எனது நோக்கில்.......

அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.

இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

13-09-2014


Sunday, September 14, 2014

அறிவாலயம் வழங்கும்; அறிவுக் கருவூலங்கள்


(நூல்களைக் கொண்டது நூலகம் என்ற எண்ணக்கரு மாறி இன்று நூலகங்கள் நூல் வடிவில் மட்டுமன்றி நூலுருவற்ற வடிவிலும் பொதியப்பட்ட தகவலைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சாதனங்களை இனங்காணும் அறிவைப் பெற்றால் மட்டுமே நூலகம் என்பது நூல்களைச் சேமித்து வைக்கும் காப்பகம் என்ற கருத்துநிலை மாறி அது அறிவைப் பரப்பும் நிறுவனம் என்ற கருத்துப் புதிதாக உருவாகும். இந்த வகையில் நூலகத்தை நாடும் ஒரு வாசகனுக்கு அங்கு என்னென்ன சாதனங்கள் இருக்கும் என்பதை அறியத் தருவதும் நூலகர்களுக்கு இச் சாதனங்களை எவ்வாறு ஒழுங்குபடுத்தல் பொருத்தமானது என்பதைத் தெளிவுபடுத்துவதுமே இக் கட்டுரையின் நோக்கமாகும்.)

1 தகவல் வளங்கள் Information Resources

மனித சிந்தனைப் பதிவேடுகள் கால மாற்றத்துக்கமைய உடல் உள மாற்றங்களைச் சந்தித்திருக்கின்றமையை வரலாறு எமக்குப் புலப்படுத்துகின்றது. உருவமைப்பின் அடிப்படையில் ஓலைச் சுவடிகளாக உருப்பெற்று அச்சின் கண்டுபிடிப்புக்கு முன்னரேயே நூல் எனக் காரணப் பெயர் பெற்றுப், பின்னர் நூலுருவற்றனவற்றையும் உள்ளடக்குமுகமாக ஆவணம் எனப் பெயர் தாங்கி, தகவல் என்ற கருத்துநிலை தகவல் உலகில் நிரந்தர இடம் பெற்றபோது தகவலைக் கொண்டிருக்கும் சாதனங்கள் என்ற வகையில்; தகவற் சாதனங்கள் எனப் பெயர் மாற்றம் பெற்றுப் பயன்பாட்டுக்குரிய வளம் என்ற வகையில் தகவல் வளம்; என்ற பெயருடன் இன்றைய தகவல் உலகில் இப் பதிவேடுகள் உலா வருகின்றன. தகவல் வளங்களை ஆவணம் சார்ந்த வளங்கள், ஆவணம் சாராத வளங்கள் என இருவகையாக வகைப்படுத்த முடியும். ஆவணம் சார்ந்த வளங்கள் Documentary resources  அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் முதல்நிலைத் தகவல் வளங்கள், இரண்டாம்நிலைத் தகவல் வளங்கள், மூன்றாம்நிலைத் தகவல் வளங்கள் என மூன்று வகையாகவும் உருவமைப்பின் அடிப்படையில் நூலுருச் சாதனங்கள், நூலுருவற்ற சாதனங்கள் என இருவகையாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. ஆவணம் சாராத வளங்கள் மனித வளங்கள், நிறுவன வளங்கள் என இருவகைப்படுத்தப்படுகின்றன. Non Documentary resources அறிவாலயம் உள்ளடக்கக்கூடிய ஆவணம் சார்ந்த வளங்களும் இவற்றை எங்கே ஒழுங்குபடுத்தல் பொருத்தமானது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படுகின்றன. 

1.1 இருப்புப் பகுதி Stack Area
அறிவாலயத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு வாசகருக்கும் அறிவாலயத்தின் மொத்தத் தகவல் சாதன இருப்பின் கணிசமான அளவு பகுதி  இருப்புப் பகுதிக்குரியது என்பது தெளிவாகப் புரியும். வாசகரால் வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசிக்குமுகமாக ஒரு வாரமோ இரு வாரங்களோ இரவல் வழங்கப்படுகின்ற நூல்களே இருப்புப் பகுதிக்குரியவையாகும். குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்து பரந்து பட்ட ரீதியில் எழுதப்படும் நூல்களை இருப்புப் பகுதியில் ஒழுங்குபடுத்தல் சிறந்ததாகும். பொதுவாக எந்தவொரு நூலகமும் கொண்டிருக்கும் தகவல் சாதனங்களில் கணிசமான அளவு நூல்களாகவே இருப்பது மட்டுமன்றி அனைவருக்கும் மிகப் பழக்கமான தகவல் வளமாகவும் இவை கருதப்படுகின்றன.

1.11 புனைகதை நூல்கள் Fictions
புனைகதை நூல்கள் சிறப்பாகப் பொது நூலகங்களுக்குரியவை. எமது பிரதேசத்திலுள்ள பெரும்பாலான நூலகங்களின் மொத்த நூல் இருப்பில் கணிசமான அளவு புனைகதை நூல்களே என்று கூறுமளவிற்கு அதன் அளவு மிக அதிகமாகும். சமூக நாவல்கள், துப்பறியும் நாவல்கள், வரலாற்று நாவல்கள், மட்டுமன்றிக் குறுநாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்கள் போன்றனவும் சிறுகதைகளும் பொதுநூலகங்களின் இருப்புப் பகுதியை அலங்கரிக்கின்றன.

1.12 தனிப்பொருள் நூல்கள் Monographs

குறித்த ஒரு பாடத்துறையில் விளக்கமாக எழுதப்பட்டு வெளியிடப்படுவதே தனிப்பொருள்நூல்கள் எனப்படும். இவை ஒர் ஆசிரியரால் தனித்தோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்தோ எழுதப்பட்டவையாக இருக்கும். பல்கலைக்கழகச் சமூகத்தின் ஆய்வுத் தேவைகளையும் பாடவிதானம் சம்பந்தப்பட்ட தேவைகளையும் பூர்த்;தி செய்வதை நோக்கமாகக் கொண்ட இவற்றின் பாவனையானது ஏனைய அறிவுசார் சாதனங்களையும் விட ஒப்பீட்டளவில் அதிகமானது. எனினும் நவீன தொழிநுட்ப வசதிகளின் விளைவால் மில்லியன் கணக்கில் வெளியாகும் நூல்களின் எண்ணிக்கையும் நூலகங்களின் இடவசதியின்மையும் இந்நூல்களின் அதிகரிப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.

1.2 உசாத்துணைப் பகுதி Reference Area
பாடவிதானத்துடன் தொடர்புடைய நூல்கள் அனைத்தும் உசாத்துணைப் பகுதியைச் சார்ந்தவையாகும். இவை ஓரிரவுக்கு மட்டுமே இரவல் வழங்கப்படக் கூடியவையாகும். இவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட பிரதிகள் இல்லாத நூல்கள் பாடநூலாயினும் நிரந்தர உசாத்துணைப் பெறுமதி கொடுக்கப்பட்டு இரவல் வழங்கும் செயற்பாட்டிலிருந்து நிறுத்தப்படுகின்றது.
1.21 பாட நூல்கள் ஜவுநஒவ டிழழமளஸ
குறிப்பிட்ட ஒரு பொருட்துறையைத் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கென உருவாக்கப்படும் நூல்களே பாட நூல்கள் ஆகும். இவை பொதுவாகப் பரந்த பொருட்துறையை உள்ளடக்குபவை. வாசிப்பு நோக்கம் என்பதே இங்கு முக்கியமானதாக இருப்பதனால் தகவல் வழங்கப்படும் விதம் இங்கு மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது. வண்ணப்படங்களும் போதிய விளக்கப்படங்களும் கவர்ச்சிகரமான வடிவமைப்பும் வாசிப்பில் தூண்டலை ஏற்படுத்துபவை. நல்லதோர் பாடநூலானது வாசிப்புக்கு மட்டுமன்றி நல்லதோர் கற்பித்தலுக்கும் வழிகாட்டக்கூடியது. புதிய அபிவிருத்திகள், மாறிவரும் கற்பித்தல் முறைகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இவை அடிக்கடி மீளாய்வு செய்யப்படவேண்டியுள்ளன.

