எனது நோக்கில்.......

அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.

இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

13-09-2014


Sunday, September 14, 2014

மேற்கோள்கள் - அறிவு

அறிவு

அறிவே இன்பம். அறிவே அணிகலன். அறிவே ஆற்றல்
                                                                                                                    -பிரான்சிஸ் பேகன்-



அறிவைத் தேடுங்கள். அது நம்மை ஆற்றலுடையவனாக ஆக்குகிறது. அறிவு தனிமையில் நமது தோழன். இன்பத்திற்கு வழிகாட்டி. துன்பத்திலோ ஆதரவாளன். நண்பர்களுக்கிடையில் அது நமது நல்லாபரணம். பகைவர்களிடமிருந்து நம்மைக் காக்கும் கேடயம்.
                                                                                                                            -விநோபா-



அறம் இன்றிப் பெறும் அறிவு அழிவுக்கு வழி கோலும். பண்பின்றிப் பெறும் அறிவு பலனற்றுப் போகும்.

                                                                                        -நூலக விழிப்புணர்வு நிறுவகம்-
 
அறிவு என்பது இருவகை. எமக்கு தெரிந்த அறிவு ஒருவகை. எமக்கு தெரியாததை எங்கே பெறலாம் என்ற அறிவு  இன்னொருவகை.
                                                                                                              -சாமுவேல் ஜோன்சன்-



தன்னை அறிதல் என்பதே  அனைத்து அறிவினதும் தாய்;. எனவே என்னை அறிதலையும், அதனை முழுமையாக அறிதலையும், நுணுக்கமாக அறிதலையும், அதன் பண்புகளை அறிதலையும், அதனை அணுவணுவாக அறிதலையும் அது நெருக்கிறது.
                                                                                                                   -கலீல் ஜிப்ரான்-



அறிவு என்பது உங்களுக்குத் தெரிந்த ஒன்றை உங்களுக்கு தெரியும் என்றும் உங்களுக்குத் தெரியாத ஒன்றை தெரியாது என்றும் சொல்வது தான்.
                                                                                                                        -கன்பூசியஸ்-



அறிவுக்கு ஆதாரம் அவதானிப்பு, ஆழ்ந்த தேடல், அடுத்தவருடன் பகிர்தல்
                                                                                       

                                                                                 -நூலக விழிப்புணர்வு நிறுவகம்-

No comments:

Post a Comment