வாக்குச் செலுத்துகிறது.

1.292    தகவல் என்பது வளம்
தனி மனிதருக்கும் நிறுவனத்துக்கும் மிக முக்கிய வளமாகத் தகவல் கருதப்படுகின்றது. இது ஒரு பண்டமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அது போன்று விற்பனைக்குக்கானதா இருக்கலாம் இல்லாமலும் விடலாம். ஒரு நூலகத்தில் உள்ள தகவல் வளங்கள் அனைத்தும் வளங்களேயன்றிப் பண்டமல்ல.ஏனைய மூல வளங்களைப் போலன்றி தகவல் பல்லினத் தன்மை வாய்ந்ததாகவும் உலகளாவிய தன்மையுள்ளதாகவும் அள்ள அள்ளக் குறையாததாகவும், சிக்கல் வாய்ந்ததாகவும் துரிதமாக விரிவடைந்து செல்லும் தன்மையுள்ளதாகவும் உள்ளது. ஏனைய வளங்களின் ஒதுக்கீட்டுக்கும் பயனுள்ள பாவனைக்கும் தகவல் அவசியமானதொன்றாக இருப்பதனால் புலமை சார் மூல வளமாக உள்ள தகவல் ஏனைய வளங்களை விட மிகப் பெறுமதியானதாகவும் விலைமதிப்பற்றதாகவும் உள்ளது. செல்வத்தை தரும் வடிவமாகவும் மூல வளம் என்ற கருத்துநிலை காரணமாக ஒரு நிறுவனத்தின் பெறுமதியையும், சமூகத்துக்கு அதன் பங்களிப்பையும் நிர்ணயிப்பதும், தரரீதியாகவும் தொகை ரீதியாகவும் அது உருவாக்கும் தகவலிலும் அறிவிலும் சமூகத்துக்கு அதனைப் பயன்படுத்தும்; தன்மையிலுமே இது தங்கியுள்ளது.

1.3 கருத்துநிலைகளுக்கிடையிலான உறவுநிலை
மேற் கூறப்பட்ட வரைவிலக்கணங்களிலிருந்து  உண்மை நிகழ்வு, தரவுஇ தகவல், செய்தி, செய்திக்குறிப்பு, அறிவு போன்ற சொற்பதங்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுவதைக் கண்டு கொள்ள முடியும். எனினும் இவை ஒவ்வொன்றுக்குமிடையில் கணிசமான வேறுபாடு உண்டு. 'யதார்த்த உலகில் நாம் காணும் தோற்றப்பாடுகளை உண்மைநிகழ்வுகளாகக் கண்டு அவற்றைத் தரவுகள் ஊடாகப் பிரதிபலிக்கின்றோம். இந்தத் தரவுகளை நாம் செய்முறைக்குட்படுத்தும் போது தகவல் உருவாகின்றது.  தகவலைப் பயன்படுத்தி அகநிலைப்பட்ட வகையில் தோற்றம் பெறுவது அறிவு எனப்படுகின்றது. இந்த அறிவு தான் தீர்மானம் எடுப்பதற்கு தகவல் பெறுநருக்கான அடிப்படையாக அமைகின்றது' ஜர்யலநளஇ1993ஸ என்ற அணுகுமுறை உண்மை நிகழ்வே தகவல், தரவும் தகவலும் ஒன்று, அறிவிலிருந்து தகவல் தோற்றம் பெற்றது, தகவலிலிருந்து அறிவு தோற்றம் பெற்றது, போன்ற கருத்துநிலைக் குழப்பங்களை ஓரளவுக்குத் தீர்ப்பதில் வெற்றி கண்டிருக்கின்றது என்றே சொல்ல முடியும்.
அனுபவங்கள் அல்லது அவதானிப்புகளின் வழி அறியப்படும் உண்மை என  என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ள முடியும். யதார்த்த உலகிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கருத்துருவே அறிவாதார அனுபவம் அல்லது உண்மை நிகழ்வாகும். பரிசோதிக்கப்பட வேண்டிய உண்மைகள் என்றும் இவற்றைப் பெயரிடலாம். இலங்கையில் 1981ம் ஆண்டுக்குப் பின்னர் குடித்தொகைக் கணக்கு மேற்கொள்ளப்படாத நிலையில் இலங்கைப் புள்ளிவிபர அறிக்கையின் கூற்று எப்போதுமே பரிசோதிக்கப்பட வேண்டிய கூற்றாகவே கருதப்பட முடியும். சாதாரண அவதானிப்பு, முறையான அவதானிப்பு, பொறிமுறை சார்ந்த அவதானிப்பு, அதன் மூலமான அனுபவங்களிலிருந்து அறியப்படும் உண்மைகள் அறிவின் ஒரு வகையாகவோ அல்லது தகவலின் ஒரு கூறாகவோ கருதப்பட முடியும் . இந்த அறிவாதார அனுபவம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அனுப்பப்படும்போது அல்லது தெரிவிக்கப்படும்போது அது செய்திக் குறிப்பு எனப்படுகிறது. குறிப்பிட்ட காலப்பகுதியில் மக்கள் கூட்டம் ஒன்றுக்கு விரிவுரைகள், சொற்பொழிவுகள், கட்டுரைகள் மூலம் தொடர்புபடுத்த முயல்கின்ற கருத்துநிலையே செய்திக்குறிப்பு ஆகும். இரு மனிதருக்கிடையில் தொடர்புபடுத்தப்படுகின்ற அல்லது பெருத்த அளவிலான, பலதரப்பட்ட அறிவுநிலையிலுள்ள மனிதரும் இலகுவாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எளிமைப்படுத்திப் பொது ஊடகம் ஒன்றினூடாகப் பரப்பப்படும் அண்மைக்கால நிகழ்வுகள் அல்லது மாறும் சூழ்நிலைகள் செய்தி ஆகின்றது. பத்திரிகைகள் செய்திகளைத் தரும் அதே சமயம் தகவலையும் உள்ளடக்குகின்றன.   மக்கள், பொருட்கள், நிகழ்வுகள், கருத்துநிலைகள் என்பவற்றைப் பிரதிபலிப்பதற்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீட்டு வடிவங்கள் தரவுஜனுயவயஸ எனப்படும். அச்சுருக்கள், காந்த நாடா, துளை அட்டைகளில் பயன்படுத்தப்படும் 'பிற்'(டிவை) எனப்படும் கணினி அளவை அலகுகள், ஒளி வடிவத் தரவுகள், பேச்சு மொழிச் சொற்கள், கட்புல விம்பங்கள் என இக்குறியீட்டு வடிவங்கள் பலதரப்பட்டவை எனினும் பொதுவான வழக்கில் தரவு என்பது எண் சார்ந்ததாகவே நோக்கப்படுகின்றது. அறிவாதார உண்மைக்கும் யதார்த்த உலகுக்கும் தொடர்பு இருப்பது போன்று தரவுக்கும் யதார்த்த உலகிற்கும் தொடர்பு இல்லை. கணித நிரூபிப்புகள், கணினிச் செய்நிரல்கள் அறிவாற்றல் மூலம் கட்டமைக்கப்படுகின்றதேயன்றி யதார்த்த உலகிலிருந்து பெறப்படுவதில்லை. உண்மை நிகழ்வுகளைப் பதிவதற்கான ஒரு வழி முறையாகத் தரவைப் பயன்படுத்தலாம். இனித் தகவலுக்கு வருவோம்.  தகவலை வழங்குவதற்கான ஆரம்பப்புள்ளியே தரவு. தொடர்ச்சித்தன்மை வாய்ந்த தகவலின் ஒரு பகுதியே தரவு. கருத்துள்ள தரவு அனைத்தும் தகவல்எனப்படுகின்றது. தீர்மானம் எடுத்தல் என்ற செய்முறைக்கு உதவுவதற்கு தரவுகள், புள்ளிவிபரங்கள், பெறுமானங்கள், கருத்துக்கள் (அபிப்பிராயங்கள்) என்பன தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் செய்முறைக்குட்படுத்தப்படாத தரவுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இதைப் பின்வரும் எடுத்துக்காட்டு மூலம் விளக்க முடியும்.