1.22 கைந்நூல்கள் Handbooks
கைந்நூல்கள் என்பவை கையடக்க வடிவில் நானாவிதத் தகவல்களைத் தொகுத்துத் தருபவை. தரவுகள், செய்முறைகள், கோட்பாடுகள், போன்றவற்றை இவை வழங்குவதுடன் அட்டவணைகள், வரைபடங்கள், விளக்கப்படங்கள் போன்றவற்றையும் இவை உள்ளடக்குகின்றன. அறிவியலாளர்; தொழினுட்பவியலாளர் மத்தியில்; கைந்நூல்களின் பாவனை மிக அதிகளவில் காணப்படுகின்றது.

1.23 கையேடுகள் Manuals
கையேடு என்பது ஒரு வேலையை எவ்வாறு நிறைவேற்றுவது, தெளிவான தனித்துவமான வழிகாட்டுதலினூடாக ஒன்றை எவ்வாறு செய்வது என்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குகின்ற ஒர் அறிவுறுத்தல் நூலாகும்.

1.24 மீளாய்வுகள் Reviews
முதல்நிலைத் தகவல் வளங்கள் பற்றிய ஒரு மதிப்பீடே மீளாய்வு எனப்படுகிறது. குறிப்பிட்ட துறைசார்ந்து குறித்த காலப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்குகளைச் சுட்டிக்காட்டுவதே மீளாய்வுகளின் நோக்கமாகும். இவை மாதாந்த, காலாண்டு வருடாந்த ரீதியில் தோன்றுகின்ற கட்டுரைத் தொகுதிகளாகவோ பருவஇதழில் வெளிவரும் கட்டுரையாகவோ இருக்கலாம். புதிய பிரச்சினைக்கான பின்னணித் தகவல்களைப்  பொருத்தமான வடிவத்தில் வழங்குவதுடன் இலக்கியத்துக்கான திறவுகோலாகவும் கருதப்படுகின்றன.

1.25 அட்டவணைகள் Tables
எழுதப்பட்ட சொற்கள், குறியீடுகள், எண்கள் அல்லது இவற்றின் சேர்க்கைகளை நிரல் ஒழுங்கில் வரிசைப்படுத்தப்பட்ட தரவுகளில் தரும் ஒர் ஒழுங்கமைப்பு. கைந்நூல்களில் பெரும்பாலானவை அட்டவணைகளின் வடிவமைப்பில் பெருந்தொகையான தகவல்களை உள்ளடக்குகின்றன. சில கைநூல்கள் அதன் பொருட்துறையிலும் பார்க்கக் கணிசமான அளவு அட்டவணைகளுக்கு ஒதுக்குகின்றன. பாட விளக்கங்களை விட அட்டவணைகளின் மூலம் ஒரு தகவலை விளங்கிக் கொள்வது இலகுவானது. குடித்தொகைத் தரவுகள்,   அறிவியல் துறையில் குறிப்பாக பௌதிக தொழினுட்பத் துறைகளில் அட்டவணைகள் மிகுந்த பயன்பாடுள்ளவையாகக் கருதப்படுகின்றன.

1.3 உடனடி உசாத்துணைப் பகுதி Ready reference area
 தனித்துவமான தகவலைப் பெறும் நோக்குடன் காலத்துக்குக் காலம் குறிப்பெடுக்கவென வடிவமைக்கப்படும் நூல்கள் இவ்வகைக்குள் அடங்கும். இவற்றின் ஒழுங்கமைப்பும் பயன்பாடும் ஏதாவது ஒரு நோக்கத்தை நிறைவு செய்யும் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கும். சாதாரண நூல்களைப் போன்று தொடர்ச்சியான முறையில் இவற்றை வாசிக்க முடியாது. இவற்றில் உள்ள தகவல்கள் சரியாகவும், முறையாகவும்  ஒழுங்குபடுத்தப் பட்டிருப்பதன் காரணமாக தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் எவ்வித காலவிரயமுமின்றிப் பெற்றுக்கொள்ள முடியும்;.
நூலகம் ஒன்றின் தரத்தை நிர்ணயிப்பதில் உடனடி உசாத்துணைப் பகுதிக்குப் பெரும் பங்குண்டு. இருப்புப் பகுதியில் குவிந்து கிடக்கும் கதைப் புத்தகங்களை நாடி வரும் வாசகரின் அளவைக் கொண்டு அதனை சிறந்த நூலகம் என்றோ அவ் வாசகரைக் கொண்ட சமூகத்தை வளர்ச்சியடைந்த சமூகம் என்றோ கொள்ள முடியாது. வாசகரின் எத்தனை வீதம் உசாத்துணைப் பகுதியைப் பயன்படுத்துகின்றனர் என்பதிலேயே வாசகரின் தகுதி, நூலகத்தின் தகுதி, நூலகம் அமைந்துள்ள சமூகத்தின் தகுதி என்பன நிர்ணயிக்கப்படுகின்றன.

1.31 கலைக்களஞ்சியங்கள் Encyclopedia

காலங்காலமாக மனிதனது அறிவுத் தேடலும்; ஆன்மமுயற்சியும் உடலுழைப்பும் இணைந்து சாதிக்கப்பட்டவைகளை எழுத்துவடிவில் ஒன்றுதிரட்டித் தரும் ஒரு உசாத்துணை நூலே கலைக்களஞ்சியமாகும். மானுட வரலாற்றின் கூறுகள் அனைத்தையும் ஓரிடத்தில் பார்த்து அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்நூல் தருகிறது. தற்காலத்தில் பெரும்பாலானோருக்குக் கலைக்களஞ்சியம் என்பது உலக அறிவின் தொகுப்பைப் பல பகுதிகளாகக் கொண்டு படங்கள் சொல்லடைவுகள் என்பவற்றை உள்ளடக்கி நூல்விபரப்பட்டியல்கள், விளக்கப்படங்கள், புவியியல் விபரங்கள், சுருக்க விளக்கங்கள் என்பவற்றையும் இணைத்து வெளிவரும் நூலாகக் கருதப்படுகிறது. ஆனால் இவை அனைத்தையும் முழமையாகவோ அல்லது பகுதியாகவோ கொண்டு தனிநபரால் தொகுக்கப்பட்ட ஒருதொகுதிக் கலைக்களஞ்சியம் முதற்கொண்டு ஆயிரக்கணக்கான பங்களிப்பாளர்களின் உதவியுடன் உருவாக்கப்படும் பலதொகுதிக் கலைக்களஞ்சியம் வரை இன்றைய நூலகங்களை அலங்கரிக்கின்றன. வெளியிடப்பட்ட இடம், காலம், என்பவற்றுக்கமைய அறிவின் உள்ளடக்கப் பரப்பானது வேறுபடுகிறது. எல்லாத் துறைகளையும் உள்ளடக்கிய பொதுக் கலைக்களஞ்சியங்கள் பொது நூலகம் ஒன்றுக்கு ஏற்றதெனினும் பரந்த பொருட் துறைகளை உள்ளடக்கிய சிறப்புக் கலைக் களஞ்சியங்களையும் பொது நூலகம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலக்; கலைக் களஞ்சியங்களில் பிரித்தானியக் கலைக் களஞ்சியம், அமெரிக்கானா கலைக்களஞ்சியம், றுழசடன டிழழம நnஉலஉடழியநனயை போன்றவையும், தமிழ்க் கலைக் களஞ்சியங்களில் குழந்தைகள் கலைக் களஞ்சியம், தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்க் கலைக் களஞ்சியம், வாழ்வியல் கலைக்களஞ்சியம், அறிவியல் களஞ்சியம் என்பவையும் முக்கியமானவை.

1.32 அகராதிகள் Dictionaries

ஒரு மொழியில் வழங்குகின்ற சொற்களை அகரவரிசையில் நிறுத்தி அவற்றிற்குப் பொருள் கூறும் நூல்கள் அகராதிகள் எனப்படும். ஷஒரு மொழியின் சொல் வளம், அதன் பொருள் நயம், அவை பயன்படுத்தப்படும் விதம், அவற்றின் இலக்கணக் கூறுகள், அவற்றின் வரலாற்று மூலம் முதலிய இன்னோரன்ன அம்சங்களை அகரவரிசையில் தந்து நிற்பது அகராதி என்கிறார் அகத்தியலிங்கம். அகராதிகள் பொதுவாக மொழி அகராதிகள் ஜடுiபெரளைவiஉ னiஉவழையெசநைளஸ பொருள் அகராதிகள் ஜ ளுரடிதநஉவ னiஉவழையெசநைளஸ என இரு வகைப்படும். மொழி அகராதிகள் தனிமொழி அகராதிகளாகவோ, இரு மொழி அகராதிகளாகவோ பன்மொழி அகராதிகளாகவோ இருக்க முடியும். வெப்ஸ்ரர் அகராதி, ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி, கொலின்ஸ் அகராதி போன்றன ஆங்கிலத் தனிமொழி அகராதிகளில் முக்கியமானவை. அதுபோன்று சிதம்பரச் செட்டியாரின் சென்னைப் பல்கலைக்கழக அகராதி, மதுரைத் தமிழ்ப் பேரகராதி, கோனார் தமிழ்க் கையகராதி போன்றவை தமிழ்த் தனிமொழி அகராதிகளில் குறிப்பிடத்தக்கவை. இருமொழி அகராதிகள் தற்போது பெருந்தொகையாகத் தகவல் சந்தையில் குவிந்து கிடக்கின்றன. இதைவிடவும் கலைச் சொல்லகராதிகளின் பங்களிப்புப் பாடத்துறைக்கு மட்டுமன்றி அறிவுத்தேடலுக்கும் முக்கியமானதாகும்.

