எனது நோக்கில்.......

அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.

இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

13-09-2014


Saturday, September 13, 2014

நூலக அலுவலர்களுக்கான பொதுசனத் தொடர்புக் கலை

என்ன?
இன்றைய ஊடகங்களில் பரவலாக வழங்கப்படும் பொதுசனத் தொடர்பு
(Public relation)என்ற கருத்துநிலை  அமெரிக்க மண்ணில் கருக்கொண்டதொன்று எனக் கருதப்படுவதுடன் 1897 Year Book of Railway Literature என்ற வெளியீட்டில் தான் இப்பதம் முதன்முதல் பயன்படுத்தப்பட்டதாக புலமையாளர்களால் நம்பப்படுகின்றது. சமூக பொருளாதார ஆன்மீக தேவைகளை திருப்தி செய்யுமுகமாக மக்கள் ஒருவரில் மற்றொருவர் தங்கியிருக்கும் தன்மை அதிகரித்துச் செல்லும் ஒரு காலகட்டத்தில் மனித சமூகம் நடைபயிலுகின்றது. ஒரு நிறுவனத்துக்கும் அந் நிறுவனத்தின் வெற்றியை தீர்மானிக்கும் பலதரப்பட்ட மக்களுக்குமிடையில் ஒருவருக்கொருவர் நன்மையை அளிக்கக்கூடிய உறவுமுறைகளை இனங்காணுதல், உருவாக்குதல், பேணுதல் போன்ற முகாமைத்துவத் தொழிற்பாடே பொதுசன தொடர்புக் கலை எனப்படுகின்றது. இன்னும் விரிவாக விளக்கின்  இரு வழித் தொடர்பு ஊடாக தனது மக்களுடன் புரிந்துணர்வையும் நல்லுறவையும் பேணிக்கொள்வதற்காக கொள்கைகள் நடைமுறைகளினூடாக வெளிப்படுத்தப்படுகின்ற முகாமைத்துவத்தின் சமூக தத்துவமே பொதுசனத் தொடர்பு எனப்படுகின்றது. இந்த வரைவிலக்கணத்திலிருந்து இது நான்கு அடிப்படை மூலக்கூறுகளை கொண்டது என்பது தெளிவாகின்றது..

•    இது ஒரு சமூக முகாமைத்துவ தத்துவம்.
•    கொள்கைத் தீர்மானங்களில் இந்தத் தத்துவத்தை சரியான வகையில் வெளிப்படுத்தும் ஒரு செய்முறை.
•    இந்த கொள்கைகளின் பெறுபேறாக மேற்கொள்ளப்படும் செயற்பாடு.
•    பொதுமக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லுறவையும் பேணிக்கொள்வதற்காக இந்த கொள்கைகளின் உருவாக்கம், இதனை விபரித்தல், பாதுகாத்தல், விருத்தி செய்தல் போன்றவற்றுக்குப் பங்களிப்புச் செய்கின்ற இரு வழித் தொடர்பு.

பொதுசனத் தொடர்பு சார்ந்து வெளிவரும் பல செய்திக்கடிதங்களில் ஒன்றான
Public Relation News என்ற பொதுசனத் தொடர்பு பற்றி பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகின்றது. ' பொதுசன போக்குகளை மதிப்பிடல், பொதுசன ஆர்வத்துடன் தொடர்புடைய தனிநபர் அல்லது நிறுவனத்தின் கொள்கைகள், செயல்முறைகளை இனங்காணல், பொதுசன புரிந்துணர்வையும் ஏற்றுக்கொடலையும் பெற்றுக்கொள்ளக்கூடிய தொடர் செயற்திட்டமொன்றை திட்டமிடல் நிர்வகித்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் முகாமைத்துவ செயற்பாடே பொதுசனத் தொடர்பு எனப்படும்..