சாதாரண நபரைப் பொறுத்து நூலகம் என்பது நூல்களைக் கொண்டுள்ள இடம். இதுவே படிக்கும் மாணவரைப் பொறுத்து மேலதிக வாசிப்புக்கான வாய்ப்பைத் தரும் இடம். நூலக அறிவைப் பெற்ற ஒருவரைப் பொறுத்து அது அறிவுப் பதிவேடுகளின் சுரங்கம். இதுவே ஆய்வாளர்களைப் பொறுத்து தமது ஆய்வுகளுக்கான தரவுகளைத் தரும் ஒரு இடம். நூல்களைக் கொண்டுள்ள இடம் நூலகம் என்ற கருத்து நூலகத்தைப் பயன்படுத்தாத ஒருவரைப் பொறுத்து அவதானிப்பினூடாகப் பெறப்பட்ட ஒரு அறிவாதார அனுபவம். இந்த அறிவாதார அனுபவம் எவ்வித செய்முறைகளுக்கும் உட்படுத்தப்படாது நேரடியாக மனித மூளைக்குள் கருக்கொள்ளும் அறிவாகலாம். நூலகத்தைத் தொடர்ச்சியாகப் பயனபடுத்தும் வாசகனைப் பொறுத்து இந்த அறிவாதார அனுபவம் மேலதிக அவதானிப்பினூடாகவோ தொடர்புச் செய்முறையினூடாகவோ பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படின் அது இன்னொருவருக்கு செய்திக் குறிப்பாகப் போய் சேரலாம் அல்லது பெருத்த எண்ணிக்கையுடைய மக்களுக்கு பொதுசனத் தொடர்பு ஊடகம் ஒன்றினால் செய்தி வடிவில் பரப்பப்படலாம். உறுதிப்படுத்தப்படாத போது  இக்கருத்துநிலை தொடர்பான மேலதிக தேடல்கள் தரவாகத் தோற்றம் பெற்று இத் தரவுகள் செய்முறைப்படுத்தப்பட்டு தகவலாகத் தோற்றம் பெறலாம்.  இத் தகவலிலிருந்து அகநிலையில்  கருக்கொள்வதே அறிவாகின்றது. இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது தகவல் என்ற கருத்துநிலை மனிதருக்கு மனிதர் வேறுபட்டது.
நிகழ்காலத்தில் தகவலை விளங்கிக் கொள்வதனூடாகவும், ஏற்கனவே எம்மிடம் உள்ள தகவலுடன் அதை இணைப்பதனூடாகவும் பெறப்படுவதே அறிவாகும்.  செய்முறைப்படுத்தப்பட்ட தரவைத் தகவல் எனக் கொள்வது  போன்று செய்;முறைப்படுத்தப்பட்ட தகவலை அறிவு எனக் கருத முடியும். அறிவு மனித மனத்தின் அகநிலைப்பட்டது. உள்ளுக்குள்ளேயே உருவாவது. வெளியிலிருந்து பெறப்பட முடியாதது. தகவலோ வெளிநிலைப்பட்டது. மிக நீண்ட காலம் உறுதியுடன் நீடித்து  நிலைத்திருக்கின்ற தகவலே அறிவு என்கிறார் வெயிஸ்மன் .  'அறிவு என்பது இருவகை. எமக்குத் தெரிந்த அறிவு ஒரு வகை, எமக்குத் தெரியாத தகவலை எங்கே பெறலாம் என்ற அறிவு இன்னொரு வகை' என 18ம் நூற்றாண்டிலேயே  அறிவு அகநிலைப்பட்டது, தகவல் வெளிநிலைப்பட்டது என அறிவையும்  தகவலையும் தெளிவாகப் பிரித்துக் காட்டிய அறிஞர் சாமுவேல் ஜோன்சனின் கூற்றும் இங்கு கருத்தில் கொள்ளப்படக்கூடியது. அறிவு பலதரப்பட்ட உட்பொருட்களில் நிலை கொண்டிருக்கும். தனிநபர் ஒருவரின் உள்ளக அறிவாற்றல் அமைப்பின் ஒரு மூலக்கூறாக நிலை கொண்டு தனிநபர் நுண்ணறிவாகத் தீர்மானம் எடுத்தல் செய்முறைக்கு இது அவருக்கு உதவலாம். சமூக நினைவகத்தில் நிலை கொண்டு சமூக நலனுக்கு உதவலாம். நூலக தகவல் நிறுவனங்களில் பதிவேடுகளின் வடிவில் நிலை கொண்டு நூலக தகவல் நுண்ணறிவாக அங்குள்ள தொழிற்திறன் சார்ந்த, சாராத அலுவலர்களின் அனுபவம் நுண்ணறிவு என்பவற்றின் தொகுப்பாக நிலைகொண்டிருக்கலாம். கணினி என்று வரும்போது  நிபுணி அமைப்பில் நிலை கொண்டு அறிவுத் தளத்தின மூலக்கூறாக  இயங்கி அவற்றின் அபிவிருத்திக்கு உதவலாம். இதனைப் பின்வரும் வரைபடம் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.