1.33 ஆண்டு நூல்கள் Yearbooks

பொதுத்துறை சார்ந்தும், சில சமயங்களில் சிறப்புத் துறை சார்ந்;தும் உருவாகும் அண்மைக்காலத் தகவல்களை விவரண ரீதியிலும் புள்ளிவிபர ரீதியிலும் ஆண்டு ரீதியாகத் தொகுத்துத் தருபவை ஆண்டுநூல்கள் என்கிறது அமெரிக்க நூலகச் சங்கத்தின் கலைச்சொல் அகராதி. குறிப்பிட்ட வருடத்தில் இடம்பெற்ற தகவல்களைத் தொகுத்துத் தருவதே இவற்றின் நோக்கமாகும். சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு பொருட்துறை சார்ந்ததாக அல்லது ஒரு நாடு அல்லது பிரதேசத்துடன் மட்டுப்படுத்தப்பட்டதாக அவற்றின் தகவல்கள் இருக்கக்கூடும். ஆண்டு நூல்;;களைப் பொது ஆண்டு நூல்கள் சிறப்பு ஆண்டு நூல்கள் என இரு வகையாகப் பாகுபடுத்தலாம். பொது ஆண்டு நூல்கள் பொதுவாக எல்லா நாடுகளதும் அண்மைக்காலத் தகவல்களை உள்ளடக்கி வெளியிடப்படுபவை. ளுவயவநஅநn'ள லநயசடிழழமஇ நுரசழிய லநயச டிழழமஇ றழசடன லநயச டிழழம போன்றவை இவ்வகையைச் சாரும். சிறப்பு ஆண்டு நூல்கள் கல்வி சார்ந்ததாகவோ அல்லது ஒரு நாட்டுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகவோ அல்லது கலைக்களஞ்சியங்களின் அனுபந்தங்களாகவோ இருக்கலாம். ஊழஅஅழn றநயடவா ருniஎநசளவைல லநயசடிழழம-கல்வி சார்ந்த ஆண்டு நூலாகும்.

1.34 வழிகாட்டிகள் Directories

தனிநபர்களது பெயர், முகவரி போன்ற விபரங்களையும், நிறுவனங்களது பெயர், முகவரி அலுவலர் விபரம் தொழிற்பாடுகள் போன்ற தரவுகளையும் முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கில் ஒழுங்குபடுத்தி உருவாக்கப்படும் பட்டி வழிகாட்டி எனப்படுகிறது. குறிப்பாக பொதுநூலகங்களில் வழிகாட்டுதலுடன் சம்பந்தப்பட்ட தகவல்களே அதிகம் தேவைப்படுவதனால் இவை மிக முக்கியமான உசாத்துணைவளமாகக் கருதப்படுகின்றன.
வழிகாட்டிகளைப் பின்வரும் ஆறு பெரும் பிரிவுகளுக்குள் வகைப்படுத்தலாம்.
1.    உள்ர் வழிகாட்டிகள்: தொலைபேசி நூல்கள், நகர வழிகாட்டிகள். உள்ர்ப்; பாடசாலைகளின் வழிகாட்டிகள்,  சங்கங்கள், சினிமாத்  தியேட்டர்கள், சமூகக் குழுக்கள் போன்றவற்றின் வழிகாட்டிகள் இவ்வகைக்குள் அடங்கும்.
2.    அரச வழிகாட்டிகள்: தபாலகங்கள், இராணுவ கடற்படைப் பிரிவுகள் என்பவற்றின் வழிகாட்டிகளும் உள்ர் மாநில நகர அரசாங்கங்களினால் ஆயிரக்கணக்கான அளவில் வழங்கப்படும் சேவைகளுக்கான வழிகாட்டிகளும் இவ்வகைக்குள் அடங்கும்.
3.    நிறுவன வழிகாட்டிகள்: பாடசாலைகள், நூலகங்கள், மருத்துவ நிலையங்கள், அரும்பொருளகங்கள் போன்ற நிறுவனங்களின் வழிகாட்டிகள் இவ்வகைக்குள் அடங்கும்.
4.    முதலீட்டுச் சேவைகள் : பொதுசன தனியார் நிறுவனங்கள் கம்பனிகளின் விபரங்களைத் தருகின்ற வர்த்தக வியாபார வழிகாட்டிகளை இது குறிக்கும்.
5.    தொழிற்திறன்சார் வழிகாட்டிகள்: சட்டம் மருத்துவம், நூலகவியல் போன்ற தொழிற்திறன்சார் நிறுவனங்களின் தகவல்களை விரிவாக வழங்கும்
6.    வர்த்தக வியாபார வழிகாட்டிகள்: உற்பத்தியாளர்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சேவைகள் பற்றிய தகவலை வழங்கும் வழிகாட்டிகள் இவ்வகைக்குள் அடங்கும்.
றுழசடன ழக டநயசniபெ என்னும் கல்வி சார் வழிகாட்டி, குரசபரளழைn ளசi டயமெய னசைநஉவழசல  எனப்படும் உள்ர் வழிகாட்டி, ஐவெநசயெவழையெட கழரனெயவழைn னசைநஉவழசல போன்றவை எல்லா நூலகங்களிலும் இருக்க வேண்டியவை.

1.35 ஐந்தொகுதிகள் Almanacs

நாட்காட்டிகள், வானியல் தரவுகள் உட்பட முக்கிய தகவல்களைத் தொகுத்துத் தரும் ஒரு வருடாந்த வெளியீடு இதுவாகும். சில சமயங்களில் குறித்த ஒரு துறை சார்ந்த புள்ளிவிபரங்களையும் தகவல்களையும் தருகின்ற ஆண்டு நூலாகவும் இது தொழிற்படும். ஐந்தொகுதிகளின் ஆரம்ப கால வடிவம் கோள்களின் இடமாற்றம், நீரோட்டங்களின் வேகங்கள், விடுமுறைத் தினங்கள் என்பவற்றைக் காலரீதியாகத் தொகுத்துத் தருவதாகவே இருந்தது. எமது வீடுகளில் நாம் பயன்படுத்தும் பஞ்சாங்கங்கள் இவ்வகையைச் சார்ந்தவையே. எனினும் காலப்போக்கில் இவை பயனுள்ள புள்ளிவிபரத் தரவுகளையும் உள்ளுர்,தேசிய சர்வதேச ரீதியில் இடம் பெறும் அண்மைக்காலத் தகவல்களை மட்டுமன்றி பழைய தகவல்களையும் தொகுத்துத் தரும் சாதனமாக மாறின. ஆண்டு நூல்கள் அண்மைத்தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் அதேசமயம் ஐந்தொகுதிகளோ புதிய தகவல்களை மட்டுமன்றி பழைய தகவல்களையும் உள்ளடக்குவதுடன் வானியல் சம்பந்தப்பட்ட தகவல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றது. ஐந்தொகுதிகளில் றூவைநமநச யடஅயயெஉஇ றழசடன யடஅயயெஉ யனெ டிழழம ழக கயஉவளஇ ஐகெழசஅயவழைn pடநயளந யடஅயயெஉ போன்றவை முக்கியமானவை.

