எனது நோக்கில்.......

அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.

இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

13-09-2014


Sunday, September 14, 2014

தகவல் வள அபிவிருத்திக் கொள்கை



1. வளர்ச்சிப் போக்கு
தகவல்;; வள அபிவிருத்தி என்ற சொல் தகவல் வளங்களின் சேகரிப்பில், தகவல் அமைப்பினதும் அதன் அலுவலர்களதும் பங்கு பற்றிய சிந்தனையிலிருந்து தோன்றிய வெளிப்பாடாகவே உணரப்படுகின்றது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரைக்கும் தகவல் வள அபிவிருத்தியில் தகவல் அமைப்பின் அலுவலர்களது பங்கு பற்றி எந்தவொரு கருத்துநிலையும் பதியப்படவில்லை. தகவல் அமைப்பின் தன்மையைப் பொறுத்து தகவல் வளங்களிலும் வேறுபாடு காணப்பட்டது. பொது நூலகங்களின் நூற்தேர்வில் வாசகனின் தகவல் தேவையைப் புரிந்து கொள்வதற்கான அவசியம் உணரப்பட்ட போதுங்கூட அதில் கவனஞ் செலுத்தப்படவில்லை. மாறாக நூலை மதிப்பீடு செய்து நன்கு பரிந்துரை செய்யப்பட்ட நூல்களின் பட்டியலிலிருந்து நூற்தேர்வு செய்வதும் புதிய நூல்களைத் தேர்ந்த பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதுமே பண்பாக இருந்தது. தகவல் வள அபிவிருத்தியின் இந்த ஆரம்பக் கட்டத்தில் தனித்தனியாக ஒவ்வொரு நூலும் மதிப்பீடு செய்யப்பட்டமையால் ஷநூல் தெரிவுஷ ஜடீழழம ளநடநஉவழைஸெ என்ற கருத்துநிலை தோற்றம் பெற்றது. இது தகவல் வள அபிவிருத்திக் கொள்கையின் ஆரம்பக் கட்டம் என அறியப்பட்டது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் நூல் தெரிவு என்ற கருத்துநிலையைவிடவும் கூடுதலான பொருள் தரும் ஷதொகுதி ஆக்கம்ஷ அல்லது ஷசேகரிப்புக் கட்டுமானம்' ஜஊழடடநஉவழைn டிரடைனiபெஸ என்ற கருத்துநிலை தோற்றம் பெற்றது. நூல்களைத் தனித்தனியாக மதிப்பீடு செய்யும் நிலையிலிருந்து மாறி நூலகத்தின் முழுத்தொகுதியிலும் கவனம் செலுத்தவேண்டிய நூலகரின் பங்கு பற்றி இது வலியுறுத்தியது. தகவல் சாதனங்களின் அதிகரிப்பும், அவற்றின் பௌதிக வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களும், நூலகத்தின் நிதிவளப்பயன்பாடும் இணைந்து தொகுதி ஆக்கம் என்ற கருத்துநிலையை மேலும் விரிவடையச் செய்தன. இது தகவல் வள அபிவிருத்திக் கொள்கையின் இரண்டாவது கட்டம் என அறியப்பட்டது. பலதரப்பட்ட வழிகளினூடாகவும் பெறப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்ட நூற்தொகுதியின் உபயோகத்தை தொகுதி ஆக்கம் என்ற தத்துவமானது மேலும் ஊக்குவித்தது. எடுத்துக்காட்டாக நூல்வெளியீட்டாளர்கள,; நூல் விநியோகஸ்;தர்கள் போன்றோர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சேகரிப்புக்களை அதன் மூல வடிவத்திலும், மறுபதிப்பு வடிவத்திலும் வழங்கத் தொடங்கினர். இன்னும் பலர் ஆராய்ச்சி நூல்களை நுண்வடிவங்களில் வாங்க ஆரம்பித்தனர். நூலைத் தனித்தனியாகத் தெரிவு செய்யவோ, மதிப்பீடு செய்யவோ அவசியமின்றி நூலக அலுவலர்களது நேரத்தை வீணாக்காது ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட நூல்களுக்கான கொள்வனவுக் கட்டளைச் சேவைகளை நூல் வழங்குனர்கள் ஆரம்பித்தனர். மட்டுப்படுத்தப்பட்ட நிதியுடன் பணிபுரியும் நூலகங்கள் தமது ஆளணிகளை விரிவாக்கும் தேவையின்றி இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி குறுகிய காலத்திலேயே தொகைரீதியாகத் தமது வளத்தைக் கட்டியெழுப்பும் வாய்ப்பைப் பெற்றனர்.
தொகுதி ஆக்கம் என்ற கருத்துநிலை பொருளாதாரச் சூழல் மாற்றங்களால் 1970களின் பிற்பகுதியில் தனது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்தது. நூல்களின் அதிகரிப்பில் ஏற்பட்ட வேகமான அதிகரிப்பும,; நூலக வளங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இணைந்து தொகுதி ஆக்கம் என்ற கருத்துநிலையை மேலும் வலுவிழக்கச் செய்து, இக்கருத்து நிலைக்குப் பதிலாக 'சேகரிப்பு அபிவிருத்தி' Collection development அல்லது தகவல் வள அபிவிருத்தி' Information Resources development  என்ற புதிய கருத்து நிலையின் தோற்றத்திற்கு வித்திட்டது. 

வட அமெரிக்கக் கல்விசார் நூலகங்களிலிருந்து தோற்றம் பெற்ற சேகரிப்பு அபிவிருத்தி அல்லது தகவல் வள அபிவிருத்தி என்ற கருத்துநிலையானது நூலக சேகரிப்புக்களை முறையான வகையில் கட்டியெழுப்புதல் என்ற கருத்தைக் குறித்து நிற்கிறது. அதாவது நூலகத்தில் ஏற்கனவே உள்ள சேகரிப்புகளை முன்னேற்றுதல், காலத்தோடு ஒட்டிய வகையில் புதுப்பித்தல், வாசகர்களுக்குக் கூடுதல் பயன்தரத் தக்க வகையில் கட்டியெழுப்புதல் என்ற கருத்தைக் குறித்து நிற்கிறது. தகவல் வள அபிவிருத்தி என்ற கருத்துநிலையில் வாசகனின் தேவை, அறிவுத்துறைகளின் தொகுப்பு, அறிவுத்துறைகளுக்கிடையிலான தொடர்பு ஆகிய மூன்று முக்கிய பகுதிகள் அடங்கியுள்ளன. இந்த மூன்று கட்டுமானங்களிலிருந்தும் வெளிப்படும் தகவல் வளத்  திட்டமிடல், தகவல் வள அமுலாக்கம், தகவல் வள  மதிப்பீடு என்ற மூன்றும் ஓன்றிணைந்ததே தகவல் வள அபிவிருத்தியாகும் என்கிறார் டீயரபாஅயn என்ற அறிஞர். தகவல் வள ஈட்டல், தகவல் வள நீக்கம் அல்லது விலக்கல் ஆகிய இரு மூலக்கூறுகள் தகவல் வள அபிவிருத்தியின் இரு கண்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.