2. தகவல் உலகின் பண்புகள்
தகவலை அணுகுவதற்கு முன்னர் தகவல் உலகின் பண்புகளை நன்கு விளங்கிக் கொள்ளல் அவசியமானது.

2.1 தகவல் கட்டுமீறல் 
17ம், 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட முதலாவது தொழிற்புரட்சியும் அக்காலத்திலும் அடுத்து வந்த காலங்களிலும் அறிவியல் தொழினுட்ப துறைகளில் ஏற்பட்ட துரித வளர்ச்சியும், அறிவியல், தொழினுட்ப, தொழிற்றிறன் சார் இலக்கியங்களில் பாரிய அதிகரிப்பையும், அறிவியலாளர், தொழினுட்பவியலாளர், ஆய்வாளர் போன்றோர்களின் எண்ணிக்கையில் அதேபோன்ற அதிகரிப்பையும் ஏற்படுத்தியது. 17ம் நூற்றாண்டில் அறிவியல் தொழிற்றிறன்சார் பருவ இதழ்களின் தோற்றமும், இலட்சக்கணக்கான ரீதியில் அவற்றின் தற்போதைய  அதிகரிப்பும், 19ம் நூற்றாண்டில் சொல்லடைவாக்க சாராம்சப்படுத்தல் பருவ இதழ்களின் தோற்றமும், அவற்றின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான அதிகரிப்பும், ஆய்வுத் தொழினுட்ப அறிக்கைகள், காப்புரிமைகள், தராதரங்கள் போன்றவற்றின் தோற்றமும் மில்லியன் கணக்கிலான  அவற்றின் அதிகரிப்பும் தான் ஆவண வெடிப்பு, இலக்கிய வெடிப்பு அல்லது தகவல் வெடிப்பு என்ற தோற்றப்பாட்டின் பிரதான கூறுகளைக் காட்டுகின்றன. தொழினுட்ப வளர்ச்சி, சமூக அழுத்தங்கள், பதியப்பட்ட அறிவின் பாரிய வளர்ச்சி என்பன காரணமாக அறிவியல் வளர்ச்சியை விரும்பும் எந்தவாரு தேசத்துக்கும் தகவல் ஒரு பண்டமாக மாறும் அளவிற்கு மிகவும் முக்கியமாக மாறி விட்டது. தனி நபர் ஆய்வுகளிலிருந்து குழு ஆய்வுகளுக்கு மனித சமூகம் மாறியமையும் தகவல் வெடிப்புக்கு ஒரு காரணமாகும். இன்று உலகில் 12 மில்லியன் ஆய்வாளர்களால் வருடாவருடம் 2 மில்லியன் கட்டுரைகள் உருவாக்கப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. 80 ஆயிரம் அறிவியல் தொழினுட்ப பருவ இதழ்கள் வெளியிடப்படுகின்றன. நாளாந்தம் மூன்று பருவ இதழ்கள் புதிதாகத் தோன்றும் அதே சமயம் ஒரு பருவ இதழின் வெளியீடு நிறுத்தப்படுகிறது. வெளியீடு செய்யப்படும் இலக்கியங்களில் 50மூமானவை தேவைக்கும் மேற்பட்டதாக உள்ளது. இவற்றில் பெரும்பாலானவை காலப் போக்கில் மறைந்து விடக்கூடியவை. அடுத்த பத்து வருடங்களில் இவற்றில் 98மூ மானவை பூரணமாக மறைந்து விடும்.