1.36 வாழ்க்கை வரலாற்று நூல்கள் Biographical resources

பொது நூலகங்களுக்குரிய சிறப்புத் தகவல் வளங்கள் என்ற தகுதியைப் பெறுவதில் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்குக் கணிசமான பங்குண்டு. மனிதன் தன்னை வடிவமைத்துக் கொள்வதற்கு அவனுக்கு மாதிரிகள் மிக அவசியமாகும். இந்த மாதிரிகளை அவனுக்கு வழங்குவது சுயசரிதை நூல்களும் வாழ்க்கைச் சரிதங்களுமே ஆகும். தன்னைப் பற்றித் தானே எழுதி வைப்பது சுய சரிதையாகும். வாழ்க்;கை வரலாற்றுத் தகவல்களுக்கெனப் பலதரப்பட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஐந்தொகுதிகள், வாழ்க்கை வரலாற்று அகராதிகள், அகராதிகள், வழிகாட்டிகள், கலைக்களஞ்சியங்கள், கைந்நூல்கள், செய்தித்தாள்கள், வரலாற்று நூல்கள், விமர்சனங்கள் போன்றவை வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களைத் தருகின்றன. மேற் குறிப்பிட்ட தகவல் வளங்களில் வாழ்க்கை வரலாற்று அகராதிகள் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களைத் தரும் முக்கிய தகவல் வளமாகக் கருதப்படுகின்றன. சர்வதேச யார் எவர், சேம்பர்ஸ் வாழ்க்கை வரலாற்று அகராதி போன்றவை மட்டுமே உடனடி உசாத்துணைப் பகுதிக்குரியவையாகக் கருதப்படும் அதே சமயம் தனிநபர் வரலாறுகள் அனைத்தும் உசாத்துணைப் பகுதியில் தனி இறாக்கையில் வாசகரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்படல் அவசியமாகும்.

1.37 புவியியல் சாதனங்கள் Geographical Resources

புவியியல் சாதனங்களில் புவியியல் அகராதிகள், வழிகாட்டி நூல்கள், தேசப்படத் தொகுதிகள் என்பன முக்கியமாகும்.

1.371 புவியியல் அகராதிகள் Gazetteers

நகரங்கள், பட்டினங்கள், சமுத்திரங்கள் ஆறுகள், மலைகள், மலைத் தொடர்கள் போன்ற புவியியல் சார்ந்த இடங்களின் அமைவிடம், அவற்றின் குடித்தொகை, பிரதேசம் சமூக பொருளாதார வரலாற்றுத் தகவல்கள் போன்றவை தொடர்பான சுருக்க விவரணம் போன்றவற்றைக் கண்;டறிவதற்கான சாதனமாக இவை தொழிற்படுகின்றன.  தேசப்படத் தொகுதியொன்றிற்கான சொல்லடைவை நாம் புவியியல் அகராதி என அழைக்கலாம். எனினும் தரமான ஒரு தேசப்படத் தொகுதியின் இறுதியில் தரப்பட்டிருக்கும் சொல்லடைவு ஒன்று, தரமுடியாத  இடங்கள் பற்றிய அமைவிடத் தகவல்கள் நிச்சயம் இவற்றில் இருக்கும் என்பதே இவற்றின் சிறப்பம்சமாகும். பெரும்பாலான புவியியல் அகராதிகள் அகலக்கோடுகள் நெடுங்கோடுகளையும் தருவதனால் பெரிய அளவுத் திட்டத்தில் வரையப்படும் ஒரு தேசப்படத்தில் தேவைப்படும் இடத்தைக் கண்டுபிடிப்பது இலகுவாக இருக்கும்.

1.372 வழிகாட்டி நூல்கள் Guidebooks

தொடர்பு வழிமுறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி உலகம் பூராவும் சுற்றுலாத் துறையை வளர்த்தமையே இத்தகைய சாதனங்களின் தோற்றத்துக்குக் காரணமாய் அமைந்தது. நகரங்கள், பிரதேசங்கள், நாடுகள் பற்றிய தகவல்களைச் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு தரும் நூல் வழிகாட்டி நூல் என்கிறது ஏ.எல்.ஏ கலைச் சொல் அகராதி. ஒரு பிரயாணி தான் சுற்றிப் பார்க்கச் செல்லும் நாட்டில் எதைப் பார்க்க வேண்டும், எங்கே உணவு கிடைக்கும், எப்படி அவ்விடத்துக்குச் செல்வது போன்ற தகவல்களைச் சுற்றுலாப்பயணிக்கு தருவதே வழிகாட்டி நூல்களின் நோக்கமாகும். இவை பொதுவாகக் கையடக்கமாகவும், கொண்டு செல்லச் சுலபமானவையாகவும் தயாரிக்கப்படுகின்றன. இவை மிக விபரமான தகவல்களைத் தரும் சாதனமாக இருப்பதனால் புவியியல் அகராதிகளை விடவும் பயன்கூடியவையாகும்.
தேசப்படங்கள்;; ஜஆயிளஸ

படங்களின் பௌதிக வடிவமைப்பு பலதரப்பட்ட அளவுகளிலும், வடிவங்களிலும் கிடைக்கிறது.  இது முப்பரிமாணப் பூகோளப் படத்திலிருந்து இரு பரிமாண தாள் அல்லது பிளாஸ்ரிக்காலான மாதிரிவரை  வேறுபடுகிறது. பூமியின் அல்லது அதன் ஒரு பகுதியின் மேற்பரப்பளவின் தட்டை வடிவப் பிரதிபலிப்பே தேசப் படங்களாகும்.  பௌதிக அம்சங்கள், அரசியல் எல்லைகள், சனத்தொகை, இயற்கை வளங்கள் போன்றவற்றைச் சுட்டுகின்ற பூகோளமும் தேசப் படமும் பூமியின் அம்சங்களையும் பண்புகளையும் வெளிக்காட்டும் சாதனங்களாக இருப்பினும் இவை இரண்டிற்குமிடையே பெரியளவிலான வேறுபாடுகள் உண்டு.

வர்த்தக இலக்கியங்கள் Trade literatures

பொதுவாக வியாபார நோக்குடைய நிறுவனங்களினால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்ற , குறிப்பிட்ட உற்பத்திப் பொருட்கள் பற்றியும் அவற்றின் அபிவிருத்தி பற்றியும் தகவல்களைக் கொண்ட விளம்பரங்கள் , பட்டியல்கள், உற்பத்தியாளருக்குரிய சேவைகள், செய்ம்முறைகள், உற்பத்தி உபகரணங்களின் விளக்கப்படங்கள் போன்றவை இவ்விலக்கியங்களில் உள்ளடக்கப்படுகின்றன. இத்தகைய இலக்கியங்களின் முக்கிய நோக்கம் உற்பத்தியாளரின் உற்பத்திகளை விற்பதற்கு அல்லது அவர்களின் உற்பத்திகளை முன்னேற்றுவதற்கு ஆகும். தொழினுட்ப அறிக்கைகள் விலைப்பட்டியல்கள், தரவுப் பட்டியல்கள்,  தரவுத் தளங்கள், பராமரிப்பு வழிகாட்டிகள் போன்ற பல வடிவங்களில் இவை உற்பத்தியாகின்றன. இவை ஆரம்பத்தில் உடனடி உசாத்துணை நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்படும் எனினும் குறிப்பிட்ட நூலின் புதிய பதிப்புகள் வந்தடையும் போது பழையவை குறுங்கால எழுத்து மூலங்களாகக் கருதப்பட்டு நூல் இருப்பிலிருந்து நீக்கப்படுகின்றன. அல்லது பருவ இதழ் இருப்புப் பகுதிக்கு மாற்றப்படுகின்றன.

1.4 பருவ வெளியீட்டுப் பகுதி  Serial Area
ஒழுங்கான கால இடைவெளியில், சீரான வடிவத்தில், நிலையான தலைப்புடன் கூடியதாக, பகுதிகளாகவோ தொடராகவோ வெளியிடப்படும் எந்தவொரு வெளியீடும் பருவ வெளியீடுகள் எனப்படும். செய்தித்தாள்கள், பருவஇதழ்கள், வருடாந்த வெளியீடுகள், தொடர் நூல்கள், சங்க நடவடிக்கைக் குறிப்பேடுகள், நிறுவன வெளியீடுகள் என்பன இதில் உள்ளடங்குகின்றன. உசாத்துணைப் பகுதி போன்றே பருவ வெளியீடுகளுக்கான பகுதியும் உசாத்துணை நோக்கத்தைக் கொண்டது. இவை கால அடிப்படையில் தொடராக வெளியிடப்படுவதனால் இதன் ஒரு இதழ் தொலைந்தாலும் இவற்றின் தொடர்ச்சித் தன்மை அற்றுப்போய்விடும் என்பதால் இவை பெரும்பாலும் இரவல் வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட ஆண்டுக்கான அனைத்து இதழ்களும் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அவை ஒன்றாகக் கட்டப்பட்டு அதன் பின்னரேயே நூல் என்ற அந்தஸ்து அவற்றுக்கு வழங்கப்படுமெனினும் அவை நிரந்தர உசாத்துணைப் பகுதிக்குரிய வளமாகவே தொடர்ந்து பேணப்படும். தகவல் வளங்களுக்குள்ளேயே மிகப் பெறுமதி வாய்ந்த வளமாக இவை கருதப்படுவதும் பெரிய நூலகங்களின் நிதி ஒதுக்கீட்டில் முக்கால் பகுதி பருவ இதழ்களுக்கே செலவிடப்படுவதும் இதன் உசாத்துணைப் பெறுமதியை அதிகரித்து விட்டிருக்கின்றது.