2. தகவல் வளத் தெரிவு  Information resources selection

திடகாத்திரமான தகவல் வளத் தொகுதியைக் கட்டியெழுப்பும் நோக்குடன் ஒரு தகவல் அமைப்பு தனது வாசகர்களுக்;கு வேண்டிய முக்கியமான, தரமான தகவல் வளங்களைச் சில வரையறைக்குட்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தெரிவுசெய்தல் தகவல் வளத் தெரிவு எனப்படும்.  பொருத்தமான நேரத்தில், பொருத்தமான இடத்தில், தகவல் வளங்களையும் வாசகர்களையும் பொருத்தமான முறையில் இணைத்து விடுவதற்கு அத் தகவல் அமைப்பு சிறந்த தகவல் வளத் தொகுதியைக் கொண்டிருத்தல் அவசியம். இன்று உலகில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் பல்லாயிரக்கணக்கான மொழிகளில் வெளியிடப்படுகின்றன. அறிவியல் புரட்சி, விஞ்ஞான வளர்ச்சி இரண்டினாலும் அறிவியல்  தொழிநுட்ப  இலக்கியங்களின் வளர்ச்சி அபரிமிதமான நிலையை அடைந்துள்ளது. இது  தகவல் வெடிப்பு Information explosion  என்ற காலகட்டத்திற்கு மனித சமூகத்தை இட்டுச் சென்றிருக்கிறது. இத்தகைய நிலையில் வரையறுக்கப்பட்ட நிதியைக் கொண்டு தகவல் அமைப்புக்குத் தகவல் வளங்களைத் தெரிவு செய்யவேண்டிய தேவை ஏற்படுகின்றது. இதனாலேயே ஒவ்வொரு தகவல் அமைப்புக்கும் தகவல் வளத் தெரிவு என்பது மிக முக்கிய தொழிற்பாடாகக் கருதப்படுகின்றது
எந்தவொரு தகவல் அமைப்பிலும் தகவல் வளத் தெரிவுக் கொள்கையானது பின்வரும் அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
•    தகவல் அமைப்பின் நோக்கம்
    கல்வி சார் தகவல் அமைப்பாயின் பாடவிதானத்தின் தகவல் தேவைகளுக்கு உதவுதல், பொது மக்களுக்கு உதவும் தகவல் அமைப்பாயின் ஓய்வு நேரத்தைக் கழிக்கவோ அல்லது பொழுதுபோக்குத் தேவைகளுக்கோ உதவுதல், உசாத்துணைத் தகவலுக்கான அல்லது பேணிப்பாதுகாக்கப்படவேண்டிய அரிய தகவலுக்கான சேமிப்பகமாகத் தொழிற்படல், தொழில் முயற்சிக்கான தகவலை வழங்குதல், மிக அண்மைக்காலத் தகவலைப் பெறுவதற்கான மையமாகத் தொழிற்படல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாகவோ தகவல் அமைப்பின் நோக்கம் அமையக்கூடும். இத்தகைய நோக்கங்கள் முதலிலேயே வரையறை செய்யப்படுதல் அவசியம் என்பதுடன் தகவல் வளத் தெரிவு மேற்கொள்ளப்படுமுன்னரேயே வடிவமைக்கப்படல் அவசியமாகும்.
•    சமூகத்தின் தேவைகள்;;
    தகவல் அமைப்பொன்று தான் சேவை செய்யும் சமூகத்தின் தேவைகளை இனங் காணல் அவசியமாகும். சமூக உறுப்பினர்களின் வயது, தொழில், இனக் குழுமங்களின் சேர்க்கை, ஆற்றல், ஆர்வங்கள், அவர்களின் தகவல் தேவைகள் என்பவற்றை உள்ளடக்கிய சமூகப்பகுப்பாய்வு ஒன்றின் மூலம் சமூகத்தின் தேவைகளை இனங்கண்டு கொள்ளமுடியும். பாடசாலைச் சமூகம் ஒன்று நூல்களை விடச் சலனப் படங்களுக்கோ அல்லது படத்துணுக்குகளுக்கோ முக்கியத்துவம் வழங்கக்கூடும். அதேநேரம் பல்கலைக்கழக சமூகமொன்று ஆய்வுக்கு உதவும் தனிப்பொருள் நூல்களுக்கோ அல்லது பருவ இதழ்களுக்கோ முக்கியத்துவம் வழங்கக்கூடும்.
•    தகவல் தொகுதியின் வியாபகமும் ஆழமும்;
    தகவல் தொகுதியின் வியாபகம் என்பது பொருட்துறையின் பரந்துபட்ட தன்மையையும் ஆழம் என்பது குறிப்பிட்ட பொருட்துறையின் விரிவுத் தன்மையையும் குறிக்கும். தகவல் தொகுதியின் விரிவும் ஆழமும் தொடர்பான கொள்கையானது தகவல் வளத் தெரிவுக்கு மட்டுமன்றி தணிக்கை சம்பந்தமான பிரச்சனைகளையும் தீர்க்க உதவும். சர்ச்சைக்குரிய ஆவணம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு அதற்கான எதிர்ப்பு ஏற்படும் சமயங்களில் அது தகவல் அமைப்பின் கொள்கைக்கு உட்பட்டே வாங்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு கொள்கை வகுப்பு உதவும்.
•    ஈட்டல் செய்யப்பட வேண்டிய தகவல் வகை
    பொதுவாக தகவல் அச்சு வடிவில் தான் பெறப்படுகிறது. குறிப்பிட்ட தகவல் வகைக்கு எந்த வடிவம் சிறந்தது என்பதை அறிந்திருக்க வேண்டியது கொள்கைவகுப்பாளருக்கு முக்கியமானதாகும். தகவல் அமைப்பின் பாவனையாளர் தனது தகவல் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு வடிவத்தைத் தெரிவு செய்வாராயின் அங்கு பிரச்சனை எழுவதற்கு வாய்ப்புக் குறைவு. ஆனால் அவர் ஒரு தகவலை ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களில் (நூல், கணினிப் பதிவுகள்,) தெரிவு செய்ய முயற்சிப்பின்,  தகவலைச் சிறந்த முறையில் தொடர்புபடுத்துவதற்கு உதவும் மிகச் சிறந்த ஆவண வடிவத்தைத் தீர்மானிப்பதற்கு அவருக்கு தகவல் வகைகளின் பண்பு தொடர்பான அறிவு அவசியமாகும்.
•    நிதி நிலைமை
    தகவல் அமைப்பு ஒன்று எத்தகைய சாதனத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதையும் வருடாவருடம் இம்முன்னுரிமையில் மாற்றங்கள் செய்யப்படவேண்டுமா என்பதையும் தீர ஆராய்வதன் பொருட்டுப் பலதரப்பட்ட தகவல் சாதனங்களுக்கான நிதி ஒதுக்கீடானது வருடா வருடம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். பிரபல அறிவியல் அறிஞரின் ஆய்வுக் கட்டுரை ஒன்று நூல் வடிவிலும் ஒளிப்பட வடிவிலும் வெளியிடப்பட்டிருக்குமாயின் மட்டுப்படுத்தப்பட்ட நிதியமைப்பைக் கொண்ட தகவல் அமைப்பானது நூலை மட்டுமே வாங்க முடியும். தகவல் அமைப்பிடம் போதியளவு நிதி இருக்குமாயின் தெரிவு என்ற கருத்துநிலை பெரிதளவில் முக்கியத்துவம் பெறாது. தகவல் தேவையையும், சிறந்த வடிவத்தையும் மதிப்பாய்வு செய்வதற்கு வேண்டிய தொழிற்றிறனை தகவல் அமைப்பின் நிர்வாகி பெறவேண்டிய தேவையும் இருக்காது.
•    இடவசதி
    தகவல் அமைப்பு ஒன்றின் சேமிப்பையும் அதன் தகவல் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு பலதரப்பட்ட தகவல் சாதனங்களுக்கும் தேவைப்படும் இடவசதி தீர்மானிக்கப்படவேண்டும். நுண்வடிவங்கள் மூடிய இழுப்பறைகளில் பேணப்பட வேண்டும். அதேசமயம் நூல்களுக்குத் திறந்த அணுகுகையுடன் பெரியளவு இடம் ஒதுக்கப்படவேண்டும். எனவே தகவல் அமைப்பு ஒன்றின் தற்போதைய இடவசதியையும் அவ் வசதியை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் கருத்தில் கொண்டே எத்தகைய தகவல் சாதனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.
•    சாதனங்களின் பயன்பாடு பற்றிய கொள்கை
    தகவல் சாதனங்களைப் பயன்படுத்தும்போது அதைப் பயன்படுத்தும் வாசகனது வகை, அதற்;கு அறவிடப்படும் தொகை, அது இரவல் வழங்கப்படக்கூடியதா, எவ்வளவு காலம் இரவல் வழங்கப்படலாம், குறிப்பிட்ட காலத்துக்குமேல் இரவல் வைத்திருப்பதற்கான அறவீடு, குறிப்பிட்ட தகவல் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள், தகவல் சாதனத்துக்குப் பாதிப்பு, சேதம், இழப்பு என்பன ஏற்படும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய அறவீட்டுத் தொகை, உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் என்பன தொடர்பான கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