Pசுளுயு எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அமெரிக்காவின் பொதுசனத் தொடர்புச் சபையானது
(Public Relation Society of America) 1988இல்  ஆய்வு, திட்டமிடல், தொடர்பு, மதிப்பீடு அகிய அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியவகையில்  ' நிறுவனமும் அதனுடைய சேவையைப் பெற்றுக்கொள்கின்ற  மக்களும் பரஸ்பரரீதியில் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள உதவுவது பொதுசனத்; தொடர்பு' என்ற மிகச் சுருக்கமானதும் செறிவானதுமான வரைவிலக்கணத்தை உருவாக்கியிருக்கிறது. 1950ம் ஆண்டில் பொதுசனத் தொடர்புச் செய்முறைக்கான தொழிற்திறன்சார் முதலாவது நியமமொன்றை இது உருவாக்கியதுடன் 2000ல் மேற்படி நியமத்தை மீளாய்வு செய்து ஆதரித்து வாதாடும் தன்மை, நேர்மை, நிபுணத்துவம், சுதந்திரம், பற்றுறுதி, நடுவுநிலைமை ஆகிய ஆறு  விதிகளையும்
(Core rules) தன்னிச்சையான தகவல் பாய்ச்சல், போட்டி, தகவலை வெளிப்படுத்துதல், நம்பிக்கையை பாதுகாத்தல், முரண்பட்ட ஆர்வங்கள், தொழிலை மேம்படுத்துதல் ஆகிய ஆறு சட்ட முன்னேற்பாடுகளையும்
(Code provisions)உள்ளடக்கியுள்ளது.
அமெரிக்க தொழில் சபையின் புள்ளிவிபரத்தின் படி 1998இல் கிட்டத்தட்ட 122,000 பொதுசனத் தொடர்பு நிபுணர்கள் அமெரிக்காவில் உள்ளனர்.

மிக நீண்டகாலமாக பொதுசனத்தொடர்பு சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் புலமையாளரான கலாநிதி. Rex.F.Harlow என்பவர் 20ம் நூற்றாண்டில் பொதுசனத் தொடர்பு சார்ந்து வெளிவந்த கிட்டத்தட்ட 472 வரைவிலக்கணங்களைத் தேடித் தொகுத்து ஒவ்வொரு வரைவிலக்கணமும் கொண்டுள்ள அடிப்படைக் கருத்துகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தி பின்வரும் தொழிற்படு வரைவிலக்கணத்தை உருவாக்கியிருக்கிறார். ' பொதுசனத் தொடர்பு என்பது ஒரு நிறுவனத்துக்கும் அதனது பொதுமக்களுக்குமிடையில் பரஸ்பர தொடர்பை, புரிந்துணர்வை, ஏற்றுக்கோடலை, கூட்டுறவை உருவாக்கவும், பேணவும் உதவுதல், பிரச்சினைகளையும் முக்கிய விவகாரங்களையும் முகாமை செய்வதுடன் சம்பந்தப்படுதல், பொதுசன அபிப்பிரயாங்கள் தொடர்பாக தொடரச்சியான வகையில் பெற்றுக்கொள்வதுடன் அவற்றுக்குப் பதிலளிப்பதற்கும், முகாமைத்துவத்துக்கும் உதவுகின்ற ஒரு செய்முறையாகும்.'

பொதுசனத் தொடர்புக் கலையின் தொழிற்பாடுகளாகப் பின்வருவனவற்றைக் கருதலாம்
•    நிறுவன முகாமைத்துவத்தால் திட்டமிட்ட, நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு செயற்திட்டம் இது.
•    நிறுவனத்துக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் இடையிலான உறவுமுறையை கட்டியெழுப்புவதுடன் தொடர்புடையது.
•    நிறுவனத்துக்கும் மக்களுக்குமிடையில் புதிய உறவுமுறைகளை தாபித்தல்
•    நிறுவனத்தின் உள்யேயும் வெளியேயும் அறிநிலை, கருத்துப்போக்கு, நடத்தை என்பவற்றை கண்காணிப்பதுடன் தொடர்புடையது.
•    நிறுவனத்தின் உள்யேயும் வெளியேயும் அறிநிலை, கருத்துப்போக்கு, நடத்தை என்பவற்றில் விசேட மாற்றங்களை உருவாக்குதல்
•    பொதுமக்கள் தொடர்பான நிறுவனத்தின் கொள்கைகள், செயல்முறைகள், செயற்பாடுகள் என்பவற்றில் விளைவுகளை பகுத்தாய்வு செய்தல்
•    புதிய கொள்கைகள், நடைமுறைகள், செயற்பாடுகள் போன்றவற்றை உருவாக்குவதில் முகாமைத்துவத்திற்கு ஆலோசனை வழங்குதல்
•    நிறுவனத்துக்கும் பொதுமக்களுக்குமிடையில் இருவழித் தொடர்பை உருவாக்குதலும் பேணுதலும்.