2.2 வெளியீடுகளின் வழக்கற்றுப்போகும் தன்மை
துரிதமாகவும் தொடர்ச்சியாகவும் அதிகரித்துச் செல்லும் ஆய்வுச் செயற்திட்டங்கள் ஷஆக்கு அல்லது அழிஷ என்ற தோற்றப்பாட்டுக்கு வழி சமைப்பதனால் இலக்கிய அதிகரிப்புக்கு இணையாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ அவற்றின் வழக்கற்றுப் போகும் தன்மையும் அதிகரித்துச் செல்கிறது. அதற்கான காரணங்களாக பின்வருவனவற்றைக் கருத முடியும்.

1.குறிப்பிட்ட தகவல் தற்காலம் வரை பெறுமதிமிக்கதாக இருப்பினும் இவை அண்மைக்கால ஆய்வுகளுக்குள் சேர்க்கப்பட்டிருத்தல்
2.    இன்றுவரை பெறுமதி மிக்கதாக இருப்பினும் கூட அண்மைக்கால ஆக்கங்களினால் ஒன்றணைக்கப்பட்டிருக்கும் தன்மை
3.   இன்றுவரை பெறுமதி மிக்கதாகக் கருதப்படினும் ஆர்வம் குறைந்த பொருட்துறைகளாக மாறியிருக்கும் தன்மை
4.    பெறுமதியை முற்றாக இழந்து விடும் தன்மை

2.3 தகவல் தெறிப்பு அல்லது சிதறல்
இலக்கிய தெறிப்பு என்ற கருத்துநிலையின் தோற்றப்பாட்டுக்கு பல காரணிகள் பங்களிப்புச் செலுத்துகின்றன. இலக்கியத் தெறிப்பானது பொருட்துறை சார்ந்ததாகவோ, தகவல் சாதனங்களின் பௌதிக வடிவமைப்புச் சார்ந்ததாகவோ, மொழி சார்ந்ததாகவோ, இடம் சார்ந்ததாகவோ அதுவுமன்றி ஒரு ஆவணத்தின் உள்ளடக்கம் சார்ந்ததாகவோ ஏற்படலாம். இத்தகைய நிலையானது தகவல் சாதனத்துக்கும் அதன் பாவனையாளருக்குமிடையில் தகவல் இடைவெளியை உருவாக்கித் தகவல் மீள் வழங்கலிற் பாதிப்பை உருவாக்கும்.

2.4 தகவல் சுமை
தகவல் வெடிப்பில் ஏற்பட்ட எண்ணற்ற அதிகரிப்பு முதல்நிலைப் பருவ இதழ்களுக்கு வித்திட்ட அதேசமயம் அதேயளவிற்குப் பல சாராம்சப் பருவ இதழ்களையும், கணினி வடிவ தரவுத் தளங்களையும் உருவாக்கியது. இதன் காரணமாகக் குறிப்பிட்ட ஒரு துறையில் ஆய்வை மேற்கொள்ளும் எவருக்குமே அதிகரித்துச் செல்லும் தகவல் வெள்ளத்துக்குள் தமக்குப் பொருத்தமானதைத் தெரிவு செய்தல் கடினமானதாக இருக்குமொரு நிலையில் தகவல் உத்தியோகத்தரும் சமாளிக்கத் திணறும் நிலையில் தகவற் சுமை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

2.5 மொழியின் பல்பயன்பாட்டுத் தன்மை
பல மொழிகளில் வெளியீடுகளின் அதிகரிப்பானது இந்த நூற்றாண்டின் சிறப்பம்சமாகும். அந்நிய மொழியில் உருவாக்கப்படும் தகவல்களின் மிகக் குறைந்தளவு வீதமே பயன்படுத்தப்படுவதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. கிட்டத்தட்ட 65வீதத்துக்கும் அதிகமான உலக அறிவுப்பதிவேடுகள் ஆங்கில மொழியிலேயே வெளியிடப்படுகின்றன. உலகின் அறிவியல் சமூகங்களில் கூட இன்றும் அறிவை அணுகுவதில் தடையாக உள்ளது மொழியே. தரவுத்தளங்களில் பல ஆங்கில மொழியிலேயே உள்ளன. வேற்று மொழியில் பரிச்சியமின்மை தகவல் தேடும் ஆர்வத்தில் விரக்தி நிலையைத் தோற்றுவிப்பது மட்டுமன்றி தெளிவற்ற தன்மையையும் உருவாக்கும். கணினி யுகத்தில் மொழித் தடையானது மனிதனுக்கும் இயந்திரத்துக்குமிடையில், இயந்திரத்துக்கும் இயந்திரத்துக்குமிடையில், மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில், இயந்திரத்துக்கும் மனிதனுக்குமிடையில,; பொருத்தப்பாடின்மையையும் முரண்பாட்டையும்,; உருவாக்கும். இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் சொல்லலங்காரங்கள், கலைச்சொற்கள் போன்றன  தகவலை விளங்கிக் கொள்வதில் இடர்ப்பாடுகளை ஏற்படுத்துகின்றன..