•    தகவல் சாதன பயன்பாட்டு உபகரணத் தேவைகள்
    பலதரப்பட்ட தகவல் வளங்;களையும் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் உபகரணங்களின் அளவு பற்றிய தீர்மானம் கொள்கையில் இடம்பெற வேண்டும். கணிசமானளவு நுண்வடிவங்களைச் சேமித்து வைத்திருக்கும் தகவல் அமைப்பு ஒன்று நுண்பட வாசிப்புக் கருவியில் ஒன்றை மட்டும் வைத்திருக்குமாயின் பயனுள்ள சேவையை வழங்க முடியாது. தகவல் சாதனம் பயன்படுத்தப்படும் ஊடகத்தின் வகை, அதன் தரம், அதன் எண்ணிக்கை என்பவற்றைப் பொறுத்துத் தகவல் சாதனத்தின் பாதிப்புத் தங்கியிருப்பதன் காரணமாகத் தகவல் சாதனங்களையும் அதற்கான உபகரணங்களையும் பராமரிப்பது தொடர்பான முக்கியத்துவம் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

•    உபகரணங்களின் பண்புகள்
    குறிப்பிட்ட உபகரணம் ஒன்றின் பாவனையையும் பாவனையின் தன்மையையும் நிர்ணயிக்கும் ஆற்றல் அவ் உபகரணத்தின் பண்புகளுக்குண்டு. எடுத்துக்காட்டாக கல்வி நிறுவனங்கள், பொதுப்பணி நிறுவனங்கள் போன்றவை பெருந்தொகை மக்கள் குழுவிற்குத் தகவலைப் பரப்புவதற்கு அசையும் படங்களைப் பயன்படுத்துகின்றன. அதேசமயம் நூல்களோ தனித்த ஒரு நபரால் மட்டுமே பயன்படுத்தப்படக் கூடியவை. அசையும் படங்களை இயக்குவதற்கு, இயக்கும் உபகரணமும், சரியான கட்புல செவிப்புல சூழலும் தேவைப்படும் அதேசமயம் நூலுக்கோ எந்தவொரு உபகரணமும் சூழலும் தேவைப்படுவதில்லை. எனவே தகவல் அமைப்பொன்றின் நிர்வாகி உபகரணத்தின் தன்மையையும் அதன் பௌதிக அம்சங்கள் பாவனைத்தன்மை என்பவற்றையும் கருத்தில் கொண்டு தெரிவை மேற்கொள்ள வேண்டும்.

•    தகவல்வள முன்;;னுரிமை
    ஒரு குறிப்பிட்ட தகவலுக்கு எந்தவகையான உபகரணம் சிறந்தது என்பது ஆராயப்படல் வேண்டும். படத்துணுக்குகள் சிறுவர்களால் விரும்பிப் பார்க்கப்படும் அதேசமயம் வளர்ந்தோர் படத்; துணுக்குகளைவிடவும் செவிப்புலப் பதிவுகளிலேயே ஆர்வம் காட்டுவர். சிலருக்கு நூல்கள் பிடித்தமாக இருக்க சிலர் இணையத் தளங்களில் அதிகம் ஈடுபாடு காட்டுவர். எனவே தகவல் அமைப்பு வாசகர்களின் தன்மையையும் அவர்களின் முக்கிய தேவைகளையும் கருத்தில் கொண்டு தகவல் வளங்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

•    தகவல் பொதியிடலின் போக்குகள்
    ஆரம்பகாலத்தில் நூல் வடிவில் இருந்த தகவல் பொதியிடலின் போக்குகள் தற்காலத்தில் கணினி வடிவங்களுக்கு மாறிவிட்டது. மரபு ரீதியான சாதனங்களில் வெளிவந்த தகவல்களில் பெரும்பாலானவை நுண்வடிவங்களிலும் இலத்திரனியல் வடிவங்களிலும் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக அசையும் படங்கள் 16 அஅ இலும் ஒளிப்பட வடிவிலும் கிடைக்கக்கூடியதாகவுள்ளன. நுண் கணினிகள் அதன் சேமிப்பு ஆற்றலிலும் பலதரப்பட்ட பிரயோகங்களிலும் இலகுவான பயன்பாட்டிலும் கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளன. எனவே இத்தகைய புதிய போக்குகளை இனங்கண்டு ஒரு சாதனத்தின் ஆயுட்காலம், பயன்பாட்டுத்தன்மை, வழக்கற்றுப் போகும் தன்மை என்பவற்றை ஆராய்ந்து தகவல் வளத் தெரிவில் அவற்றை உள்ளடக்குவது அவசியமானதாகும்.

3 தகவல் வள ஈட்டல் ஜயுஉஙரளைவைழைஸெ
ஈட்டல் செயற்பாடுகளில் தெரிவு, சரிபார்த்தல், கொள்வனவுக் கட்டளை அனுப்புதல், பெறுதல், பதிவு செய்தல் போன்ற அம்சங்கள் உள்ளடங்குகின்றன.  பொதுவாக தகவல் அமைப்பு ஒன்று தனக்கு தேவையான தகவல் சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தேவைப்படும் செயல்முறைகளே ஈட்டல் என வரைவிலக்கணப்படுத்தப்பட்டபோதும் உண்மையில் தகவல் அமைப்பு ஒன்றிற்கு கொள்வனவு, அன்பளிப்பு, பரிமாற்றம், அங்கத்துவம் போன்ற வழிமுறைகளுடாகத் தகவல் வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான செயல்முறைகள் அனைத்தையும் குறிக்கும் பொதுப்பதமாகவே ஈட்டல் என்ற பதம் கருதப்படுகின்றது. தகவல் வள அபிவிருத்தி சிறப்பான முறையில் அமுல்படுத்தபட வேண்டுமாயின்; தகவல் வள ஈட்டலுக்குத் தகவல் அமைப்பின் பலதரப்பட்ட துணைப்பிரிவுகளின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.

3.1 ஈட்டல் கட்டங்கள்
தகவல் வள ஈட்டல் கட்டங்கள் பற்றிப் பலதரப்பட்ட கருத்துநிலைகள் பலதரப்பட்ட ஆசிரியர்களினால் முன் வைக்கப்பட்ட போதும் னுநஎநடழிiபெ டiடிசயசல உழடடநஉவழைn என்ற நூலில் நுஎயளெ என்பவர் குறிப்பிடும் பின்வரும் நான்கு வகையான நூலீட்டல் கட்டங்கள் பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்.