பொதுசனத் தொடர்புக் கலையின் மூலக்கூறுகளாகப் பின்வருவனவற்றைக் கருதலாம்.
•    இது ஒரு சமூக முகாமைத்துவ தத்துவம்.
•    கொள்கைத் தீர்மானங்களில் இந்தத் தத்துவத்தை சரியான வகையில் வெளிப்படுத்தும் ஒரு செய்முறை.
•    இந்த கொள்கைகளின் பெறுபேறாக மேற்கொள்ளப்படும் செயற்பாடு
•    பொதுமக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லுறவையும் பேணிக்கொள்வதற்காக இந்த கொள்கைகளின் உருவாக்கம், இதனை விபரித்தல், பாதுகாத்தல், விருத்தி செய்தல் போன்றவற்றுக்குப் பங்களிப்புச் செய்கின்ற இரு வழித் தொடர்பு.

சர்வதேச நூலகச் சங்கங்களின் சம்மேளனத்தின்  ;(IFLA) வரைவிலக்கணத்தின்படி  'நூலகம் பற்றியும் அதனது சேவைகள் பற்றியும் மக்களது உணர்வுகள், அபிப்பிராயங்கள், நம்பிக்கைகள்  ஆகியவற்றில் செல்வாக்குச் செலுத்தும்பொருட்டு பொது விளம்பரம் மற்றும் ஏனைய பணம் செலுத்தாத ஊக்குவிப்பு வடிவங்கள், தகவல்கள் ஆகியவற்றை பயன்படுத்த விழைகின்ற தொடர்பு முகாமைத்துவ வடிவமே பொதுசனத் தொடர்பு. பணம் செலுத்தும் விளம்பர ஊடகம் மிக அரிதாகவே இதில் பயனபடுத்தப்படுவதன் காரணமாக இது  நூலக முகாமைத்துவத்தின் பாரம்பரிய ஒரு தொடர்பு வடிவமாகவே கருதப்படுகின்றது.(www.olc.org)


நூலகம் சார்ந்த பொதுசனத் தொடர்பானது பொதுத் தொடர்பு தனிநபர் தொடர்பு என இருவகைப்படுகின்றது பொதுநூலக நிலைமைகளும் தேவைகளும் தொடர்பாக  அமெரிக்க நூலகச் சங்கத்தின் நூலக விரிவாக்க சபை மேற்கொண்ட ஆய்வின்படி பொதுசனத் தொடர்பானது
•    நூல்களின் மதிப்பையும் வாசிப்பின் மதிப்பை, ஏனைய தொடர்பு சாதனங்களையும் விட அபிப்பிராயம், தகவல், உட்தூண்டல், கல்வி என்பவற்றைப் பெறு;றுக்கொள்ளகூடிய மூலம் என்ற வகையில் நூல்களின் மேன்;மைத்தன்மையை வலியுறுத்துகின்றது
•    நூலகம் என்பது பொதுமக்களின் நிதியில் பொதுசன நிர்வாகத்தில் உள்ள பொது நிறுவனம் என்பதை
•    உயிரோட்டமிக்க நூலகமொன்றில் தகவல் சேவை, முதியோர் கல்வி, போன்ற சேவைகளை
•    தலா ஒருவருக்கான நூற்சுழற்சி போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட நூலக நியமங்களை
•    பலதரப்பட்ட நாடுகளின் நூலகப் பாவனை தொடர்பான புள்ளிவிபரங்களை
•    நூலகர், நூலகப் பாவனையாளர், நூல் ஊக்குவிப்பாளர் போன்றொரின் நூலக வாழ்க்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதை  வலியுறுத்த முயலுகின்றது.


ஏன் அவசியம்?