1.41 சிறப்பு மலர்கள்  Souvenirs

வாசகரின் பயன்பாட்டுக்கு உதவும் உள்ளுர் சார்ந்த முக்கிய வளமாக ஆண்டு மலர்கள் கருதப்படுகின்றன. இவை நிறுவனம் சார்ந்ததாக அல்லது தனிநபர் சார்ந்ததாக வெளியீடு செய்யப்படலாம். ஆண்டு விழா, பொன் விழா, வெள்ளி விழா போன்ற சிறப்பு மலர்களாகவோ அல்லது நினைவு மலர்களாகவோ இவை இருக்கலாம். குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களால் வருடாவருடம் வெளியாகும் ஆண்டு மலர்கள் பருவ இதழ்களாகக் கருதப்பட்டு பருவ இதழ்களுடன்  சேர்க்கப்படக் கூடும். எமது பிரதேசத்தில் சமூக அறிவியல் துறை, கல்விநிறுவனம் சார்ந்து வெளியிடப்படுபவை, இந்து சமய ஆலயங்கள் சார்ந்து வெளியிடப்படும் மலர்கள் மிக முக்கிய ஆய்வு வளமாகக் கருதப்படுகின்றன. பொது ஆண்டு மலர்களில் கணிசமானவை சனசமூக நிலையங்கள், இதழியல் துறை சார்ந்தவை. இலக்கிய ஆண்டு மலர்களும் கணிசமானளவுக்குக் காணப்படுகின்றன.

1.42 தொடர் Series

பொருட்;துறையில் ஒன்றிற்கொன்று தொடர்புடைய தொகுதிகள் கால அடிப்படையில் ஒன்றன்பின் ஒன்றாக ஒரே வெளியீட்டாளரினால், ஒரே விலையில், ஒரே வடிவத்தில், ஒழுங்கற்ற கால இடைவெளியில், தொடர்த் தலைப்புகளை நூலின் முன்பக்கத்திலோ அல்லது தலைப்புப் பக்கத்திலோ கொண்டதாக வெளியிடப்படும் தொகுதிகள்.

1.43 பருவ இதழ்கள்Periodicals

செய்தியறிக்கைகள், சஞ்சிகைகள், செய்திக்கடிதங்கள், சங்க நடவடிக்கைக் குறிப்பேடுகள் போன்ற பெயர்களில் வெளியாகும் வெளியீடுகள் அனைத்தும் பருவ இதழ்கள் என்ற பொதுப் பெயருக்குள் அடங்குகின்றன. பெரும்பாலான ஆரம்ப இலக்கியங்கள் யாவும் பருவ இதழ் வடிவிலேயே வெளியாகின்றன. அறிவியல் ரீதியான தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கான பிரதான தொடர்புச் சாதனமாகக் கருதப்படும் இவை உண்மையான ஆய்வுகளை உடனுக்குடன் அறிக்கைப்படுத்துகின்றன. இவற்றில் வெளிவரும் தகவல்கள் நூல்களில் உள்ளவற்றிலும் பார்க்கப் புதியவையாகும். பருவ இதழ்களை அவற்றின் உள்ளடக்கத்தைக் கொண்டு பொதுப்பருவ இதழ்கள் பொருட் பருவ இதழ்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். குறிப்பிட்ட ஒரு பொருட்துறை சார்ந்ததாக இல்லாமல் அரசியல், ஆக்க இலக்கியங்கள், விளையாட்டு, சினிமாச் செய்திகள், விளம்பரங்கள் போன்றவற்றை உள்ளடக்கி வெளிவருபவை பொதுப்பருவ இதழ்களாகும். எ-டு இந்தியா ருடே, தாயகம், மல்லிகை போன்றவை. காத்திரமான ஆக்கங்களைக் கொண்டிராது செய்தித் துணுக்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றைத் தாங்கி வரும் பருவ இதழ்கள் சஞ்சிகைகள் என அழைக்கப்படுகின்றன.

1.44 செய்திக் கடிதங்கள் Newsletters

நிறுவனங்களின் செயற்பாடுகளைப் பருவரீதியாகத் தாங்கிவரும் வெளியீடுகள். இவை மாதரீதியாகவோ அல்லது காலாண்டு ரீதியாகவோ வெளியிடப்படலாம்.
1.5 அரசாங்க ஆவணப் பகுதிGovernment Document Area

அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்ற உத்தியோக பூர்வமான வெளியீடுகள் அரசாங்க வெளியீடுகள் எனப்படும்.  எந்த ஒரு நாட்டிலும் ஓர் அரசாங்கம் அதிகாரபூர்வமான வெளியீட்டாளராக இருந்து அரசாங்க அறிக்கைகள், சட்டங்கள், விசேட ஆணைக்குழு அறிக்கைகள் போன்றவற்றை வெளியிடுகின்றது. பாராளுமன்ற விவாதங்கள், மசோதாக்கள், சட்டங்கள்,  பருவகால ஆணைப்பத்திரங்கள், பாராளுமன்றத் தொடர்கள், நீலப்புத்தகம் போன்றவை அரச ஆவணப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

1.51 அறிக்கைகள் Reports

நடைமுறையில் இருக்கும் ஆய்வு அபிவிருத்தித் திட்டங்களின் முடிவுகளை வெளியிடுவதே அறிக்கைகளாகும்.  ஒரு நாட்டில் அரசாங்கத்தின் அதிகாரத்துடன் வெளியிடப்படும் நம்பகரமான,  அதிகாரபூர்வ வெளியீடுகளாக இவை இருப்பதுடன் உள்ளுர், பிரதேச, தேசிய, சர்வதேசிய ரீதியாகக் குறைந்த விலையில் வெளியீடு செய்யப்படுகின்றன. பருவ இதழ்க் கட்டுரைகள் பூரணப்படுத்தப்பட்ட பணிகளையும் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பணிகளையும் மட்டுமே சேர்த்துக் கொள்ளும் அதேசமயம் அறிக்கைகளோ ஆய்வுகளின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்தையும்; பிரதிபலிப்பதுடன் நின்றுவிடாது இடைநிறுத்தப்பட்ட ஆய்வுப்பணிகளையும் தோல்வியில் முடிவடைந்த ஆய்வுப்பணிகளையும் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான முக்கிய தகவல் மூலமாகக் கருதப்படுகின்றன. வெளிநாட்டு அறிக்கைகளில்
world development report, human development report போன்றவையும், உள்றாட்டு அறிக்கைகளில் மத்திய வங்கி அறிக்கை, குடித்தொகைப் புள்ளிவிபர அறிக்கை போன்றவையும் முக்கியமானவை.

1.6 ஆவணக் காப்பகப் பகுதி Archive area
ஆவணக் காப்பகப் பகுதியானது ஆய்வு நூலகங்களுக்கு மட்டுமே பொருத்தமானது என்ற தவறான கருத்துநிலை பொதுவாக எம்மிடையே உண்டு. ஒரு பிரதேசம் அமைந்துள்ள இடத்தின் சமூக கலை , கலாசார, அம்சங்களைப் பிரதிபலிக்கும் இடமாகப் பொதுநூலகம் இருக்கவேண்டுமெனில் அது அப்பிரதேசத்திற்கென்றே தனித்துவமான அம்சங்களைப் பேணிப் பாதகாக்கும் இடமாகத் தொழிற்படல் அவசியமாகும்.