•    பொதுச் சேகரிப்புகள்
பொதுவான வாசக மட்டத்துக்குச் சேவை புரியும் வகையில் பொதுவான பொருட் துறைகள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. உசாத்துணைச் சேகரிப்புகள் இதற்குள் உள்ளடக்கப்படுவதில்லை. நூல் நீக்கச் செயற்பாடுகள் தொடர்ச்சியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
•    தொழிற்படு சேகரிப்புகள்
இத்தகைய சேகரிப்புகளில் நிகழ்கால சேகரிப்புகள் உள்ளடக்கப்பட்டு பழைய சேகரிப்புகள் விலக்கப்படுகின்றன. சொல்லடைவாக்கப் பருவ இதழ்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன் நுண்வடிவ வெளியீடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேகரிப்பில் இடம் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
•    ஆய்வுச் சேகரிப்புகள்
உசாத்துணைப் பணிகள், சுழற்சிப் பணிகள் இரண்டையும் மேற்கொள்ளும் விதத்தில் குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்த அனைத்து அண்மைக்கால வெளியீடுகளையும் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நூல் களைவுக்கு இங்கு இடமளித்தல் கூடாது என்பதுடன் பருவ கால ரீதியில் இவை நூல் இருப்புப் பகுதிக்கு இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
•    முழுமையான சேகரிப்புகள்
குறித்த பொருட்துறை சார்ந்த அனைத்து வெளியீடுகளையும் சேகரிப்பதற்கான முயற்சியை இது குறித்து நிற்கிறது. குறிப்பாக அரிய நூல்களுக்கும் விலை கூடிய நூல்களுக்கும் நிதியைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியையும் இது குறித்து நிற்கிறது.

3.2 தகவல் வளங்களைப்  பெறும் வழிவகைகள்
தகவல் அமைப்பு ஒன்று நன்கொடை பரிமாற்றம் அங்கத்துவம் கொள்வனவு போன்ற நான்கு வழிமுறைகளில் தகவல் வளங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அன்பளிப்புகள்
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் தமது தகவல் வளச் சேர்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு நன்கொடையிலேயே பெரிதும் தங்கியுள்ளன. நூலகங்கள்,  நூலக நலன்புரிச் சங்கங்கள்,  தனிப்பட்ட நபர்கள் போன்றோர் தகவல் அமைப்புகளுக்கு நன்கொடையாக தகவல் சாதனங்களையோ அல்லது அவற்றை வாங்குவதற்கான பணத்தையோ வழங்குவார்கள்.  வளர்முக நாடுகளிலுள்ள தகவல் அமைப்புகள்; மேலைத்தேய நாடுகளில் வெளியாகும் தரமுயர்ந்த சாதனங்களைப் பணங்கொடுத்து வாங்கமுடியாத சூழ்நிலையில் இத்தகைய நன்கொடைகள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளிலுள்ள சில தகவல அமைப்புகள் நன்கொடையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
இலங்கையிலுள்ள அனேகமான நூலகங்கள் ஆசிய பவுண்டேசன் ஜயுளயை கழரனெயவழைஸெ போன்ற நிறுவனங்களிடமிருந்து காலத்திற்குக் காலம் அன்பளிப்பு நூல்களைப் பெற்றுக்கொள்கின்றன.  இதனைவிடச் சில தனிப்பட்ட நிறுவனங்கள் தமது வெளியீடுகளைக் காலத்திற்குக் காலம் நன்கொடையாக அனுப்பிவைப்பதும் உண்டு.  நன்கொடையின் அடிப்படையில் நூல்களைப் பெற்றுக்கொள்ளும்போது நூலகத்தின் தேவை, இடவசதி என்பவற்றைக் கருத்தில் கொண்டு தமக்குத் தேவையான நூல்களை மட்டுமே நூலகர்கள் தெரிவுசெய்தல் வேண்டும். பழுதடைந்த நூல்கள், தேவையற்றதெனக் கருதப்;படும் நூல்கள் போன்றவற்றை நன்கொடையாக ஏற்றுக்கொள்ளுதல் கூடாது.
தகவல் அமைப்பொன்றிற்கு அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளும்போது பின்வரும் அம்சங்களைக் கருத்தில் கொள்வது பயன்தரக்கூடியதொன்றாகும்.
•    தகவல் அமைப்பொன்றிற்குப் புதிய சாதனங்களைத் தெரிவு செய்வதற்குப் பின்பற்றப்படும் அதே நியமங்களின் அடிப்படையிலேயே அன்பளிப்பாகப் பெறப்படும் சாதனங்களும் மதிப்பிடப்படல் வேண்டும்.
•    அன்பளிப்பாக வழங்கப்படும் சாதனங்களுக்கான விபரப்பட்டியை முன்கூட்டியே அனுப்பி வைக்குமாறு அன்பளிப்பாளர்களைக் கோருவதன் மூலம் அன்பளிப்புக்களின் பெறுமதியை மதிப்பிடமுடியும். அன்பளிப்புகளின் எண்ணிக்கை 5 அல்லது அதற்கும் குறைவாக இருப்பின் விபரப்பட்டி இன்றித் தொலைபேசித் தொடர்பு மூலமே மதிப்பிடலாம்.
•    விசேட வசதிகள், கட்டுப்பாடுகள், அலுவலர்களின் தேவையின்றி ஏற்கனவே பேணப்படும் தகவல் தொகுதியுடன் ஒன்றிணைக்கக்கூடிய தன்மை பெறப்படும் அன்பளிப்புகளுக்கு உண்டா என்பது பரிசோதிக்கப்படல் வேண்டும்.
•    வருடாவருடம் புதுப்பிக்கப்படவேண்டிய தேவையுள்ள சாதனங்களை (பருவஇதழ்கள், புதிய பதிப்புகள்) அன்பளிப்பாகப் பெறும்போது தகவல் அமைப்பின் நிதியாற்றல் கருத்தில் கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதா, விடுவதா என்பது தீர்மானிக்கப்படல் வேண்டும். செய்தித்தாள்கள் பருவஇதழ்கள் போன்றவற்றை அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளும்போது எதிர்காலத்தில் புதிய இதழ்களை அவற்றுடன் சேர்த்துக்கொள்ளும் ஆற்றல் இல்லாதுவிடின் தகவல் தொகுதியின் முழுமைத்தன்மையை பேணமுடியாது போய்விடும்.
•    தகவல் தொகுதியில் ஏற்கனவே உள்ள சாதனங்களை அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளுதல் தவிர்க்கப்படல் வேண்டும்.
•    அன்பளிப்பாகப் பெறப்படும் சாதனங்களைப் பராமரித்தல், ஒழுங்கமைத்தல் போன்றவற்றுக்கு ஏற்படும் செலவுகளை அடிப்படையாகக் கொண்டே அன்பளிப்பின் பெறுமதி மதிப்பிடப்படல் வேண்டும்.
•    அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு சாதனத்தையும் இருப்பில் சேர்;த்துக் கொள்ளவும் தேவையற்றதை விலக்கிக் கொள்ளவும் தகவல் வள தெரிவாளருக்கு உரிமை உண்டு என்பதை அன்பளிப்பாளருக்கு தெளிவாக உணர்த்துதல் அவசியமானதாகும்.
•    செய்தித்தாள்கள், பருவஇதழ்கள் போன்றவற்றைத் தற்காலப் பாவனைக்காக( இருப்பிட வசதி, பராமரிப்பு போன்றவை) குறிப்பிட்ட காலத்திற்கு வாசிப்பதற்காக மட்டும் அன்பளிப்பு செய்ய முன்வருபவர்களின் அன்பளிப்புகளை எக்காரணங் கொண்டும் ஏற்றுக்கொள்ளுதல் தவிர்க்கப்படல் வேண்டும். அவற்றை நிரந்தரமாகத் தகவல் தொகுதியில் இணைத்துக் கொள்ளும் வகையில் அன்பளிப்பு நியமங்கள் பின்பற்றப்படல் வேண்டும்.
•    சாதனங்களின் பௌதிக வடிவமைப்பு பாதிப்புறும் சந்தர்ப்பங்களில் (தாள்கள் நொருங்குதல், கிழிதல், ஈரம், பூஞ்சணம் போன்றவை) அவற்றை தகவல் தொகுதியிலிருந்து நீக்கும் உரிமை தகவல் அமைப்பிற்கு இருத்தல் வேண்டும்.
•    அன்பளிப்பு செய்யப்படும் சாதனங்களில் மேலதிக பிரதிகள் இருக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை ஏனைய தகவல் அமைப்புகளுக்கு வழங்கும் உரிமை உள்ளதா என்பது தீர்மானிக்கப்படல் வேண்டும்.
•    பாவனையாளரின் ஆர்வத்துறையுடன் பொருந்தாத அல்லது குறைந்த பாவனையுடைய அன்பளிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்ஃ
•    அன்பளிப்பாகப் பெறப்படும் குறிப்பிட்ட சாதனத்தின் பெறுமதி கருதி அதனை உசாத்துணைப்பகுதியில் நிரந்தர பாவனைக்கு வைப்பதா அல்லது சுழற்சிக்கு விடுவதா போன்ற தீர்மானங்கள் தகவல் அமைப்பை சார்ந்ததாக இருத்தல் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