அமெரிக்க உருக்கு உற்பத்தியின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் யுனெசநற ஊயசநெபநை. இவர் தனது பொதுசனத் தொடர்பு அலுவலராகப் பணியாற்றிய  ஊhயசடநள ளுஉhறயடிக்கு கொடுத்த சம்பளம் நாளொன்றிற்கு 3000 டொலர்கள்.  அன்ட்ரூ கானகியின் வெற்றிக்கு மூல காரணம் இவர் தனக்குக் கீழ் பணிபுரிபவரை பொதுப்படவும் தனிப்படவும் பாராட்டுவது தான். கல்லறையில் கூட தனது உதவியாளரைப் பாராட்டவே இவர் விரும்புகின்றார். ' தன்னைவிடவும் திறமைசாலிகளின் கூட்டத்தில் இடம்பிடிப்பது எப்படி என்பதை நன்கு அறிந்த ஒருவன் இங்கே தூங்குகின்றான் என எழுதி வைத்தாராம். ஒரு மனிதனின் இலட்சியத்தை சாகடிப்பதற்கு சிறந்த வழி அவனை விமர்சிப்பது தான் எனக் கூறும் இவர் பிழை கண்டுபிடிப்பதில் பின்னுக்கும் பாராட்டுவதில் முன்னுக்கும் நிற்கிறேன் என்கிறார். பாராட்டு என்பது வேறு முகஸ்துதி வேறு. முதலாவது நேர்மையானது. இதயத்திலிருந்து வருவது மற்றயது அதற்கு முரணானது.

நூல்களின் தொகை, வகை, தரம், ஒழங்கமைப்பு, மொழி போன்றன நூல்களை அணுகுவதற்கான சூழலைத் தடை செய்கின்றன. இத்தகைய தடைகளைப் போக்குவதற்கு பொதுசனத் தொடர்புக் கலை அவசியமானது.

யார் செய்வது?

நூலகத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரதும் கடமையாகவே இது பார்க்கப்படுகின்றது எனினும்  கருத்தியல் சார்ந்து மேல்நிலை முகாமைத்துவத்தின் பொறுப்பு இங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இங்கு ஏற்படும் தாக்கம் நிறுவனத்தின் மூலைமுடுக்கெல்லாம் போய்ச்செரும் வாய்ப்புண்டு. இதன் அடிப்படையில் தான் அமெரிக்காவின் மிகச் சிறந்த கம்பனிகளில் ஒன்றான னுநடவய யுசைடiநௌ இல்பணிபுரியும் அனைத்து ஊழியர்களுமே பொதுசனத் தொடர்புக்குரியவர் எனச் சொல்லப்பட்டிருக்கிறயுது. பொதுசன ஆர்வத்தைப் புறக்கணித்து பொது மக்கள் சொத்தில் தனிப்பட்ட ஆர்வத்துக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு உயர்நிலை அதிகாரியின் நடத்தை முழு நிறுவனத்தையுமே கேள்விக்குரியதாக்கிவிடும்.
பொதுவாக ஓரிரு அலுவலருடன் இயங்கும் சிறிய நூலகங்களில் பணிபுரியும் ஒவ்வொருவரும் விரும்பியோ விரும்பாமலோ வாசகருடன் ஊடாட்டம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகின்றனர். பெரிய நூலகங்களில், நூலகத்தின் ஏனைய பகுதிகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்களை விடவும் வாசகருடன் முறைசாராத் தொடர்பை அடிக்கடி பேணும் வாய்ப்பைப் பெற்ற நூலக கவனிப்பாளர் முதற்கொண்டு உசாத்துணைச் சேவைக்கு உதவும் நு{லக உதவியாளர், முகப்பு மேசை அலுவலர் போன்றோர் பொதுசனத் தொடர்பு சார்ந்து அதிகம் அறிந்திருப்பது அவசியமாகக் கருதபப்படுகின்றது. வளர்ச்சியடைந்த நூலகங்களில் பொதுசனத் தொடர்பு அலுவலர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அதன்கீழ் பணிபுரிபவர்களால் இது மேற்கொள்ளப்படுகின்றது. பலதரப்பட்ட ஊடகங்கள் தொடர்பான அறிவு, முகாமைத்துவ செய்முறை தொடர்பான விளக்கம், நிதிமூலங்கள் தொடர்பான அறிவு ஆகியன மட்டுமன்றி சிறந்த எழுத்தாற்றல், நம்பிக்கை தரும் பேச்சாற்றல் போன்ற திறன்களும், பிரச்சனை தீர்த்தல், தீர்மானம் எடுத்தல், மக்களை கையாளும் தன்மை, நம்பிக்கையை ஏற்படுத்தல், பொறுப்பைத் தானே ஊகித்தக் கொள்ளல் போன்ற ஆற்றல்களும், உறுதித் தன்மை, பொது உணர்வு, தீவிர விருப்பாற்றல், பலதுறை ஆர்வமும், புலமைத்துவ ஆர்வமும், பொறுமையுடன் கேட்கும் ஆற்றல், சகிப்புத் தன்மை, தனக்கேயுரிய பாங்கு போன்ற தகுதிகளும் இப்பதவிக்கு அவசியமாகக் கருதப்படுகின்றன.