2.6 தரத்திலும் நம்பகத் தன்மையிலும் வேறுபாடு
தகவல் தொழிற்துறையின் உருவாக்கம் காரணமாக ஏனைய பண்டங்களை விடவும் தகவல் சாதனங்களின்; விலை ஒப்பீட்டளவில் குறைந்து கொண்டு போவதும், ஓரே நூலைத் தரங்குறைந்த தாளில் அச்சிட்டுப் பெருந்தொகையில் மலிவுப்பதிப்புகளாக விற்கக்கூடிய வசதியும், தகவல் வளத் தெரிவில் தகவல் அறிவியலாளரின் புலமை சார் அறிவைக் கோரி நிற்கின்றது. மலினப்பதிப்புகளின் உற்பத்தியானது சூழல் மாசடைதல் போல் தகவலிலும் மாசடைதலைஜஐகெழசஅயவழைn pழடடரவழைஸெ உருவாக்கியிருப்பதன் காரணமாக தீயவற்றுக்குள் நல்லதைத் தேடிப்பிடிக்க வேண்டிய அறிவை வாசகனிடம் மட்டுமன்றி தகவலைக் கையாளும் அனைவரிடமும் வேண்டி நிற்கின்றது. மனிதனின் இன்றைய ஆய்வுகள் நேற்று உண்மை என நிறுவியதை பொய்யாக்கிவிடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதனால் நூலக சாதனங்களுக்குள் உண்மையானவற்றையும் பொய்யானவற்றையும் பிரித்தறிய வேண்டிய அறிவு தகவல் பாவனையாளருக்கு இன்றியமையாததாகிறது.

3. தகவல் அணுகுகை
தகவல் அணுகுகை என்பது தனிநபர் வாழும் சூழலுடன் நேரடியாகத் தொடர்புள்ளது. பொருளாதார நன்னிலை தொடக்கம் அந்தரங்க உரிமைகள் வரை, அலுவலக முகாமைத்துவம் தொடக்கம்  கொள்கை வகுப்பு தீர்மானம் மேற்கொள்ளல் வரை, நாளாந்த உழைப்புத் தொடக்கம் பல்தேசிய நிறுவன வர்த்தகம் வரை தகவல் அணுகுகை என்ற கருத்துநிலை எமது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்ற மக்கிறடியின் கருத்து இங்கு நோக்கற்பாலது.ஜஆஉஊசநயனநைஇ1999ஸ தகவல் அணுகுகை தொடர்பான பல்வேறுபட்ட கருத்துநிலைகளை துறை சார்ந்த ஆய்வு முயற்சிகள் முன் வைத்திருக்கின்றன எனினும் ஆய்வு இலக்கியங்களை மீளாய்வுக்குட்படுத்தி தகவல் அணுகுகை தொடர்பான ஆறு வகையான கருத்துநிலைகளை மக்கிறடி முன் வைத்திருக்கின்றார். இவற்றிலிருந்து எமது சமூகத்தின் தகவல் அணுகுகை தொடர்பான அவதானிப்புகளைப் பின்வரும் பிரதான தலைப்புகளின் கீழ் வகைப்படுத்துதல் பொருத்தமானதாக இருக்கும்.

3.1 அறிவு சார் அணுகுகை
தமிழ்ச் சமூகத்தில் இன்றும் மேலாதிக்கம் செய்யும் தகவல் அணுகுகையாக இதைக் கருத முடியும். தமிழ்ச் சமூகத்தின் ஆய்வு முயற்சிகளுக்கு இன்றும் உறுதுணையாக அமைபவை அவதானிப்புகள், கள ஆய்வுகள், நேர் காணல்கள் போன்றவையே. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பின்வரும் வழிமுறைகளில் அறிவுசார் தகவல் அணுகுகையைப் பெறும் வாய்ப்பு உண்டு.

1.    அவதானிப்புச் சார்ந்தவை: வெறும் அவதானிப்பினதும் அனுபவங்களதும் தொகுப்பாக, உண்மை நிகழ்வுகளாகத் தனிமனிதனுக்குக் கிடைக்கும் அறிவு. இது நேரடியாகவே மனித மனத்தின் அறிவுத் தளத்துக்குள் போய்ச் சேரும் வல்லமை கொண்டது. மனித இனம் தோன்றிய காலம் முதற்கொண்டே  மனித மனத்தின் அறிவுத் தளம் அவதானிப்பின் வழியே கட்டமைக்கப்பட்டமைக்குப் பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன. மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்ததும், ஐசக் நியூட்டனின் புவியீர்ப்புத் தொடர்பான கண்டுபிடிப்பும் அவதானிப்பின் வழி வந்தவையே..  பெரும்பாலான ஆக்க இலக்கியங்கள், மனிதப்பண்பியல் சார்ந்த உருவாக்கங்களுக்கு அவதானிப்பின் மூலமான அறிவே அடித்தளமாக அமைவது கண்கூடு. காரண காரியத் தொடர்பற்று அவதானிப்பின் மூலம் பெறப்படும் அறிவானது தவறாக வழி நடத்திவிடும் வாய்ப்பும் மிக அதிகமாகும்.