பரிமாற்றம்
  நூல்களைப் பரிமாற்று அடிப்படையில் பெறுதல் என்பது ஒரு நூலகமானது தனது நிறுவனத்தால் வெளியிடப்படுகின்ற நூல்களையோ அல்லது ஏனைய வெளியீடுகளையோ இன்னொரு நிறுவனத்திற்கு அனுப்பி அங்கு வெளியிடப்படுகின்ற வெளியீடுகளைப் பரிமாற்றாகப் பெறுக்கொள்ளுதல் என்பதாகும். 
உ-ம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்படுகின்ற ளுசடையமெய துழரசயெட ழுக ளுழரவா யுளயைn ளுவரனநைள என்ற சஞ்சிகை பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ளுசடையமெய துழரசயெட ழக வுhந ர்ரஅயnவைநைள என்ற சஞ்சிகை பெறப்படுகிறது.  பேராதனைப் பல்கலைக்கழகம் பெருந்தொகையான சஞ்சிகைகளைப் பரிமாற்று அடிப்படையில் பெற்றுக்கொள்வது குறிப்பிடக் கூடியதாகும். சில வெளியீடுகளை குறிப்பாக வேற்றுமொழியில் அமைந்த நூல்களை உ-ம் (ரஷ்யா)  சோவியத் வெளியீடுகளின் பரிமாற்றத்தின் அடிப்படையிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.  இவற்றினை பெற்றுக்கொள்வதற்கு நூலகர்கள் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அங்கத்துவம்
அங்கத்துவ முறையில் நூல்களைப் பெற்றுக்கொள்ளுதல் நூல்பெறும் முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.  ஒரு நூலகர் அல்லது நூலகத்தின் தாய்; நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்தின் உறுப்பினராக சேர்ந்துகொள்ளும் இடத்து அந்நிறுவனத்தின் வெளியீடுகள் அன்பளிப்பாகவோ அல்லது குறைந்த விலையிலோ பெற்றுக்கொள்வதற்குச் சாத்தியம் உண்டு.

கொள்வனவு
ஒரு நூலகத்தினால் நன்கொடை, பரிமாற்றம், அங்கத்துவம் போன்ற வழிமுறைகள் மூலம்; பெறப்பட முடியாது எனக் கருதப்படுகின்ற நூல்களே கொள்வனவு செய்யப்பட வேண்டும். கொள்வனவில் பின்வரும் முறைகள் பின்பற்றப்படுகின்றன.
•    வெளியீட்டாளர்களிடமிருந்து நேரடியாகக் கொள்வனவு செய்தல்
அமெரிக்கா பிரிட்டன் போன்ற வெளிநாட்டு நூல் வெளியீட்டாளருடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலம் தகவல் சாதனங்கள் கொள்வனவு செய்யப்படலாம். இம்முறையில் பல பிரதிகூலங்கள் உண்டு. வெளியீட்டாளரிடமிருந்து நேரடியாக இறக்குமதி செய்தலானது மிக அதிகமான கடிதத் தொடர்புகளுக்கு இட்டுச் செல்வதுடன் தகவல் அமைப்பு அலுவலரது வேலைச்சுமையைக் கூட்டுகிறது. கோட்டா முறையைப் பயன்படுத்தி விலையில் கழிவுத்தொகையொன்றை வற்புறுத்துவதே பெரும்பாலான நூலகங்களின் நடைமுறையாக உள்ளது. இத்தகைய கழிவுக்குப் பெரும்பாலான வெளிநாட்டு வெளியீட்டாளர் விரும்புவதில்லை. கழிவு இன்றிப் பெறுவதற்குத் தாய்நிறுவனத்திடமிருந்து விசேட அனுமதியை தகவல் அமைப்பின் நிர்வாகி பெறவேண்டி இருப்பதனால் கால விரயம் ஏற்படுவதுடன் ஒதுக்கப்பட்ட நிதியை அதற்குரிய காலத்தில் பயன்படுத்தமுடியாத நிலையும் ஏற்பட வாய்ப்புண்டாகிறது. இது மட்டுமன்றி வெளிநாட்டு வெளியீட்டாளர் தபால் செலவைச் செலுத்துவதற்கு விரும்புவதில்லை. எனவே நேரடி இறக்குமதி என்பது செலவு கூடியதொன்றாகவே இருக்கமுடியும். வான் போக்குவரத்தின் மூலம் பெறும்போது போக்குவரத்துச் செலவு அதிகமாக இருக்கும். அதேசமயம் கடற் போக்குவரத்தில் கணிசமான நேரம் எடுக்கப்பட்டு குறித்த காலத்துக்கு பின்பேயே சாதனங்கள் வந்தடையும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய கால இடைவெளி அறிவியல் தொழினுட்பத் துறை சார்ந்த தகவல்களைப் பயனற்றதாகச் செய்துவிடும்.

•    அனுமதி முறை:-
இம்முறைமூலம் விசேட நூல் விநியோகஸ்தர்களிடமிருந்து குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்கள் தகவல் அமைப்புக்கு வரவழைக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவதுடன் தெரிவு செய்யப்படாமல் எஞ்சியுள்ள நூல்கள் திருப்பி எடுத்துச் செல்லப்படுகின்றன. தகவல் சாதனம் ஒன்றைப் பௌதிக ரீதியிலும் உள்ளடக்க ரீதியிலும் பகுப்பாய்வு செய்யும் வாய்ப்பை இம்முறையானது நூலகங்களுக்கு வழங்குகின்றது. தலைப்புகள் கவர்ச்சிகரமாகவும் உள்ளடக்கம் சரியற்றதாகவும் வெளிவரும் நூல்களை இனங்கண்டு அவற்றை விலக்குவதற்கு இம்முறை மிகப்பயனுள்ளதாகத் தெரிகிறது. தெரிவு செய்யப்பட்ட நூல்களுக்கு மட்டும் கொள்வனவுக் கட்டளை அனுப்பப்படுகிறது. ஆனாலும் கூட வெளிநாட்டு வெளியீட்டாளர்கள் இம்முறைக்கு பொதுவாக ஒத்துக் கொள்வதில்லை.

•    வெளிநாட்டு வெளியீட்டாளர்களின் பிரதிநிதிகளின் ஊடாக கொள்வனவு செய்தல்
வெளிநாட்டு வெளியீட்டாளர்களில் சிலர் தமது முகவர்களை அல்லது பிரதிநிதிகளை சில நாடுகளில் வைத்திருந்து அவர்களின் ஊடாக நூல் விற்பனையை மேற்கொள்கின்றனர். இவர்கள் குறிப்பிட்ட கழிவு விலைக்கு ஒத்துக் கொள்வதுடன் தபால் செலவையும் ஏற்றுக் கொள்கின்றனர். சிலசமயங்களில் தகவல் அமைப்புக்குத் தேவைப்படும் நூல்கள் இவர்களிடம் இல்லாமல் இருப்பது இம்முறையிலுள்ள குறைபாடாகும்.