 பொதுவான ரீதியில் மேற்கொள்ளப்படக்கூடிய பொதுசனத் தொடர்பானது தேசிய நூலகச் சங்கங்கள், நூலக சேவைகளுக்கான அரச திணைக்களங்கள் போன்ற மத்திய நிறுவனங்களின் பொறுப்பாகவே பார்க்கப்படுகின்றது. இது நன்கு திட்டமிடப்பட்டதாகவும் சரியான நேரத்தில் அமுல்படுத்தப்படக்கூடியதாகவும் தொடச்சியான முறையில் அமுல்படுத்தப்படக்கூடியதொன்றாகவும் இருத்தல் அவசியமாகும். நாளிதழ்கள், பொதுசன ஆர்வத்தைப் பெற்ற பருவ இதழ்கள், வானெலி கருத்துரைகள், கவர்ச்சிகரமான சுவரொட்டிகள், குடியிருப்புப் பிரதேசங்கள், பெருந்தெருக்கள் போன்ற இடங்களின் மையப்பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப்பலகைகள், புத்தகக் கண்காட்சிகள், நூலக சாரக் கொண்டாட்டங்கள், நாடளவிய ரீதியில் அமைந்த மத்திய முகவர்நிலையங்களின் ஒழுங்கமைப்பில் இலவசமாக விநியோகிக்கக்கூடிய  கவர்ச்சிகரமான  உறைகள், செய்த அறிக்கைகள், துண்டுப் பத்திரிகைகள் போன்றவற்றினூடாக இச்செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம்.


தேவைப்படும் தகுதிகள்

•    அறிவு: நுண்ணறிவு, பலதரப்பட்ட ஊடகங்கள் தொடர்பான அறிவு, முகாமைத்துவ செய்முறை தொடர்பான அறிவு , நிதிமூலங்கள் தொடர்பான அறிவு , பன்மொழி அறிவு போன்றவை
•    திறன்கள்: முன்னறியும் திறன், பொறுப்பைத் தானே ஊகித்துக் கொள்ளும் திறன், திட்டமிடல் திறன், தீர்மானம் எடுக்கும் திறன், பிரச்சனை தீர்க்கும் திறன்;, தீர்ப்புக் கூறும் திறன், இணங்க வைக்கும் திறன், மேலாண்மைத் திறன் போன்ற திறன்கள்
•    ஆற்றல்கள்: சிறந்த எழுத்தாற்றல் , நம்பிக்கை தரும் பேச்சாற்றல் , மக்களை கையாளும் ஆற்றல், நம்பிக்கையை ஏற்படுத்தல், போன்ற ஆற்றல்கள்
•    தகுதிகள்: உறுதித் தன்மை, பொது உணர்வு , தீவிர விருப்பாற்றல் , பலதுறை ஆர்வம் , புலமைத்துவ ஆர்வம், பொறுமையுடன் கேட்கும் தன்மை, சகிப்புத் தன்மை , தனக்கேயுரிய பாங்கு போன்ற தகுதிகள்
•    நடத்தை: நடுவுநிலைமை, அலைபாயாத மனம், நயம், நடை உடை பாவனைகளில் செம்மை, அடுத்தவர் கருத்தை மதித்தல், நாணயம், சேவை மனப்பான்மை, நட்புணர்வு போன்ற நடத்தைகள்

கடமைகள்
•    திட்டம் தீட்டுதல் செயற்படுத்தல்
•    மக்கள் தொடர்பு தொடர்பான எண்ணக்கருவை நிறுவனம் சார்ந்து வரையறுத்தக்கொள்ளல்
•    அலுவலர்களின் பொறுப்பை உணரப்பண்ணுதல்
•    எதிரே உள்ளவரின் பேச்சை ஊன்றிக் கவனித்தல், பதிதல்
•    கருத்தரங்ககள், விழாக்களை எற்பாட செய்தல்
•    சேவை விளம்பரங்களை எற்பாடு செய்தல்
•    ஊடகத் தொடர்புகளைப் பேணுதல்
•    கையேடகள், செய்திகளை உருவாக்கதல்
•    கடிதப் போக்கவரத்தை பேணுதல்
•    அறிவிப்புக்களை உரிய நேரங்களில் மேற்கொள்ளல்
•    படங்கள், சுவரொட்டிகளை உருவாக்கதல்
•    கட்டங்கள் ஒழங்குவிதிகளை விளங்கவைத்தல்
•    செயற்பாடுகளுக்கான பின்னணித் தகவல்களை வழங்குதல்


எங்கே செய்வது?