2.    தொடர்பாடல் சாரந்தவை: தொடர்பாடல் செய்முறையின் ஒரு பகுதியாக நேர்காணல்கள், தரவு சேகரிப்பு போன்ற செய்முறையின் மூலம் தனிமனிதனுக்கோ அல்லது குழுவுக்கோ கிடைக்கும் அறிவு தொடர்பாடல் சார்ந்த அணுகுகையின் ஒரு பகுதியாக நிறுவனமயப்பட்டு தகவல் என்பது பொதியப்பட்ட அறிவாக பாடப் புத்தகங்கள், விரிவுரைகள் என்ற வகையில் மனித வளங்களுக்கூடாக தகவல் பெறுநரைப் போய்ச் சேருகின்றது. கல்விக்கான அணுகுகை உள்ள தனி மனிதனுக்கு பாடசாலைகள் முதற்கொண்டு பல்கலைக்கழகம் ஈறாக தகவல் என்பது  மனித வளங்களான ஆசிரியர்கள், விரிவுரையாளர்களின் மூலமாக 'மெய்ப்பொருள்' காண்பதற்கான வாய்ப்போ அல்லது தேவையோ இன்றிப்  பொதியப்பட்ட அறிவாகப் போய்ச் சேருகின்றது. தொடர்பாடல் செய்முறையின் ஒரு பகுதியாக கருத்தரங்குகள், விவாதங்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றின் மூலம் பெறப்படும் அறிவு.

3.    பொதி செய்யப்பட்ட அறிவு சார்ந்தவை: 
தகவல் உருவாக்க விநியோக நிலையங்களாகத் தொழிற்படும் வெளியீட்டு நிறுவனங்களின் வெளியீடுகளிலிருந்து கிடைக்கும் அறிவு இவ்வகையைச் சார்ந்தது. புத்தக நிலையங்களில் எதை வாங்குவது என்று தனி மனிதன் எடுக்கும் தீர்மானத்திலேயே இது தங்கியுள்ளது. தகவல் சேமிப்பு, மீள்வழங்கல் நிறுவனங்களாக உள்ள நூலக தகவல் நிலையங்களில் உள்ள தகவல் வளங்களிலிருந்து பெறப்படும் அறிவு இவ்வகையைச் சார்ந்தது. இங்குங் கூட உருவிலும் உள்ளடக்கத்திலும் பலதரப்பட்டதாக அமையும் தகவல் வளக் குவியலிலிருந்து தனக்குத் தேவையானதைத் தேடி எடுக்க உதவும் நூலக அறிவும், அது இல்லாதபோது நூலக அலுவலர்களின் திறனும் தகவல் அணுகுகையில் செல்வாக்குச் செலுத்தும்.