•    நூல் விற்பனையாளரூடாக கொள்வனவு செய்தல்
பெரும்பாலான தகவல் அமைப்புகளில் இம்முறையே நடைமுறையில் உள்ளது. பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்களிடமிருந்து கொள்வனவு மேற்கொள்ளப்படுகிறது.
•    அனுமதி முறையின் அடிப்படையில் சாதனங்கள் கொள்வனவு செய்யப்படல் வேண்டும்
•    ஒவ்வொரு சாதனத்துக்கும் குறிப்பிட்ட வீத கழிவு வழங்கப்படல் வேண்டும்.
•    காப்புறுதிச் செலவும் போக்குவரத்துச் செலவும் வழங்குனர்களினால் பொறுப்பேற்கப்படல் வேண்டும்.
•    பாதிப்புற்ற நூல்களுக்கு மாற்றுப்பிரதி வழங்கப்படல் வேண்டும்
•    கலைக்களஞ்சியங்கள், புவியியல் வழிகாட்டிகள், ஆண்டு நூல்கள் போன்ற தொடர் வெளியீடுகள் நிலையான கொள்வனவின் கீழ் பட்டியலிடப்பட்டு நூல் வெளியான கையுடனேயே காலதாமதமின்றி அனுப்பப்படல் வேண்டும்.
•    பழைய பதிப்புக்கு கொள்வனவுக்கட்டளை அனுப்பும் சந்தர்ப்பம் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் பிந்திய பதிப்புகளே  அனுப்பப்படல் வேண்டும்
•    சாதனங்களின் தலைப்புகளில் மாற்றம் ஏற்படுமிடத்து முன்கூட்டியே அறிவித்தல் வேண்டும்.
•    கொள்வனவுக் கட்டளையில் தவறுதலாக ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்பு பதியப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் ஒரு பிரதி மட்டுமே அனுப்புதல் வேண்டும். மற்றய பிரதியை தகவல் அமைப்புடன் தொடர்பு கொண்டு உறுதி செய்த பின்னரேயே அனுப்புதல் வேண்டும்.
•    கொள்வனவுக்கட்டளை அனுப்பும் சந்தர்ப்பங்கள் தவிர பிரதிகள் அனுப்புதல் கூடாது.
இத்தகைய முறையில் பல நன்மைகள் கிடைக்கின்றன. உசாத்துணை சாதனங்கள் காலதாமதமின்றி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கழிவு அதிகமாக இருப்பதனால் தகவல் அமைப்புகளைப் பொறுத்து இம்முறை சிக்கனமானது. வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவு பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. நிதிப்பற்றாக்குறை ஏற்படினும் அடுத்த வருட ஒதுக்கீட்டிலிருந்து சரி செய்யமுடியும். கடிதத் தொடர்பான வேலைப்பளுவும் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு நாணயமாற்று வீதத்தில் அடிக்கடி தளம்பல்கள் ஏற்படுவது இம்முறையில் உள்ள தீமையாகும்.

•    தனிப்பட்ட விநியோகஸ்தர்
தனிப்பட்ட நூல் வற்பனையாளர்கள் நூல்களை இறக்குமதி செய்வதுடன் உள்நாட்டு நூல்களையும் விற்பனை செய்வர். இத்தகைய விற்பனையில் தொழில் போட்டி சகஜம் என்பதனால் கூடுதலான கழிவுவீதத்தை இவர்களிடம் கோரும் வாய்ப்பு தகவல் அமைப்புக்கு உண்டு. எனினும் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகும்.

•    நூலக விநியோகத் திட்டம்
இந்த முறையில் குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்ற வெளியீட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு புதியநூல்கள் நேரடியாகத் தகவல் அமைப்பிற்;கு அனுப்பி வைக்கப்படுகிறது. தெரிவு செய்யப்படுவது தவிர எஞ்சியது நிராகரிக்கப்படுகிறது. தெரிவு செய்யப்பட்ட நூல்களுக்கான கொள்வனவுக்கட்டளைத் தாள் நூல் விநியோகஸ்தரினால்  தயாரிக்கப்படுவதுடன் எஞ்சிய நூல்களையும் அவர்களே திருப்பி எடுத்துச் செல்வர். இறுதி நடவடிக்கை வெளியீட்டாளருக்கும் விநியோகஸ்தருக்கும் இடையில் மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக வெளிநாடுகளிலிருந்து நூல்களைத் தருவிக்கும் செய்முறைக்கு ஆகக்குறைந்தது இரண்டு மாதங்களாவது எடுக்கும். நூலக விநியோகத் திட்டத்தினடிப்படையில் இதைவிட முன்னராகவே நூல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

•    நிலையான கொள்வனவுக் கட்டளை
உசாத்துணை சாதனங்கள், பருவ இதழ்கள் போன்ற தொடர் வெளியீடுகளுக்கு நிலையான கொள்வனவுக் கட்டளை தயாரிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்ற நூல்வழங்குனர்கள் ஊடாக நூல்கள் வெளியிடப்பட்டவுடனேயே தகவல் அமைப்புக்கு அனுப்பப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

4. தகவல் வள நீக்கம் De-acquisition
தகவல் அமைப்பின் அடிப்படைத் தகவல் தொகுதியிலிருந்து முறைப்படுத்தப்பட்ட வகையில் தகவல் வளங்களை நீக்கும் முறை தகவல் வள நீக்கம் எனப்படுகிறது. இது தகவல் வளங்களின் பாவனையிலிருந்து முற்றாக நீக்குதல் தொடக்கம் தகவல் வள இருப்பிலிருந்தும் முற்றாக நீக்கும் பொருட்டு குறிப்பிட்ட தகவல் வளம் சார்ந்த பதிவேடுகளை ரத்துச் செய்தல் வரை உள்ள அனைத்துச் செயற்பாடுகளையும் குறிக்கும்.
தகவல் அமைப்புகள் வளர்ந்துவரும் போக்கைக் கொண்டதற்கமைய அவற்றின் வளங்களும் அதிகரித்துக் கொண்டு செல்லது தவிர்க்கமுடியாததாகும். தகவல் அமைப்பு ஒன்று அளவில் பெரியதோ அல்லது சிறியதோ அவற்றின் மிகப் பெரும் பிரச்சனை இடவசதியாகும். எனவே தகவல் அமைப்பு ஒன்றினால் பெறப்படுகின்ற அனைத்துச் சாதனங்களையும் அவை பழையவையாகவும் பாவனைக்குதவாதவையாகவும் இருந்தாலும் கூட அவற்றைச் சேமித்து வைத்தல் சாத்தியமற்றது. சிறந்த பயனுள்ள சேவையை ஒரு தகவல் அமைப்பு திறம்பட ஆற்றுவதற்கு, தேவையற்றது எனக் கருதப்படுகின்ற நூல்கள் மற்றும் ஏனைய சாதனங்களை பாவனையிலிருந்து விலக்க வேண்டும். அதிக எண்ணிக்கையும், குறைந்த பயன்பாடும் உள்ள தகவல் சேகரிப்பிலும் பார்க்க குறைந்த எண்ணிக்கையும் அதிக பயன்பாடும் உள்ள சேகரிப்பே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. சமநிலைத் தன்மை வாய்ந்த தகவல் வள நீக்கக் கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக தகவல் அமைப்பு ஒன்று தனது தகவல் வள அபிவிருத்திக் கொள்கையை மறுசீரமைப்பதற்கும், நடைமுறையில் தேவைப்படும் செயற்படு ஆவணங்களைப் பராமரிப்பதற்கும், நிர்வாகத்தைத் திறம்பட நடாத்தவும் முடியும். இதற்கென தகவல் வள நீக்கல் குழு ஒன்றையும் அதனூடாக தகவல் வள நீக்கல் கொள்கை ஒன்றையும் உருவாக்குவதன்மூலம் தகவல் வள நீக்கல் செய்முறையில் தவறு ஏற்படாது பார்த்துக் கொள்ள முடியும்.