நூலகத்துக்கு உள்ளே
•    யன்னல் கண்ணாடி ஊடான காட்சிப்படுத்தல்
•    வாசகர் நெருக்கம் மிக்க பகுதிகளை முதலில் அறிமுகப்படுத்தல்
•    நவீன சாதனங்களை காட்சிப்படுத்தல்
•    நூலகத்தின் சுறுசுறுப்புத் தன்மை, சுத்தம்,அமைதி, ஒளிவுமறைவின்மை, சுதந்திர உணர்வு, அலுவலர்களின் அன்பு போன்ற வாசகனுக்கான வசதிகளை உறுதிப்படுத்தல்
•    வழிகாட்டி அட்டைகள், விளக்கப்படங்கள், அமைவிடத் திட்டம், புதிய நூல்களின் காட்சிப்படுத்தல் போன்ற வாசகனுக்கான வழிகாட்டுதல்களை உறுதிப்படுத்தல்
•    தீர வாசிப்பின் தாக்கத்தை தீர்க்க ஓய்விருக்கைகள், மனக்களிப்பைத் தர மலர்ச் சாடிகள், தாகம் தீர்க்க சுத்தமான தண்ணீர், சிறு பசியைப் போக்க சிற்றுண்டி வசதி, இயற்கையின் அழைப்புக்குப் பதில் கூற சுத்தமான கழிவறைகள், திறந்த காற்றில் வாசிப்பு வசதி போன்ற வாசகனுக்கு ஓய்வும் புத்துணர்ச்சியும் தருகின்ற வசதிகளை உறுதிப்படுத்தல்
•    கல்வியற்றோருக்கான வாசிப்பு, வாசிப்பு வட்டங்கள், நூலக கதை நேரம், விரிவுரைகள் , சொற்பொழிவுகள், கொண்டாட்டங்கள் போன்ற விரிவாக்க சேவைகளை வழங்குதல்


மக்கள் மத்தியில்
•    நூல்களின் மேன்மையை, மதிப்பை, பெறுமதியை, முக்கியத்துவத்தை வெளிக்கொணர்தல்
•    நூலகத்தின் முக்கியத்துவத்தை, மேன்மையை, மதிப்பை வெளிக்கொணர்தல்


செயற்படுத்தக்கூடிய ஊடகங்கள்

•    நாளிதழ்கள்,
•    பொதுசன ஆர்வத்தைப் பெற்ற பருவ இதழ்கள்,
•    வானெலி கருத்துரைகள்,
•    கவர்ச்சிகரமான சுவரொட்டிகள்,
•    குடியிருப்புப் பிரதேசங்கள், பெருந்தெருக்கள் போன்ற இடங்களின் மையப்பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகள்,
•    புத்தகக் கண்காட்சிகள்,
•    நூலக சாரக் கொண்டாட்டங்கள்,
•    நாடளவிய ரீதியில் அமைந்த மத்திய முகவர்நிலையங்களின் ஒழுங்கமைப்பில் இலவசமாக விநியோகிக்கக்கூடிய  கவர்ச்சிகரமான  உறைகள்,
•    செய்தி அறிக்கைகள்,
•    துண்டுப் பத்திரிகைகள்



References

          Peterson, Wilfred Othmer(1930). Library publicity methods. Paper offered to the Library services section at First all Asia Educational conference.1930.
          Ranganathan,S.R.(1988). Library Manual.Bangalore: Saradha Ranganathan endowment for Library Science.
          www.prsa .org. About public relations.
          Wikipedia
          www.olc.org. Public Relations:How do you want the library to be seen in relation to the community?
          www.ala.org.
          Library Marketing for Public Libraries, Web-based Training, Ohio Library Foundation, 2003-2006.
          www.enterpreneur.com




[Training programme for public librarians of North eastern province conducted by National Library & documentation services board and Management Development Training Department- North eastern province on 18th-21st, Oct, 2002]



No comments:

Post a Comment