3.2    தொழினுட்பம் சார் அணுகுகை

தகவலை அணுகுவதற்கு முன்னர் தகவல் சார்ந்த தொழினுட்பத்தை அணுகும் வாய்ப்பும் திறனும் அவசியம் என இவ் அணுகுமுறை வலியுறுத்துகின்றது. சாதாரண தொலைபேசி உரையாடல் முதற்கொண்டு இணையத் தளப் பாவனை ஈறாகத் தேவைப்படும் தொழினுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தும் திறனை இது உள்ளடக்கியுள்ள அதே வேளை நூலக தகவல் நிறுவனங்களில் உள்ள தகவல் வளங்களில்  நூலுருவில் உள்ள மரபு ரீதியான சாதனங்களான நூல்கள், பருவஇதழ்கள், நூலுருவற்ற சாதனங்களான நுண் வடிவங்கள், சீடீரோம்கள், இணையத் தளங்கள் போன்றவற்றை  நூலகப் பட்டியலூடாக அணுகுதல்  என்பதும் தொழினுட்பம் சார்ந்த அணுகுகையாகவே பார்க்கப்பட வேண்டும். வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சமூகம்; தொழினுட்பம் சார்ந்த தகவல் அணுகுகைக்கு இன்னமும் முழுமையாகப் பழக்கப்படவில்லை என்பதற்குப் போரை மட்டும் காரணமாகக் கொள்ளுதல் பொருத்தமானதல்ல. அருகி வரும் அவர்களின் வாசிப்புப் பழக்கமும்  இதற்குக் கணிசமான பங்கை வகிக்கின்றன. நூலகப் பாவனை சார்ந்து இப்போக்கை விளக்குதல் பொருத்தமானதாக இருக்கும்.
தமிழ்ப்பிரதேசத்தின் மிகப்பெரும் கல்வி நிறுவனமாகக் கருதப்படும் யாழ் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களுமே ஒன்றில் விரிவுரைக் குறிப்புகளில் சொல்லப்படுகின்ற அல்லது விரிவுரையாளர்களால் குறிப்பிடப்படுகின்ற நூல் பற்றிய விபரங்களுடன் அல்லது தமக்கு முன் அதே துறையைத் தேர்ந்தெடுத்தவர்கள் குறிப்பிடும் நூல்கள் பற்றிய விபரங்களுடன் மட்டுமே நூலகத்தை அணுகுகின்றனர். நூலகப் பட்டியலைப் பயன்படுத்தித் தாம் தேர்ந்தெடுத்த துறை தொடர்பான நூல்கள் தொடர்பான ஆழமான ஆணுகுகை இவர்களிடம் இல்லை. எனவே தகவலை அணுகுதல் என்ற செயற்பாடு மிகமிக மட்டுப்படுத்தப்பட்டதொன்றாக உள்ளது. பட்டியல் என்ற கருத்துநிலைக்குப் பழக்கப்படுத்தப்படாத பாடசாலை நூலகங்களும், நூலகம் என்ற கருத்துநிலைக்குப் பழக்கப்படுத்தப்படாத பாடசாலைகளும் மாணவ சமூகத்தின் தேடல் தொடர்பான வெறுமை நிலைக்கு கணிசமான பங்கை வகிக்கின்றன என்பது கருத்தில் எடுக்கப்பட வேண்டியதொன்றாகும்.
நவீன தொழினுட்பம் சார்ந்து நோக்கும் போது தகவல் அணுகுகையில் ஏற்படும் மந்த நிலைக்குப் போர்ச்சூழலைக் காரணமாகக் கொள்ளுதல் தவறாகாது. இணையத் தளங்களினுடாகத் தகவலை அணுகுதல் என்பது இரண்டு காரணிகளில் தங்கியுள்ளது. முதலாவது. சிறு வயதிலிருந்தே தொடங்கும் தேடல் விருத்தி;, இரண்டாவது இணையத்தளத்தைப் பயன்படுத்துவதற்கான கணினி அறிவு. ஆய்வு முயற்சிகளில் இணையத்தின் பயன்பாடு எவ்வளவு தூரம் பங்களிப்புச் செய்கின்றது என்பது தொடர்பான ஆய்வுகள் அவசியமானதாகும். இன்றுவரைக்கும் யாழ். பல்கலைக்கழக ஆய்வு முயற்சிகளில் அச்சுருவ சாதனங்களே முழக்க முழக்க மேலாதிக்கம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு வெளி வருகின்ற தமிழ் மொழி மூலமான சிந்தனை, ஆங்கில மொழி மூலமான
Sri Lanka Journal of South Asian Studies என்ற இரு ஆய்விதழ்களும் இணையத் தள உசாத்துணைகளை இதுவரை உள்ளடக்கவில்லை. யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் 2003ம் ஆண்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளில்  ஒரேயொரு  இணையத் தள உசாத்துணையைத் தவிர ஏனையவை அச்சுருவ சாதனங்களுக்கான உசாத்துணையைக் கொண்டிருக்கிறது.ஜடுவைநசயவரசந சுநஎநைறஸ இதற்குப் பின்வருவனவற்றில் ஒன்றோ பலவோ காரணமாக அமைய முடியும்..
•    இணையத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான சேவை ரீதியான வாய்ப்புகள்  சமூகத்தில் ஏற்படுத்தப்படவில்லை.
•    பல்கலைக்கழகத்துக்குள்ளே தனிநபர் ஆய்வுகளுக்கு உதவக் கூடிய வகையில் ஆய்வாளர்களுக்கு இணைய வசதிகள் தனிப்பட்ட வகையில் இன்னமும் ஏற்படுத்தப்படாமை. பல்கலைக்கழகத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் பல்கலைக்கழக நூலகம் கடந்த ஒரு வருட காலமாகக் கணினிமயவாக்கம் என்ற கருத்துநிலைக்குள் மெல்ல மெல்ல நுழைகின்ற போதிலும் ஆய்வாளருக்கோ, மாணவருக்கோ இணையத் தளம் மூலமான தகவல் அணுகுகை என்ற கருத்துநிலைக்குள் இன்னமும் நுழையவில்லை.  2002ஆம் ஆண்டிலிருந்து கல்வி சார் உத்தியோகத்தவருக்கான பல்கலைக்கழகத்துக்குள்ளே ஏற்படுத்தப்பட்ட சிறு அளவிலான இணைய வசதி கூட முழுமையான வளர்ச்சியை இன்னமும் பெறவில்லை
•    குறிப்பிட்ட சில பொருட் துறைகள் சார்ந்த உள்ளுர் ஆய்வுகளுக்கு உதவக் கூடிய வகையில் இணையத் தளங்கள் இன்னும் வளரவில்லை.
•    இணைய மையங்கள் பெரும்பாலும் இளைஞர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இன்றைய காலப்பகுதியில் இணையத் தளங்கள் என்பவை இளைய சமூகத்துக்குரியவை, பொழுதுபோக்குவதற்குரியவை, ஆழ்நத தகவல் தேடுகையை அவை கொண்டிருப்பதில்லை போன்ற தவறான கற்பிதங்கள்.
•    இணையத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு மேலதிகமாகத் தேவைப்படும் தொழினுட்ப அறிவு போதாமை அல்லது இல்லை.
•    அச்சுருவத் தகவல்களைக் கணிசமாகப் பயன்படுத்தும் பாவனையாளரும் இணையத் தளத்தைப் பயன்படுத்தக்கூடிய போதுமான தொழினுட்ப அறிவைக்  கொண்டிருக்கவில்லை.
•    இணையத் தளங்களைப் பயன்படுத்தினுங் கூட அவற்றை உசாத்துணையாகச் சேர்ப்பதில் கவனம் எடுக்காமை.