4.1 தகவல் வள நீக்கல் கொள்கைக்கான தேவை
•    இடநெருக்கடி
தகவல் வளங்களை இருப்பில் சேர்த்துக் கொள்ளும் செய்முறை தொடர்ந்து நிகழும்   போது இடநெருக்கடி என்ற சிரமம் உருவாகிறது. அதனுடன் தொடர்ச்சியாக மனித வளம், நிதி, தளபாடங்கள் போன்றவை தகவல் வள முகாமைத்துவத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
•    பராமரிப்புச் செலவும் இறாக்கைகளின் இடவசதியும்
    இறாக்கைகளில் சாதனங்களைப் பராமரித்தல் என்பது நேரம், உழைப்பு என்ற இரண்டுடனும் சம்பந்தப்பட்டது. தொடர்பற்ற சாதனங்கள் அவ்வப்போது இருப்பிலிருந்து நீக்கப்படுமாயின் பராமரிப்புச் செலவைக் குறைக்கக் கூடியதாக இருக்கும்.
•    இலக்கியங்களின் வழக்கற்றுப்போகும் தன்மை
    தொழினுட்ப அபிவிருத்தியின் விளைவாக மிகக் குறுகிய காலத்தில் தகவல் பயன்பாடற்றதாகவும் வழக்கற்றதாகவும் மாறிக்கொண்டு வருகிறது. எடுத்துக்காட்டாக மின்னணுவியல், கணினியியல் போன்ற துறைகளில் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கிடையில் தகவலின் பெறுமதியில் வீழ்ச்சித்தன்மை நிலவுகிறது. அதேபோன்று மருத்துவத்துறையில் வருடாவருடம் புதிய பதிப்புகள் பழைய பதிப்புகளை வழக்கற்றதாக்கிக் கொண்டிருக்கின்றன. தகவல் விஞ்ஞானத்துறையின் முக்கிய கூறுகளில் ஒன்றான உசாத்துணை வளங்களில் பல, வருடாவருடம் புதுப்பிக்கப்படும்போது பழையவை பெறுமதியற்றவையாக மாறுகின்றன. எனவே இத்தகைய இலக்கியங்களின் பயன்பாட்டை இனங்கண்டு அவற்றை இருப்பிலிருந்து விலக்க வேண்டியுள்ளது.
•    குறுங்கால இலக்கியங்கள்
    செய்தி அறிக்கைகள், சிறுநூல்கள், ஆண்டு அறிக்கைகள் முதலியனவற்றில் பெரும்பாலானவை குறுங்காலப் பெறுமதியுடையன. எனவே இத்தகைய இலக்கியங்களை காலத்துக்குக்காலம் இருப்பிலிருந்து விலக்குதல் அவசியமாகும்.
•    தொடர்பற்ற ஆவணங்கள்
    சில தகவல் அமைப்புகளின் தாய்நிறுவனங்கள் தமது பொருள் ஆர்வத் துறைகளை மாற்றிக் கொள்ளும்போது ஏற்கனவே தகவல் அமைப்பினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சாதனங்கள் தொடர்பற்றதாக மாறிவிடக்கூடும். அதேபோன்று தகவல் வள இருப்பிலுள்ள சாதனங்களில் சில வாசகரால் பயன்படுத்தப்படாமல் இருக்குமாயின் அவையும் தொடர்பற்ற ஆவணங்களாக கருதப்படக்கூடும.; எனவே இத்தகைய சாதனங்களை இனங்கண்டு விலக்குதல் அவசியமாகும்.
•    செயற்பாடற்ற ஆவணங்கள்
சில ஆவணங்கள் குறித்த ஒரு காலத்துக்கு மட்டுமே பெறுமதியுடையவையாகவும் பயன்பாடுடையவையாகவும் உள்ளன. இவற்றை தகவல் வள இருப்பில் தொடர்ந்து வைத்திருப்பின் இவை செயற்பாடற்ற ஆவணங்களை பயனற்றதாக ஆக்கிவிடக் கூடும்.

4.2 நீக்கக்கூடிய ஆவணங்களின் வகை
வழிகாட்டிகள்,ஆண்டுநூல்கள், நூலகப் பட்டியல்கள், குறுங்கால வாழ்வுடைய சஞ்சிகைகள், சிறுநூல்கள், செய்திக் கடிதங்கள், ஆண்டு அறிக்கைகள், முன்னேற்ற அறிக்கைகள், செயற்திட்ட அறிக்கைகள், வழக்கற்றுப்போன ஆவணங்கள், பழைய பதிப்புகள், பூரணப்படுத்தப்படாத பெரிய ஆக்கங்கள், சொல்லடைவுபடுத்தப்படாத பருவ இதழ்களின் விடுபட்ட பிரதிகள், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சுழற்சிக்கு விடப்படாத ஆவணங்கள் எ-டு மூன்று வருடங்களாக வாசகனால் பயன்படுத்தப்படாத புனைகதைகள், தவறான தகவல்களைக் கொண்ட ஆவணங்கள்

