பண்பின்றிப் பெறும் அறிவு பலனற்றுப் போகும்
- நூலகவிழிப்புணர்வு நிறுவகம் -
பகுத்தறிவு வளர்ந்திடவே பல நூல்கள் படித்துவிடு
அறிவுக்கு ஆதாரம் ஆழ்ந்த தேடல்
கற்கும் கை மண்ணளவு கல்விக்கூடத்தில்
கல்லாத உலகளவு நூலகத்தில்
அறிவுக்கு ஆதாரம் அவதானிப்பு
அறிவை நீ ஆண்டு அறிவாளி ஆகிடு
தேடிப் படி தேசம் உன் கையில்
கேட்டுப் படி, பார்த்துப் படி, தேடிப் படி
இறுதிவரை நீ வாழ்வைப் படி
நூலகம் சென்று நுண்ணறிவு வளர்த்திடு
தேடிப் படி உண் எண்ணப்படி
இதுவே உன் வாழ்வின் ஏணிப்படி
வாசித்து அறிந்தால் வான் புகழ வாழலாம்
நீர் இருக்கும் இடத்தில் பாசி படரும்
நூல் இருக்கும் இடத்தில் நுண்ணறிவு படரும்
- நூலகவிழிப்புணர்வு நிறுவகம் -
அறிவு என்பது இருவகை எமக்கு தெரிந்த அறிவு ஒருவகை எமக்கு தெரியாததை எங்கே பெறலாம் என்ற அறிவு இன்னொருவகை.
சாமுவேல் ஜோன்சன்
எழுத்தாளனின் நேரங்களில் மிகக்கணிசமான அளவு பகுதி வாசிப்பிலேயே கழிகின்றது. நல்லதொரு நூலை எழுதுவதற்கு நூலகத்தின்; அரைப்பங்கு நூல்களின் பக்கங்கள் புரட்டப்படுகின்றன.
சாமுவேல் ஜோன்சன்
நூல்களை வாசிக்கும் போது ஏற்படும் நன்மையைப் போன்று நூல்களிலிருந்து பெறப்படும் விரிவுரைகள் நன்மையைத் தருவதில்லை.
-சாமுவேல் ஜோன்சன்
ஒரு கருத்தை எடுத்துக் கொள்க! அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்குக! அதையே கனவு காண்க! அந்த ஒரு கருத்தை ஒட்டியே வாழ்ந்து வருக! மூளை, தசைகள், நரம்புகள், நாடிகள் முதலிய ஒவ்வொரு பகுதியிலும் அந்த ஒரு கருத்தே நிறைந்து நிலவட்டும். இந்த நிலையில் மற்றக் கருத்துகளை தவிர்த்து விடுக! வெற்றிக்கு வழி இதுதான்
-விவேகானந்தர்;;
வாசித்தல் ஒரு கலை, சிந்தித்தல் ஒரு கலை, எழுதுதலும் ஒரு கலையே
-சாள்ஸ்லாம்ப்
கல்வியினாலே பெருந்தொகையான மக்கள் வாசிக்கக் கூடியவர்களாக விளங்கினாலும், தாம் வாசிப்பனவற்றிலே எவை வாசிக்க வேண்டியவை என்பதைப் பிரித்தறிய முடியாதுள்ளனர்
-ஜி.எம்.றெவெலியன்
நான் உயிர் வாழ்வதற்காகக் கற்க மாட்டேன். ஆனால் கற்பதற்காகவே உயிர்வாழ விரும்புகிறேன்
-பிரான்சிஸ் பேக்கன்
அறிவாளிகளுடைய காலம் காவ்யம் (இலக்கியம்) சாஸ்திரம் (அறிவியல்) ஆகியனவற்றைக் கற்பதிலே கழிகின்றது. ஆனால் அறிவிலிகளின் காலம் கடுந்துயரம், நித்திரை, கலகமாகியனவற்றிலே கழிகின்றது.
-வடமொழி நீதிநூல்
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு
-ஓளவை முதுமொழி
காற்றும் ஒளியும் நீரும் எங்ஙனம் மக்களில் வேறுபாடு காட்டாமல் எவ்வாறு பயன் தருகின்றனவோ அது போலவே அறிவும் மக்கள் அனைவருக்கும் தரப்பட வேண்டும். இதற்கான நல்ல சாதனம் நூலகமே
- வே. தில்லைநாயகம்
நூல்கள் - எமது ஆசை அறிவு கருத்து கண்ணோட்டம் அறிய உதவும் திறந்துவிடப்பட்ட சாளரங்கள்
வாசி மனிதா சுவாசி எம் வளமான நூல் உலகை
மனிதனின் மேம்பாடு பாடுபட்டு உழைப்பதாலா
அல்ல அல்ல மேம்பட்ட வாசிப்புத் திறனால்
எங்களை யாத்திரை செய்யுங்கள்
உங்களுக்கு மாத்திரை ஆகின்றோம்
நடுநிசியில் கண்விழித்துத் திரியும் இடமெல்லாம்
வலிக்காமல் சலிக்காமல் பின்தொடர்வோம்
அரிசோபா நுண்கலைத்துறை
யாழ். பல்கலைக்கழகம்
நூல்கள் - தடியின்றி கடும் சொல்லின்றி பயமின்றி மிகத் தயக்கமின்றி சுதந்திரமாகப் வேண்டியதைப் பெற உதவும் உங்கள் ஆதாரம்
குழுடுயு
'வரப்புயர' என்று அவ்வை சொன்னாள் அன்று
'அறிவுயர' என்று நீங்கள் சொல்லும் காலம் இன்று
அறிவுயர மனம் உயரும்
மனம் உயர மக்கள் உயர்வர்
மக்கள் உயர - இந்த மண்டலமே உயரும்.
குழுடுயு
பிறவி என்ற பேறு பெற்ற பலனை நல்கும் பெட்டகங்கள்
அடுக்கி வைத்த செல்வச்சாலை உலகில் உள்ள நூலகங்கள்
கவிஞர். இ. முருகையன்
No comments:
Post a Comment