கட்டுப்படுத்தல் சார்ந்த அணுகுகை
தனிநபர் சார்ந்து நோக்கும் போது ஒரு நிகழ்வு தொடர்பாக ஒவ்வொரு தனிநபரினதும் அணுகுமுறை அந் நிகழ்வைப் உண்மையானதாவோ, பொய்யானதாகவோ மாற்றி விடக் கூடும். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட தகவலை ஒருவர் உற்பத்தி நோக்கிலும் இன்னொருவர் பயன்பாட்டு நோக்கிலும் அணுக வாய்ப்புண்டு. இது தனிமனிதனது சூழல், அறிவாற்றல் போன்றவற்றிலேயே பெரிதும் தங்கியுள்ளது.    உருவிலும் உள்ளடக்கத்திலும் பலதரப்பட்டதாக அமையும் தகவல் வளங்களிலோ அல்லது தொலைக் காட்சி போன்ற தொடர்பு சாதனங்களிலோ அதுவுமன்றிக் கணினி சார்ந்த இணையத் தளங்களிலோ எதைப் பார்ப்பது என்று தனிநபர் மேற்கொள்ளும் தீர்மானத்தைப் பொறுத்ததாகத் தகவல் அணுகையும் இருக்கும். அதே போன்று நிறுவனம் சார்ந்து ஒரு நூலக தகவல் நிறுவனம் ஒன்று எதைத் தனது இருப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுக்கின்றதோ அல்லது தொலைக் காட்சி போன்ற பொதுசனத் தொடர்பு ஊடகம் எதை, எப்படி, எப்போது, எவ்வளவு காலத்தில், எந்த வடிவில், எத்தகைய தொழினுட்பத் தரத்தில் அதை கொடுக்க வேண்டும் என முடிவெடுக்கின்றதோ அதற்கமைய தகவல் அணுகுகையும் அமையும். இதிலிருந்து கட்டுப்பாடு சார்ந்த அணுகுகை ஒரு சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார அம்சங்களுடன் மிகவும் பின்னிப் பிணைந்ததொன்று என்பது தெளிவாகின்றது. தனிமனித உணர்வுகள், ஆர்வங்களை மையப்படுத்தி இலாபம் ஈட்ட விரும்பும் பொதுசனத் தொடர்பு சாதனம் ஒன்று (பத்திரிகை) அதற்கேற்ற தகவலையே தனக்குள் கொண்டிருக்கும். அதேசமயம் சமூக நலனை முக்கியமானதாகக் கருதும் பத்திரிகை ஒன்று அதற்குரிய தகவலைக் கொண்டிருக்கும். அரசியல் சார்ந்து நோக்கும் போது நாட்டின் அதிகார அமைப்பின் கொள்கை வகுப்புக்கு அமையவே தகவல் அணுகுகையும் இருக்கும். பொதுவாகச் சட்டரீதியான தீர்மானங்கள் தனிநபரை விட நிறுவனங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன.

முடிவுரை.
ஈழத் தமிழ்ச் சமூகத்தில் தகவலை அணுகுதல் தொடர்பான ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவி;ல்லை. பொருள் வளத்தால் மேலோங்கிய சமூகத்தைக்; கூட சுலபமாகத் தகர்த்து விடும் வல்லமை அறிவாற்றலால் மேலோங்கியிருக்கும் சமூகத்திற்கு உண்டு என்பது அனைவரும் அறிந்த உண்மை. எனவே தகவல் அணுகுகை தொடர்பான மேலதிக ஆய்வுகள் சமூக முன்னேற்றத்தின் அடிக்கட்டுமானமாக அமைய வேண்டும் என்ற யதார்த்தத்தை உணரும் நிலைக்கு ஈழத் தமிழ்ச் சமூகம் விரைவில் மாறவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அவ்வாறு மாறும் போது இந்த ஆய்வானது தகவல் அணுகுகை தொடர்பாக ஆய்வுகளுக்கான தொடக்க நிலையாக அமையும்.



1.      Bhattacharya,G. Information Science: a unified view through a systems approach.Calcutta :IASLIC,1978.
2.      Braman,S. Defining Information: an approach for policy makers. Telecommunication policy. 13(3), 1989, 233-242.
3.      Brillouin,L.  Science and Information Theory, New York: Academic Press,1956.ppxi.
4.      Buckland,M.K. Information as Thing. Journal of the American society for Information Science. 42(5), 1991,pp351-60.
5.      Encyclopedia of Information and Library science. Vol. 5. New Delhi:Akashdeep publishing, 1993.pp1529.
  1. George, Anderia. Information in 1985. A forcasting study of Information needs and resources. Paris:OCD,1975.
  2. Harrod,L.M. Harrod`s librarians` glossary of terms used in librarianship documentation and the book craft and reference book. Compiled by Ray Prytherch,6th ed..- London: Gower,1987.
8.      Hayes, R.M. Measurement of Information. Information Processing and Management. 29(1), 1993. pp1-11
9.      Hayes,R.M. Information Science in Librarianship. Libri.19(3)1969.pp216-236.
10.  Line,M.B. and Sandison. Obsoloscence and changes in the use of literature in time. ( Journal of documentation.vol.30(3),1974.p282-350.
11.  McCreadie, Maureen and Rice, Ronald. E. Trends in Analysing access to information. cross disciplinary conceptualizations of access.[ Information processing and management. 35(1), 1999 . pp 45-76.
  1. Meadows,A.J. Gordon,M & Singleton,A. Dictionary of New Information Technology. London: Kogan Page,1982.
13.  Observations based on the working experience of the Author of this article since 1989
14.  Oxford Advanced Learners’s Dictionary of Current English. London:Oxford University Press, 1989.p611.
  1. Price, Derek De Solla. Little science, Big science and beyond. New york: Colombia University press,1986.
16.  Random House Webster’s College Dictionary. New York: Random House,1995.
17.  Review of the publications of University of Jaffna by the author
18.  Teskey,F.N. User models and world models for data, information and Knowledge. Information Processing and Management, 25(1),1989, 7-14.
19.  UNESCO. Inter-Governmental Conference on Scientific and Technological Information for Development, Paris.UNISIST-II,May28-June,1979. Main working document.
20.  United states, Department of commerce. Memorandam of Information Industry. 1973.
21.  Webser’s Third new International Dictionary of the English Language. Unabridged. Merriam: Springfield, 1971.
22.  Weisman,H.M. Information systems, services and centers.,New york: Wiley-Becker-Hayes, 1972.


  1. . [Camuka Arivu, 2005].





No comments:

Post a Comment