4.3 அடிப்படை நியமங்கள்
•    கால அளவு உடனடி உசாத்துணை வளங்களில் பெரும்பாலானவை வருடா வருடம் புதுப்பிக்கப்பட  வேண்டியவை. பழையவை வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்திருந்தாலும் புதிய நூல்களின் பயன்பாட்டைப் பொறுத்து குறைந்த மதிப்புடையவை என்பதுடன் புதிய நூல்களின் தேடலையும் அவற்றின் இருப்பையும் மறைத்துவிடும் அபாயம் இவைக்கு உண்டு.
•    நம்பகத்தன்மை ஒரு பொருட்துறை தொடர்பான தரவுகளிலும் அவற்றின் போக்குகளிலும் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். நேற்று சரியென விவாதிக்கப்பட்டது நாளை பிழையானதாக மாறக்கூடும் அதுபோலவே ஒரு குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக குறிப்பிட்ட தகவல் சாதனம் ஒன்றில் சரியான முறையில் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் சில காலங்களில் பயன்பாடற்றதாக மாறிவிடவும் கூடும்.
•    பயன்பாடு தலைமுறை தலைமுறையாக மனித தேவைகள் மாறிக்;கொண்டே போவதன் காரணமாக நேற்றுப் பெறுமதியுடையதாக கருதப்பட்ட ஒரு உசாத்துணை சாதனமானது இன்று பயன்பாடற்றதாக மாறிவிடவும் கூடும்.
•    பௌதிக நிலை அதிக பாவனை காரணமாக சில தகவல் வளங்கள் பயன்படுத்தமுடியாத அளவுக்கு கிழிந்து போயிருக்கவோ அல்லது பாதிப்படையவோ கூடும்.
•    தகவல் வள தொகுதி தொடர்பான பூரண அறிவு குறிப்பிட்ட சாதனம் ஒன்றைத் தகவல் வள இருப்பில் இருந்து நீக்குவதற்குத் தகவல் வள இருப்புப்பற்றிய பூரண அறிவு நூலகருக்கு அவசியமாகும். குறிப்பிட்ட ஒரு சாதனம் தகவல் வள இருப்பில் இருந்து முற்றாக விலக்கப்பட வேண்டுமா அல்லது அச்சாதனத்தின் புதிய பதிப்பு கொள்வனவு செய்யப்படவேண்டுமா, அதுவுமன்றி அச்சாதனத்துடன்; தொடர்பான ஏனைய சாதனங்களை வாங்கலாமா என்பது பற்றிய முடிவை நூலகரே தீர்மானிக்க வேண்டும்.
•    ஏனைய வளங்கள் தொடர்பான அறிவு உள்ளுரில் வெளியிடப்பட்ட சாதனங்களும், உள்ளுர் பிரதேசம் தொடர்பாக வெளியிடங்களில் வெளியீடு செய்யப்பட்ட சாதனங்களும் எத்;;தனை வருடங்கள் பழையனவாக இருப்பினும் அவை தகவல் வள இருப்பிலிருந்து நீக்கப்படல் கூடாது. குறிப்பிட்ட ஒரு தகவல் வளம் தொடர்பாக பிரதேச, தேசிய ரீதியில் நூலகர்களின் அபிப்பிராயம் என்ன என்பது கண்டறியப்படுவதும் தகவல் வள விலக்கீட்டுக்கு உதவக்கூடியது.
•    பாதுகாக்கப்படவேண்டிய பழைய ஆக்கங்கள் தொடர்பான அறிவு ஒரு நூலின் வயது மட்டும் அதன் விலக்கீட்டை நிர்ணயிப்பதில்லை. எடுத்துக்காட்டாக பல வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியங்கள் இன்றும் பாவனைக்குரியதாக இருப்பது கண்கூடு. எனினும் குறைந்தது 5 வருடங்களுக்கு ஒருமுறையாவது புதிய பதிப்புகளை வாங்குதல் நல்லது. அகராதிகள் எக்காரணம் கொண்டும் விலக்கப்படக்கூடாதவை என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். வாழ்க்கை வரலாற்று நூல்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதனால் அவற்றை பாதுகாத்து வைத்தல் முக்கியமானதாகும். ஐந்தொகுதிகள், ஆண்டு நூல்கள், கைநூல்கள் போன்றவை அவற்றின் புதிய பதிப்புகளை வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பின் 5-10 வருடங்களுக்கொருமுறை விலக்கப்படலாம். வழிகாட்டிகள் 5-10 வருடங்களுக்கு ஒருமுறை  விலக்கப்படல் வேண்டும். புவியியல் சாதனங்களில் விலை குறைந்த தேசப்படத்தொகுதிகள் மட்டும் 5-10 வருடங்களுக்கு ஒருமுறை விலக்கப்பட ஏனையவை சேமிக்கப்படல் வேண்டும். அரசாங்க வெளியீடுகள் பாதுகாக்கப்படுவதற்கு உரியனவே தவிர விலக்கப்படுவதற்கு உரியன அல்ல.

4.4 தகவல் வள நீக்கச் செய்முறை
தகவல் அமைப்பொன்றின் ஆவண நீக்கம் ஒரு தொகுதியில் இருந்து இன்னோர் தொகுதிக்குச் சேர்த்துக் கொள்ளுதல். எடுத்துக்காட்டாக உசாத்துணைப் பகுதியலிருந்து பழைய பதிப்புகளை இரவல் வழங்கும் பகுதிக்கு மாற்றுதல், அடிப்படைத் தகவல் வளத் தொகுதியிலிருந்து இரண்டாம் நிலைத் தொகுதிக்கோ அல்லது தகவல் அமைப்பின் உள்ளுர், பிரதேசக் கிளைகளுக்கோ  மாற்றுதல், தகவல் அமைப்பில் இருந்து முற்றாகவே நீக்கி விடுதல் மூன்று வடிவங்களில் நடைபெறுகிறது

படிநிலைகள்
•    தகவல் வள நீக்கல் உப குழுவின் உருவாக்கம். இதில் தகவல் அமைப்பு பணி செய்யும் தாய் நிறுவனத்தின் தலைவரால்  (பல்கலைக்கழக நூலகமாயின் துணைவேந்தர்) நியமிக்கப்படும் ஒரு தலைவர் தகவல் வள விலக்கீட்டுக்குழுவின் தலைவராகவும்,;, தகவல் அமைப்பின் தலைவர்(நூலகர்) செயலாளராகவும், தாய் நிறுவனத்தின் பல்வேறு துறைகளின் துறைத் தலைவர்களால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினர்களாகவும் இருப்பர். அத்துடன்  முதுநிலை உசாத்துணை நூலகரும்; நிர்வாகப்பிரிவிலிருந்து ஒரு பிரதிநிதியும் என்போரும் இக்குழுவில் அங்கம் வகிப்பர்
•    பழைய ஆவணங்களையும் வழக்கற்றுப்போன ஆவணங்களையும் தகவல் அமைப்பின் அலுவலர்களின் உதவியுடன் இறாக்கைகளில் இருந்து அகற்றுதல்
•    அகற்றப்பட்ட சாதனங்களைப் பார்வையிடுவதற்கென வாசகர் சமூகத்துக்கு சுற்றுநிருபம் ஒன்றை அனுப்புதல்
•    தகவல் வள விலக்கீட்டுக்குழு அங்கத்தவர்களும் வாசகர்களும் இணைந்து அகற்றப்பட்ட சாதனங்களைப் பரிசீலனை செய்தல்
•    விலக்கப்படவேண்டிய  சாதனங்கள் தொடர்பான ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு அது தொடர்பான ஒரு முடிவு அறிக்கையும் விலக்கீட்டு உப குழுவினால்  தயார் செய்யப்படல்
•    அறிக்கையானது தாய் நிறுவனத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு தாய் நிறுவனத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளல்
•    விலக்கப்பட்ட சாதனங்களின் விபரத்துடன் தாய்நிறுவனத்தின் அனுமதியும் உள்ளடங்கிய அறிக்கையொன்றை வெளியிடல்
•    நூலகப்பட்டியல்கள் நூற்சேர்வுப் பதிவேடுகள் போன்றவற்றிலிருந்து விலக்கப்பட்ட சாதனங்களின் நூல்விபரத்தரவுகளை அகற்றுதல்
•    விலக்கப்பட்ட ஆவணங்களுக்கான ஒரு தரவு வங்கியைப் பராமரித்தல்.

முடிவுரை
காலத்துக்குக் காலம் சமநிலைத் தன்மை வாய்ந்த தகவல் தொகுதியை கட்டியெழுப்புதல் பருவகால அடிப்படையில் தகவல் அமைப்பில் இருந்து தேவைப்படாத ஆவணங்களை நீக்குதல் என்ற இரு அம்சங்களையும் சரியான வகையில் நடைமுறைப்படுத்தும் வகையில் தகவல் வள அபிவிருத்திக் கொள்கையை வகுக்கும் எந்தவொரு நூலகமும் அது பெரியதோ அன்றிச் சிறியதோ சமூகத்தின் அறிவுப் பசிக்குத் தீனி போடும் பணியை எவ்வித இடர்ப்பாடும் இன்றி வெற்றிகரமாக மேற்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.


உசாத்துணை நூல்கள்



  1. Cabeceiras, James, The multimedia Library: material selection and use. 3rd ed. London:Academic press,1991.
  2. Futas, Elizabeth,ed. Library acquisition policies and procedures.2nd ed. .- Phonenix : oryx press,1984.
  3. Hernon, Peter and Purcell, Garyr. Developing library collections of US government publications.- London: JAI press,1982.
  4. Line,M.B. Obsoloscence and changes in the use of literature in time. Journal of Documentation. Vol.30,no. 3; Sept,1974.
  5. Mittal,R.L. Library administration.Theory and practice, 5th ed.-New Delhi: Metropolitan book,1983.
  6. Nisonger, Thomas. Collection development in an electronic environment. Library Trends. vol.48(4),spring 2000





[Papers on Library and Information Science, in memory of Ms Thirumahal. 2005]


No comments:

Post a Comment