1.61 ஆய்வுக்கட்டுரைகள் Dissertations
வழிகாட்டுபவரின் மேற்பார்வையின்கீழ் முதுநிலைப் பட்டத்துக்காக அல்லது கலாநிதிப் பட்டத்துக்காகப் பல்கலைக்கழகத்தை அல்லது கல்வி சார்ந்த நிறுவனமொன்றைச் சேர்ந்த  மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் ஆய்வின் முடிவில் எழுதப்படும் அறிக்கை. உண்மையான ஆய்விற்கான சான்றுகளை இக்கட்டுரை உள்ளடக்க வேண்டும் என்பதுடன் குறிப்பிட்ட துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு வேண்டிய முக்கிய ஆவணங்களாக இவை வடிவமெடுக்கின்றன. ஆய்வுக் கட்டுரைகள் பொதுவாக பல்கலைக் கழக நூலகங்களிலேயே பாதுகாக்கப்படுமெனினும் ஒரு பிரதேசத்தில் வாழும் அறிஞர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளின் ஒரு பிரதியைத் தமது பிரதேசத்திலுள்ள பொது நூலகத்துக்கு வழங்குவதன் மூலம் பிரதேசத்திலுள்ள அறிஞர்களது ஆக்கங்கள் பாதுகாக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு. அதே போன்று பொது நூலகம் அமைந்துள்ள  பிரதேசம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்படின் ஆய்வு செய்தவரிடமிருந்து ஒரு பிரதியைப் பெற்று அந் நூலகத்தில் பாதுகாத்தல் மிகச் சிறந்த செயற்பாடாகும்.

1.62 சிறு நூல்கள் Pamphlets
நிரந்தரமாகக் கட்டப்படாத அச்சு வடிவ ஆக்கம் எதுவும் சிறுபிரசுரம் அல்லது சிறு நூல் என்ற பதத்தால் குறிப்பிடப்படுமெனினும் சர்வதேசப் பட்டியலாளர் மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதன்படி ஆகக் குறைந்தது 5 பக்கங்கள் உடையதாகவும் 48 பக்கங்களுக்கு மேற்படாததாகவும் உள்ள பருவஇதழ் அல்லாத வெளியீடுகள் அனைத்தும் இவ்வகைக்குள் அடங்குகின்றன. ஜர்யசசழன'ள 1987ஸ கட்டப்படாதபோதும் சில சிறு நூல்கள் அதிக பக்கங்களைக் கொண்டமைந்ததாகவும் நிரந்தரப் பெறுமதியுடையதாகவும் இருக்கக்கூடும். செய்தித்தாள் துணுக்குகள் முதல் அச்சிடப்பட்ட புலமைத்துவ அறிக்கைகள் வரை இவை பலதரப்பட்டவையாக அமையும.; பருவ இதழ்க் கட்டுரைகள், சிறிய செயற்திட்ட அறிக்கைகள், விசேட உற்பத்திப் பொருட்களுக்கான  துண்டுப்பிரசுரம் போன்றவைற்றைக் குறிப்பிடலாம். பொது நூலகமொன்று தனது பிரதேசம் சார்ந்தோ, தனது பிரதேசத்திலோ வெளியிடப்படுகின்ற அனைத்துச் சிறு பிரசுரங்களையும் பேணிப் பாதுகாக்கும் கடப்பாடுடையது.

1.63 காப்புரிமை இலக்கியங்கள் Patents

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஒரு புதிய உருவாக்கத்தை அல்லது கண்டுபிடிப்பை மேற்கொள்ளவோ, பயன்படுத்தவோ, விற்கவோ அரசினால் வழங்கப்படுகின்ற பிரத்தியேக உரிமை காப்புரிமை எனி பிரித்தானியக் கலைக்களஞ்சியம் கூறுகிறது. ஒரு பொருளை உருவாக்குபவருக்கு அல்லது வடிவமைப்பவருக்கு அதிகூடிய இலாபத்தைத் தரக்கூடிய வகையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குப் பாதுகாப்பு வழங்குகின்ற, குறித்த உருவாக்கம் ஒன்றின் உற்பத்தி, வடிவமைப்புத் தொடர்பான பாதுகாப்பை எழுத்துவடிவில் வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்படுகின்ற பொருளாக்க விபரக்குறிப்பே காப்புரிமை இலக்கியங்கள் எனப்படுகிறது. இவை ஒவ்வொரு நாட்டிலும்; இதற்கென உருவாக்கப்பட்ட காப்புரிமை அலுவலகங்களினால் உருவாக்கத்தின் பெயர், அது தொடர்பான சுருக்க விளக்கம், உருவாக்கத்திற்குப் பயன்பட்ட பிரயோகங்கள் தொடர்பான விபரக் குறிப்புகள், உருவாக்கத்தின் பின்னனி போன்ற விபரங்களை உள்ளடக்கி வெளியிடப்படுகிறன.

1.64 நியமங்கள் Standards

ஒவ்வொரு நிறுவனமும் அதனது நோக்கங்களையும் கொள்கைகளையும் பூர்த்தி செய்வதற்கென மேற்கொள்கின்ற செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு உருவாக்குகின்ற சட்ட திட்டங்கள் அடங்கிய விபர ஏடு இதுவாகும். நவீன சமூகம் ஒன்றின் முன்னேற்றமானது நியமங்கள் இன்றிக் கடினமானது என்பதிலிருந்தே நியமங்களின் முக்கியத்துவத்தை உணர முடியும். குறிப்பிட்ட உற்பத்தியாளரினால் உற்பத்தி செய்யப்படுகின்ற உற்பத்திகளை இலகுவாக்குதல் அவற்றை விநியோகித்தல் என்பவற்றுடன் இவை தொடர்புபடுகின்றன. நுகர்வோரைப் பொறுத்து அவர்களுக்கு நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துபவையாக இவை உள்ளன. பொருட்கள், உற்பத்திப் பொருட்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படவேண்டும், நிரூபிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளினடிப்படையில் ஒரு பொருளை எவ்வாறு உற்பத்தி செய்தல் வரைவிலக்கணப்படுத்தல், அளத்தல், பரிசோதித்தல் போன்ற விபரங்களை நியமங்கள் தருகின்றன.

1.65 பொருளாக்க விபரங்கள் Specifications

தனியுரிமையாகக் கருதப்படுகின்ற துறைகளின் முழுச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் முறை பற்றிய விபரங்கள் அடங்கிய பதிவேடு. எ.டு  சிற்ப வேலை

1.66 வெளியிடப்படாத ஆவணங்கள் Unpublished documents

ஆய்வுகூடக் குறிப்பேடுகள், நாட்குறிப்பேடுகள், கையெழுத்துப் பிரதிகள், தனிப்பட்டவர்களுக்கு எழுதப்படும் முக்கிய கடிதங்கள், நிறுவனங்களின் கோப்புகள், உள்ளக ஆய்வு அறிக்கைகள், உருவப்படங்கள், வாய்மொழி வரலாறுகள், நாணயங்கள் போன்ற வெளியிடப்படாத தகவல் வளங்களும் பொது நூலகங்களின் முக்கிய தகவல் வளங்களாகக் கருதப்பட வேண்டியவை.

1.7 சிறுவர் பகுதி Children's area
இப் பகுதியானது சிறப்பாகப் பொது நூலகங்களுக்கும், பாடசாலை நூலகங்களுக்குமே உரியது. நூலகச் சந்தையில் வெளியிடப்படாத சிறுவர்க்கான வண்ணம் தீட்டுதல் சார்ந்த நூல்கள் தொடக்கம் விளையாட்டு நூல்கள், பொறிகளின் இயக்கம் சம்பந்தப்பட்ட சாதனங்கள், பாடநூல்கள், பாடவிதானத்துடன் கூடிய கட்புல செவிப்புல சாதனங்கள், கையெழுத்துப்பிரதிகள் வரை சிறுவர் இலக்கியங்களுக்குள் உள்ளடங்கும். சிறுவர்களின் பொழுதுபோக்கு, மீளுருவாக்கம், தகவல் என்பவற்றை அளிக்கக்கூடிய பிரதான வெளியீடுகள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். அறிக்கைகள் ,தனிப்பட்ட பரிசோதனைகள், புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வு அறிக்கைகளுக்கான பொருள் விளக்கங்கள் சிறுவர் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவக்கூடிய உசாத்துணைச் சேகரிப்புகள் போன்றவை இதில் உள்ளடங்கும். முன்பள்ளி, ஆரம்ப, இடைநிலைப் பிரிவு மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தரக்கூடிய அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அவர்களின் வாசிக்கும் ஆற்றலுக்கு உதவக்கூடிய சேகரிப்புகள் என்பன இங்கு கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். அடிப்படைத் தகவல்களைக் கொண்ட தனிப்பொருள்நூல்களின் பழைய புதிய பதிப்புகள், பிரதான எழுத்தாளர்களின் ஆக்கங்கள், பருவ இதழ்கள், சிறுநூல்கள், உசாத்துணைச் சாதனங்கள், அச்சு வடிவில் கிடைக்காத ஆக்கங்கள் என்பன இதற்குள் உள்ளடங்கும்.

1.8 நூலுருவற்ற சாதனப் பகுதி Non Book materials area
நூலுருவற்ற சாதனங்களுக்குள் மரபுரீதியான சாதனங்களான ஓவியங்கள், ஓலைச் சுவடிகள் முதற் கொண்டு இன்றைய நவீன கணினிப் பதிவுகள் வரை உள்ளடங்கும். எமது பிரதேசங்களிலுள்ள பொது நூலகங்கள் இத்தகையதொரு கருத்துநிலைக்குப் பழக்கப்பட்டவை அல்ல.  எனினும் நூலகங்களிலேயே நூலுருவற்ற சாதனங்களை அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டிய நூலகமாகப் பொது நூலகமே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் தகவல் பதிவேடுகளின் உருவமைப்பு சார்ந்து காலத்துக்குக் காலம் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே மாறி வரும் தொழினுட்ப உலகுடன் இயைந்து போக முடியும்.

1.81 ஓலைச்சுவடிகள் Ola leaves

தாள்களின் கண்டுபிடிப்புக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட எழுது சாதனங்களில் ஓலைச்சுவடிகள் முக்கியமானவை. எம்மிடையே பாவனையில் இருக்கும் ஓலைச் சுவடிகள் தனித்தனி ஓலைகளில் கூர்மையான உலோகத்தினாலான எழுது கோல் கொண்டு பொறிக்கப்பட்டு அல்லது பேனாவின் மை கொண்டு எழுதப்பட்டு, பனையோலைகளின் நடுவில் அல்லது இரு முனைகளிலும் துளையிடப்பட்டு, அவற்றினூடாக நூல் செலுத்தப்பட்டு ஒன்றாகச் சேர்த்துக் கட்டப்பட்ட வடிவில் உள்ளன. பழைய பெறுமதி மிக்க  சித்த மருத்துவ நூல்களில் பெரும்பாலானவை ஓலைச் சுவடிகளாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1.82 ஓவியங்கள் Paintings

கலைப்பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டுகளாக விளங்கும் ஓவியங்கள் மிகச் சிறந்த தகவல் சாதனங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. ஓவியங்களை வரைவதற்குத் துணி, தாள், மரம், கண்ணாடி போன்றன பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மேற்பரப்பு சொரசொரப்புத் தன்மை வாய்ந்ததன் காரணமாக மேற்பரப்பை வழவழப்பாக்குவதற்கு ஒட்டுப்பசை, எண்ணெய,; மெழுகு அல்லது மாக்கலவை பயன்படுத்தப்படுகின்றது.  ஓவியங்கள் கலப்புக் கட்டமைவைக் கொண்ட பல்வேறு இழையங்களாலானது. ஓவியங்களின் சிதைவிற்கு இவ்விழைய அடுக்குகளில் ஒன்றின் அல்லது அதற்கு மேற்பட்ட வௌ;வேறு அடுக்குகளின் சிதைவு காரணமாக அமையலாம்.

1.83 கேட்பொலிப் பதிவுகள் Audio recordings
ஒலிப்பதிவுகள் வட்டுப்பதிவுகள்; நாடாப்பதிவுகள் என இருவகைப்படும். 1887ல் எமில் பேளினர் என்ற அமெரிக்கா வாழ் ஜேர்மனியரால் கண்டுபிடிக்கப்பட்ட  கிராமபோன் எனப்படும் தட்டைவட்டுக்களின் வளர்ச்சியே இன்று நாம் பயன்படுத்தும் வட்டுப்பதிவுகளாகும். ஒலிப்பதிவுகளின் அடுத்த மைல் கல் எனப்படுவது 45 சிஅ 331/3 சிஅ அளவுகளில் 1988ல் வெளிவந்த நீண்ட நேரம் இயங்கும் பதிவுகளாகும். லேசர் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குறுவட்டுகள் 1980களில் பிரபல்யம் பெறத் தொடங்கிவிட்டன. 1898ல் எயடனநஅயச Pழரடளழn என்ற பொறியியலாளரால் வுநடநபசயிhழநெ என்ற பெயரில் நாடாப்பதிவு முறை பயன்படுத்தப்பட்டது. 2ஆம் உலகப்போரின் போது ஜேர்மன் பொறியியலாளர்கள் பிளாஸ்ரிக்காலான  காந்த நாடாக்களை விருத்தி செய்தனர். இன்று நாம் பயன்படுத்தும் நாடாக்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆரம்ப காலத்தில் திறந்த சுற்றுகளிலான நாடாக்கள் பயன்படுத்தப்பட்டன. இம்முறைமூலம் நாடா பதிவாக்கியில் ஒலி நாடாவை கையினால் சுற்றவேண்டியிருந்தது. 1960களில் ஒலிப்பதிவுகள் கசற் வடிவில் வெளிவரத் தொடங்கிவிட்டன.


1.84 சலனப் படங்கள் Motion pictures

தகவல் வளங்களின் முக்கிய அங்கமாக கருதப்படும் இவை தற்காலத்தில் 70அஅஇ35அஅஇ16அஅ அளவுகளில் விற்பனையில் உள்ளன. 35அஅ அளவானது மிகப் பெருந்தொகையாக மக்கள் கூட்டத்துக்கு தியேட்டரில் போட்டுக் காட்டுவதற்கென தொழிற்திறன் சார் ரீதியில் தயாரிக்கப்படுவதாகும்;. அதேபோல் 70அஅ வடிவமும் இத்தகைய பயன்பாட்டுக்கென்றே தயாரிக்கப்படுகிறது. 16அஅ வடிவமைப்பே தகவல் அமைப்புக்கு உகந்ததாகும். இவை வேகம் குறைந்தவை. சிறியவை.ஒரு சுற்று கிட்டத்தட்ட ஓரிரு நிமிடங்களை மட்டுமே கொண்டவை. கேலிச் சித்திரங்கள் வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான பொழுதுபோக்கு அம்சங்களை இவை ஆரம்பத்தில் உள்ளடக்கின. 1940களிலிருந்து கல்விசார் படங்களின் உருவாக்கத்துடன் இவை மதிப்பு வாய்ந்த ஊடகமாக அங்கீகரிக்கப்பட்டன. ஒலி,ஒளி,அசைவு ஆகிய மூன்று அம்சங்களும் இணைந்த வகையில் தகவலைத் தரும் ஒரேயொரு வடிவமாக இவை ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் பராமரிக்க இலகுவானவையாகவும்; பொருளாதார ரீதியில் சிக்கனமாகவும் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

1.85 வீடியோ பதிவுகள் Video recordings

வீடியோ என்ற சொல்  எளைழைn என்ற சொல்லின் முதல் இரு எழுத்தையும் யுரனழை என்ற சொல்லின் இறுதி மூன்றெழுத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டதொன்று. இதனை ஒளிப்பதிவு என்று தமிழ் விளக்கம் செய்வது சாத்தியமற்றது. ஏனெனில் ஒலி, ஒளி இரண்டும் இணைந்ததே இப் பதமாகும். எனவே வீடியோப் பதிவுகள் என்ற பெயரே இங்கு பயன்படுத்தப்படுகின்;;;;றது.   

1.86 நுண்வடிவங்கள் Microforms

மரபுரீதியான பிரதியாக்க முறைகளில் மிக முக்கியமாகக் கருதப்படுவது நுண்வடிவங்கள் ஆகும். நவீன துறைகளில் இவற்றின் தேவை அதிகரித்திருப்பதுடன் நூல்கள்இ பருவ இதழ்கள்இ செய்தித் தாள்களஇ; அரசாங்க வெளியீடுகள் போன்றவற்றின் இடத்தை இது அதிகளவில் கைப்பற்றியிருக்கின்றது. ஆவணங்களைப் பழுதடையாமல் பாதுகாத்தல், இடத்தை மீதப்படுத்தல், தகவல் அமைப்புகளுக்கிடையிலான இரவல் வழங்கும் சேவையை ஊக்குவித்தல், உசாத்துணைச் சேவையை ஊக்குவித்தல், நிதி நெருக்கடியைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை நிவர்த்தி செய்வதே நுண்வடிவங்களாகும். நுண்வடிவங்களை நுண்படங்கள், நுண் தாள்கள், நுண் அட்டைகள், நுண் அச்சுகள் என நான்கு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். நூலகங்களில் அதிகம் பயனபடுத்தப்படுவது நுண் படங்களும் நுண் தாள்களுமாகும். தொடர்ச்சித் தன்மை வாய்ந்த தகவல்களை எடுப்பதற்கு நுண் படங்கள் சிறந்தவை. எனினும் ஒரு ஆவணத்தை ஒரு தாளிலேயே பிரதி பண்ணுவதற்கு உதவும் நுண் தாள்களே நூலகங்களில் புகழ் பெற்றவையாகும்.

1.87 படத்துணுக்குகள் காட்சி வில்லைகள் Filmstripts and slides

அச்சுவடிவற்ற ஊடகங்களின் ஆரம்பகால வடிவங்களில் ஒன்றாக இவை கருதப்படுகின்றன குழுரீதியான காட்சிப்படுத்தலுக்கான ஆரம்ப கட்டங்களுக்கு இவை பொருத்தமானவையாகக் கருதப்படுகின்றன. படத்துணுக்குகள் 35அஅ ஒளிப்படச்சுருளில் நிலைப்படுத்தப்பட்ட படத்தொகுதியை இவை கொண்டிருக்கின்றன. காட்சிவில்லைகள் 2'  2'  அளவுள்ள கட்டங்களில் தனித்தனி ஒளிப்படச்சுருள் துண்டுகளில் எடுக்கப்படுபவை. இரண்டுமே ஒரேவகையான ஒளிப்படக்கருவியும் ஒரேவகையான படச்சுருளும் ஒரேமாதிரியான தகவலையும் கொண்டிருப்பவை. இரண்டுக்குமுரிய வேறுபாடுஇ படத்துணுக்குகள் தொடர்ச்சியான படச்சுருள் ஒன்றில் எடுக்கப்படஇ காட்சிவில்லைகளோ தனித்தனித் துண்டுகளாக வெட்டப்பட்ட படச்சுருளில் எடுக்கப்படுகின்றன. பாதுகாப்பு நோக்கில் காட்சிவில்லைகளைவிட படத்துணுக்குகளே சிறந்தவை. அத்துடன் இவற்றின் விலையும் காட்சி வில்லைகளைவிட 4 அல்லது 5 மடங்கு குறைவாகும்..

1.89 உண்மை உருவமைப்புகளும் மாதிரி உருவமைப்புகளும்Realia and artifacts

ஒலிப்பதிவுகள், ஒளிப்பதிவுகள், ஒலி ஒளிப்பதிவுகள் என்ற மூன்று வகைக்குள்ளும் வகைப்படுத்தமுடியாத நூலுருவற்ற தகவல் வளங்களில் ஒன்றே மாதிரி உருவமைப்புகள் ஆகும். உண்மையான உருவங்களை தகவல் அமைப்பில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாத சந்தர்ப்பங்களில் மாதிரி உருவமைப்புகள் சிறந்ததொரு தகவல் வளமாகக் கருதப்படுகின்றன.

1.891 கணினியை அடிப்படையாகக் கொண்ட வளங்கள்  Computer resources

•    சீடிரோம் ஜஊனு-சுழுஆஸ லேசர் கதிர்கள் மூலம் பெருமளவு தகவல்களைச் சேமிக்கக் கூடிய வகையில்  உருவாக்கப்படும் 43ஃ4' விட்டமுள்ள வட்டவடிவ பிளாஸ்ரிக் தட்டு சீடிரோம் எனப்படுகின்றது. வாசிக்க மட்டுமேயான நினைவகத்தைக் கொண்ட இறு வட்டு  Compact disk read only memory என இதற்கு பொருள் கொள்ள முடியும். இதன் சேமிப்புத் திறன் எளிமையான வார்த்தையில் கூறுவதாயின் ஒரு சீடிரோம் 3 இலட்சம் பக்கங்களைச் சேமிக்கும் திறன் கொண்டது. இந்த சீடிரோமைப் பயன்படுத்தி நூல்விபரப் பட்டியல்கள், செயற்திட்டங்கள், கணினி மென்பொருட்கள், உலகப் படங்கள் இசைத் தட்டுக்கள், கலைக்களஞ்சியங்கள், தரவுத்தளங்கள், கற்பித்தல் செயற்திட்டங்கள் வீடியோப் படங்கள் போன்றன உருவாக்கப்பட்டு வெளிவருகின்றன. இணையம் நூலகம் ஒன்றைவிட செயற்திறன் கூடியது போன்று சீடிரோம் ஒரு நூலை விடக் கூடுதல் திறனைக் கொண்டது.

•    இணையம் Inter connection network  என்ற ஆங்கிலப் பதத்தின் சுருக்கமான இன்டர்நெட் எனப்படும் இணையமானது ஒரு தகவல் தொடர்பு வலையமைப்பு ஆகும். இலத்திரனியல் தபால், இணையத் தளங்கள், இணைய வர்த்தகம் என்ற முப்பெரும் வசதிகளைக் கொண்டது இணையமாகும். இதிலுள்ள இணையத் தளங்கள் கிட்டத்தட்ட நூலகத்துக்குச் சமமானவை. இதில் ஒரு தனி நபரோ ,நிறுவனமோ தாம் விரும்பும் செய்திகளை வடிவமைத்து உலகம் முழுவதும் பாவனைக்கு விடலாம். எழுத்து மூலத் தகவல் மட்டுமன்றி புகைப்படங்கள், உருவங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோப் பதிவுகள் போன்றவையும், பத்திரிகையில் வெளிவரும் செய்திகள், அறிக்கைகள், ஒலிபரப்பு நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் இணையத்தில் பார்க்க முடியும்.


முடிவுரை
மக்களுக்காக மக்களால் மக்களைக் கொண்டு உருவாக்கப்படும் நிறுவனமே பொது நூலகமாகும்.  நவீன சமுதாயத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படும்  பொதுசன நூலகங்கள் சமூகத்தின் நாளாந்த செயற்பாடுகளில் மிக முக்கியத்துவம் வகிக்கின்ற ஒரு சமூக நிறுவனமாகும்.  சமூகத்தின் கலை, கலாசார நிலையங்களாகச் சேவையாற்றும் இந் நிறுவனங்கள் சமூக அங்கத்தவர்களை இன, வயது, மொழி, மத  வேறுபாடின்றி ஒன்றிணைக்கும் நிலையங்களாகக் காணப்படுகின்றன. இவை ஏனைய கல்விசார், விசேட நூலகங்கள் போன்று குறிப்பிட்ட வாசகர் பிரிவுக்குச் சேவை செய்வன அல்ல. சிறுவர், மாணவர், முதியவர், பெண்கள், மாற்றுவலுவுடையோர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர் போன்ற சமூகத்தின் அனைத்து மட்டத்தினருக்கும் சேவை செய்யவேண்டிய கடமைப்பாடு உடையது பொதுசன நூலகமாகும். எனவே பொது நூலகம் என்ற வகையில் இணுவில் அறிவாலயமும் தனது தகவல் வள சேகரிப்பில் சமூக உறுப்பினர்களின் பலதரப்பட்ட அறிவுச் தேவைகளையும் பூர்த்திசெய்யக்கூடிய அளவிற்கு தகவல் சாதனங்கள் இடம்பெறுமாறு கொள்கை வகுக்க வேண்டியது அவசியமாகும்.  இக் கொள்கை வகுப்பில் தகவல் சாதனங்களின் தரம், தொகை, வகை, வடிவம் என்பவற்றில்  கவனம் செலுத்துவதன் மூலம் பொதுசன நூலகத்தின் முக்கிய செயற்பாடுகளான வாசகருக்கான தகவல், கல்வி, பொழுதுபோக்கு, மீள் உருவாக்கம் போன்றவற்றை நிறைவு செய்ய முடியும்.

குறிப்புதவு நூல்கள்



  1. Krishankumar [1984]. Reference service. New Delhi:Vikas.-p98.
  2. Reitz, Joan.M .( 2006). Online Dictionary for Library and Information Science. reitzj@wcsu.edu . Accessed on 10-06-2007)
  3. Harrod,L.M. Harrod`s librarians` glossary of terms used in librarianship documentation and the book craft and reference book. Compiled by Ray Prytherch,6th ed..- London:Gower,1987.
  4. Cabeceiras,James(1991). The Multimedia Library: materials selection and use. 3rd ed. London:Academic Press. p.22-23



(Information Resources that could be provided by a Library. [Special sovenir of Inuvil Arivalayam: a public Library and a cultural museum. 20-03-2005.)

No comments:

Post a Comment